- எஸ். மனோரஞ்சன்
-எவ்வாறாயினும், எனது மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த பெரும் அவலங்களொடு ஒப்பிடுகையில் எனது நோயானது ஒரு வெறும் துரும்பென்றே சொல்ல வேண்டும். - -அன்ரன் பாலசிங்கம்-
ஒரு மாதத்திற்கு முன்னர்; பாலசிங்கம் கடும் சுகயீனமுற்றிருப்பதாக அறிந்து அவரைப் பார்க்கச் சென்ற தமிழ் நெற் ரிப்போட்டர் ஒருவரிடம் பாலசிங்கம் கூறியதாக அந்த இணையத்தளம் நவம்பர் 22ம் திகதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாலசிங்கத்திற்கு ஏற்பட்டிருந்த புற்று நோயைப்பற்றியும் அவ் இணையத்தளம் பினவருமாறு எழுதியிருந்தது.
இந்தமோசமான புற்றுநோய் மிக அரிதாகவே வரக்கூடியதென்றும், இந்தப் புற்றுநோயால் அவரது உடலின் மிக முக்கிய பாகங்களான ஈரல், நுரையீரல். வயிற்றுப் பகுதி மற்றும் எலும்பு மச்சைகள் என்பன பாதிக்கப் பட்டிருந்ததாகவுமே இச்செய்தியின் சாராம்சம் குறிப்பிட்டிருந்தது.
பாலசிங்கத்தின் இழப்பு வேறெல்லாரையும் விட வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கே பேரிழப்பாக தெரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்களும் அவரின் இழப்பால் சற்று கவலைப்பட்டுதான் ஆகவேண்டும். காரணம் புலிகளின் பிரதம பேச்சாளரும் மதியுரைஞருமாக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் அடிக்கடி வெளியே உதிர்த்துவிடும் கருத்துக்களால் புலிகளுக்கு ஏற்பட்ட அவமானங்களும் இடைஞ்சல்களும் பலரும் அறிந்ததே.
புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அவ்வாறான கருத்துக்களை அவர் ஏன் எதிர்க்கின்றார் என்று பலரும் தலையைச் சொறிந்து கொண்டனர். ஆனால், பாலசிங்கம் அவற்றை அறியாமல் செய்யவில்லை, அறிந்து வேண்டுமென்றேதான் செய்கின்றார் என்பதுதான் பாலசிங்கத்தை நன்கு அறிந்த பல முன்னாள் புலி ஆதரவாளர்களின் கருத்தாகும்.
தனது புற்றுநோய் பற்றியும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அவலம் பற்றியும் அவர் நோய்ப் படுக்கையில் இருந்து இறுதியாக வெளியிட்ட கருத்துப்பற்றி பிரான்சிலும் கனடாவிலும் வசிக்கும் இரு முன்னாள் தீவிர புலி ஆதரவாளர்கள் என்னிடம் பேசும்போது இப்படிக் கருத்துக்கூறினர்.
-பாலா அண்ணை அந்தக் கதைக்குள்ளையும் ஒரு முக்கிய விசயத்தை நாசூக்;காகச் சொல்ல வருகிறார். அதாவது தமிழ் மக்களைப் பிடித்து ஆட்டுவிக்கும் புலி அரசியல் என்னும் புற்றுநோயும் அதனால் தமிழர்கள் பட்டுவரும் அளவில்லா துன்பங்களுடனும் பார்க்கும்போது தனக்கு பிடித்திருக்கும் நோய் சர்வ சாதாரணமானது - என்பதைத்தான் பாலா அண்ணா கூற முற்படுகின்றார் என்றனர். அவ்விருவரினதம் கருத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
பாலசிங்கத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கு அவரின் மனவோட்டம் நன்றாகப் புரிந்திருந்தது. அதேபோலத்தான் பாலசிங்கத்துக்குத்தான் பிரபாகரனின் மனவோட்டமும் மிக நன்றாகப் புரிந்திருந்தது. பிரபாகரனின் சிந்தனைப் போக்கைப்பற்றி பாலசிங்கம் அடிக்கடி பல்வேறு விதமாக பல்வேறு தொனிகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.
பாலசிங்கத்தோடு நீண்டகாலத் தொடர்புகளைக் கொண்டிருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவருடன் பேசும்போது, இந்த முடியரசனிட்ட இருந்தும் வெடியரசனிட்ட இருந்தும் தமிழ் சனத்துக்கு இனி விமோசனமில்லை நானாவது கெதியா உவங்களிட்டையிருந்து கழரவேணும் என்றாராம் பாலசிங்கம்.
யார் பாலா அண்ணை முடியரசன்;? யார் வெடியரசன்? என்று மற்றவர் வினவ...
என்னடாப்பா முடியரசனைத் தெரியாதே. அதுதான் எங்கட கட்டைக் குத்தியன்;. வெடியரசன் தான் உந்த நாசமாய்ப்போவான் பொட்டன். அட.. தம்பி இவன் முடியரசனை திருத்தினாலும் திருத்தலாம்போல கிடக்கு. ஆனால் அந்த வெடியரசனோடயெல்லா ஒண்டும் செய்ய ஏலாமக் கிடக்கு. அவன் சுட்டுத்தள்ள நான் எல்லா உலகத்துக்க பதில் சொல்வேணும். இது இந்த முடியரசன் கட்டைக் குத்தியனுக்கும் இது விளங்குதில்லை. அவனுக்கு ஏதாவது சொல்லப்போனா...
ஒண்டுக்கும் யோசியாதையுங்கொ பாலா அண்ணை...எல்லாம் சரிவரும்.. எண்டுபோட்டு ஹீ..ஹீ..என்டு இளிக்கிறான் அந்த மூதேசி... நாய்... என்று பாலா அண்ணை அரை மணித்தியாலமாக தொலைபேசியிலை பொரிந்து தள்ளினராம்.
அன்று பாலா அண்ணை தொலைபேசியில கதைச்சதை அப்பிடியே ரெக்கோட்; பண்ணி வன்னிக்கு அனுப்பினால் அதோட பாலா அண்ணையிட கதை சரியாப் போயிருக்கும். என்றார், அந்த முன்னாள் புலி ஆதரவாளர் என்னிடம். பாலா அண்ணையொடு மிக நெருக்கமாகப் பழகியவர்கள் பலரிடமும் கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை அவர்கள் இரகசியமாக வைத்திருந்த நல்ல காரியத்தால்தான், பாலா அண்ணை இவ்வளவு காலமும் உயிரோடு இருந்தார் என்று சொன்னாலும் தப்பில்லைதான்.
மற்றொரு சம்பவம்
1990ல் இருந்து 1994வரை யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு பிரேமதாசா அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தியிருந்தது. ஆனாலும் பல பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவட்டு அங்கு சென்றுவந்தனர். அவ்வாறு சென்ற ஒரு இந்திய தமிழ் பத்திரிகையாளருக்கும் பாலசிங்கத்திற்கும் நடந்த உரையாடல் மிக சுவாரசியமானது.
பாலசிங்கம் இந்தியாவில் இருந்த காலத்திலேயே அப்பத்திரிகையாளரை பாலசிங்கத்திற்கு நன்கு அறிமுகமாதலால் அப்பத்திரிகையாளருக்கு பாலசிங்கத்தின் வீட்டில் இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. அங்கும் வழமைபோல் பாலசிங்கம் தனது பிளாக் அன்ட் வைற் விஸ்கியை உடைத்துப் பரிமாறினார். பாலா அண்ணருக்கு ஓரிரு சுற்று விஸ்கி தாராளமாக உள்ளே இறங்கியதும் பத்திரிகையாளர்; பாலசிங்கத்திடம் இப்படிக் கேட்டார்.
ஆமா இப்பிடியே தொடர்ந்து யுத்தத்தை புடிச்சிக்கிட்டிருந்து ஒங்க தலைவர்; என்னதான் பண்ணப்போறாரு..மக்கள்தானே அதிகமா அழிஞ்சு போறாங்க...எனக்குன்னா ஓங்க தலைவரு என்னா சிந்திக்கிறாரன்னெ புரியமாட்டேங்குது.. என்றார்.
உடனே பாலா அண்ணர்; இடை மறித்து அடேயப்பா...அவர் மற்றவைக்குத்தான் தலைவர் எனக்கொண்டும் தலைவரில்லை நானில்லாட்டி இம்மட்டுக்கு அவர் எப்பவோ சரி. அதைவிடு... என்ன சொன்னீர் உமக்கு அவர் என்ன யோசிக்கிறார் என்றே விளங்க இல்லையோ..? அடே தம்பி... அவனோட 15 வருசத்துக்கு; மேல ஒண்டா இருக்கிற எனக்கே அவன் எந்த நேரம் என்ன செய்வான் எண்டு விளங்குதில்லை. உனக்கென்ணென்டு விளங்கிறது? என்றாராம்.
அதில்லீங்க மிஸ்டர்; பாலா... இந்தியாவையும் எதிர்த்துக்கிட்டு... உலக நாடுகளிட்டையும் கெட்ட பேர்; எடுத்திக்கிட:டு எப்பிடி ஒரு போராட்டம் வெற்றி பெறப்போவுது. யாராவது ஒருத்தரோட நட்பா இருக்க வேணாமா? என்றார் பத்திரிகையாளர்.
அட நீர் ஒண்டப்பா... காட்ட மிருகங்களை பற்றி படிச்சிருக்கிறீரா? எல்லா மிருகமும் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்துதான் வாழும். இந்தப் புலி இருக்குதே அது மட்டும் எப்பவும் தனியாத்தான் வாழ்க்கை நடத்தும். அதவேறந்த மிருகத்தையும் நம்பாது. அதை நம்பி வேறெந்த மிருகமும் கிட்டவும் வராது. அதமாதிரித்தான் இவங்களும்...என்றார் பாலசிங்கம்.
அப்பிடீன்னா இவங்கள நம்பி யார்தான் உதவி பண்ணப் போறாங்க. இந்தப் போராட்டம் என்னாகிறது? என்ற கேட்டார் பத்திரிகையாளர்.
இவங்களை நானே நம்பிறதில்லை...வேற யார் நம்புவான் சொல்லு பாப்பம். அட தம்பி நாங்கள் பிரேமதாசாவோட கதைச்சுக் கொண்டிருக்கிறம். அவரோட போய் கதைக்கச் சொன்னவனும் இவன்தான்.ஆனால் நாங்கள் முக்கியமான 6,7 பேர் அங்க கொழும்பில நிக்கையிக்க இவன் சண்டையை துவக்கி விட்டிட்டான். அண்டைக்கு அமைச்சர் ஹமீட் இல்லாட்டி நாங்கள் துலைஞ்சிருப்பம். இவனை நம்பேலாது தம்பி... என்று பாலசிங்கம் சொல்வதை பரிதாபமாக கேட்டவிட்டு அந்த பத்திரிகையாளர் திரும்பி வந்தார்.
இதெல்லாம் எதைக் காட்டுகின்றது? பாலசிங்கம் ஒன்றும் விளங்காமல் புலிகளோடும் பிரபாகரனோடும் இருந்தவரல்ல. நன்றாக எல்லாவற்றையம் தெரிந்து கொண்டு புலிகளின் சகல நாசகார அரசியலுக்கும் துணைபோனதுடன் அந்த நாசகார அரசியலை நியாயப்படுத்தி வந்தவர் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். ஆகவே தமிழ் சமுகத்தைப் பீடித்திருக்கும் புலி அரசியல் என்னும் சமூகப் புற்றுநோயினால் தமிழ் மக்கள் படும் அவஸ்தைக்கு அவரும் பிரதான காரணகர்த்தாவாகும்.
பாலசிங்கம் பற்றி பழைய கதையொன்று
பாலா அண்ணர் என்கின்ற பாலசிங்கம் மதியுரைஞர் என்ற இந்த நிலைக்கு உயருவதற்குள் சந்தித்த சோதனைகள் பல. அவர் ஒரு சிறுநீரகத்தை இழந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் யாவரும் அறிந்த சோதனை@ அறியாத சோதனைகள் பல. அவற்றில் சில மிகச் சுவாரசியமானவை.
1985ம் ஆண்டு சென்னை வடபழனியில் நுNடுகு என்று அழைக்கப்படும் ஈழதேசிய விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் திம்புப் பேச்சு வார்த்தைகளுக்கு போவதற்கு சில நாட்களுக்கு முன் இது நடந்தது. ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களையும் இலங்கை அரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர இந்தியா முயன்று, இறுதியில் திம்பு மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு போவதா விடுவதா என்பதில் ஆயுதமேந்திய தலைவர்களுக்குள் இழுபறி நடந்தது.
இச் சம்பவம் நடந்த அன்று திம்பு மாநாட்டுக்கு போவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு நான்கு இயக்க தலைவர்களும் அங்கு கூட சம்மதித்து இருந்தனர். சிறீ சபாரத்தினம், பாலகுமார், பத்மநாபா ஆகிய மூவரும் தத்தமது இயக்கங்களின் முடிவுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் திம்பு பேச்சுக்கு போவது ~சரி என்ற முடிவுடன் வந்திருந்தனர். அங்கிள் பாலாவும் தம்பி பிரபாகரனும் சற்று நேரம் தாமதித்தே அங்கு வந்தனர்.
எல்லோரும் அவரின் முடிவை சொல்லும்படி கேட்டனர். தம்பி பிரபாகரன் கூறியது இதுதான் நான் இப்பொழுதுதான் எனது பிள்ளையின் தலையில் (சார்ள்ஸ் அன்ரனி) பிஸ்டலை வைத்து சத்தியம் பண்ணிவிட்டு வருகிறேன். எனக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை. நான் இந்த மாநாட்டுக்கு வரப்போவது இல்லை. என்ற முடிவை சொன்னார். உடனே சிறீ சபாரத்தினமும் தம்பி போகா விட்டால் நானும் போகப்போவது இல்லை என்றார். இதைச் சொன்னதும் சகலருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
அடுத்ததாக பத்மநாபாவும், தம்பியும் சிறியும் போகாவிட்டால் நானும் போகவில்லை என்றவுடன் பாலகுமார் சற்று கொதித்துப் போனார். அவர் சிறீ சபாரத்தினத்தையும் பத்மநாபாவையும் நோக்கி பொறுப்பு இல்லாமல் பேசாதீர்கள். நீங்கள் இருவரும் இவ்வளவு நேரமும் போவதாகவே தீர்மானித்தீர்கள், இப்போது உங்கள் நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள். போகாவிட்டால் வரும் விளைவு உங்களுக்கு தெரியுமா? என்று இரைய ஆரம்பித்தார்.
தொடர்ந்து சகலரும் தம்பி பிரபாகரனுக்கு நிலைமையை விளக்கி, அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். இப்போது பாலா அண்ணர் பேசத் தொடங்கினார். தம்பி, இவையள் எல்லாரும் சொல்லுறதைப் பார்த்தால் நாங்கள் போகாமல் விடுவது சரியில்லை. நாங்கள் எல்லாருமாக திம்புவுக்கு போய் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துவிட்டு வருவோம் என மதியுரை வழங்க முயற்சித்தார்.
உடனே வெகுண்டெழுந்த தம்பி பாலா அண்ணை தயவு செய்து வாயை மூடிக்கொண்டு இருங்N;கா என்ர தீர்மானத்தை சொல்லத்தான் உங்களை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். இங்கே வந்து நீங்கள் நினைத்ததை பேச முடியாது. உங்களைப்போல எத்தனை பேரையும் நான் விலைக்கு வாங்குவேன். என்று கண்களில் கோபம் கொப்பளிக்க கர்ச்சித்தார். தம்பியின் கை அவரை அறியாமலே இடுப்பை நோக்கி போய்வந்ததை அவதானித்த பாலசிங்கம் ஒருமுறை வெலவெலத்துப் போனாராம்.
அசடு வழிய பத்மநாபாவையும் சிறீ சபாரட்ணத்தையும் பாலகுமாரையும் பார்த்த பாலா அண்ணர் நாய்க்குட்டிபோல் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார். மறுநாள் பாலா அண்ணரைக் கதைத்து சமாதானப் படுத்தி மீண்டும் சகலரும் ஒற்றுமையாக திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் விடயத்தை மேற்கொள்வதற்காக பத்மநாபா பாலசிங்கத்தைச் சந்திக்க சென்றார். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சென்னையில் ஒரு தொங்கலிலிருந்த கோடாம்பாக்கத்திலிருந்து மறு தொங்கலிலிருந்த அடையாறை நோக்கி தன் சக தோழர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் போய்ச் சேர்ந்தார் பத்மநாபா.
பாலா அண்ணரும் ஆன்டி அடேலும் பத்மநாபாவை இன்முகத்தோடு வரவேற்றனர். அங்கிள் பாலா வழமைபோல் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க தனக்கு பிடித்தமான கறுப்பு வெள்ளை நாய்க்குட்டி போட்ட விஸ்கியை சுவைத்த வண்ணம் வாரும் நாபா உம்மட்ட கதைக்க வேண்டும் எண்டுதான் இருக்கிறன் என்று பீடிகையோடு உமக்கும் ஒரு பியர் தரட்டே என்றார். புத்மநாபா அதை மறுத்ததுடன் சொல்லுங்கோ அண்ணை என்று பாலசிங்கத்தின் கதையை கேட்க ஆரம்பித்தார்.
எடுத்த எடுப்பிலெயே பெரும் தொனியில் ஆரம்பித்த பாலா அண்ணர் மூதேசிக்குத் தமிழும் ஒழுங்காகத் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, இங்கிலிஸ் தெரிஞ்சவனையும் பக்கத்தில வைச்சிருக்கத் தெரியாது, நாலு அரசியல் விசயம் தெரியாது... விசரன் எதுக்கு எடுத்தாலும் பிஸ்டலை தூக்கிறது. இவனோட எப்பிடித் தம்பி எப்படிக் காலந்தள்ளுறது? என்று வானத்திற்கும் ப+மிக்கும் குதிக்கத் தொடங்கினார் பாலா அண்ணை.
அனரறி அடேலும் பத்மநாபாவும் எவ்வளவோ சொல்லியும் பாலா அண்ணரை கட்டுப்படுத்த முடியவில்லை. விடு என்னை! இந்த மோடனையும் அவனுடைய இயக்கத்தையும் துலைத்துக் கட்டிட்டு வாறன் என்ற கணக்கில பாலா அண்ணர் உருத்ர தாண்டவத்தில் நின்றாராம். பின்னர் இரண்டு கிளாஸ் விஸ்கியை தொண்டைக்குள் வார்த்து வாய் நாற்றத்தை பத்மநாபாவின் முகத்துக்கு நேரே ஊதிய பின்னர்தான் அங்கிள் பாலா சாந்தி அடைந்தார், என்ற உண்மை முதலில் தம்பி பிரபாகரனுக்கு உடனே தெரியவில்லையாம். ஆனால் அங்கு பாலா அண்ணருக்கும் அடேல் அனரிக்கும் தெரியாமல் அவர் வீட்டில் உளவுக்காக விடப்படடிருந்த சிறுவன் மூலமாகவும் அவரது வீட்டில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒட்டுக் கேட்கும்; கருவிகள் மூலமும் தம்பிக்கு விபரம் தெரிந்துபோய் விட்டதாம் என்று பின்னர்தான் பாலா அண்ணருக்கே தெரியுமாம்.
இவற்றிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்ன? மற்றவர்களுக்கு காட்டுவதற்கு பாலா அண்ணை என்ன துள்ளுத் துள்ளினாலும் பிரபாகரன் என்னும் கொலைகாரப் பேர்வழிக்கு முன்னால் அவர்; நக்கிப் பிழைக்கும் நாய்தான். தனது பதவி என்னும் எலும்புத் துண்டுக்காக எல்லாம் தெரிந்துகொண்டும்; ஒரு கொலைகாரக் கும்பலோடு கூடிவாழந்து, தமிழ் சமூகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச நல்ல அம்சங்களையும் கருவறுத்த குற்றவாளிதான் பாலசிங்கம். அதற்குமேல் வேறொன்றுமில்லை.
பிரபாகரனின் தாளத்திற்கே ஆடிய பாலசிங்கம்
இந்த வருடத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவாhத்தைக்கு சென்ற பாலசிங்கம் இப்படிக் கூறினார். றுந றடைட மடைட. வுhயவ ளை ழரச தழடி... புலிகள் அமைப்புக்குள் உள்ள மிதவாதியாக பாலசிங்கத்தைக் கருதிய நோர்வே உட்பட பலருக்கும்கூட இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கலாம். பாலசிங்கத்தின் இந்த தெருச்சண்டித்தனப் பேச்சும் குணமும்தான் பாலசிங்கத்தின் உண்மையான முகம் என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் அவரை இவ்வளவு காலமும் பிரபாகரனோடும் அவரின் புலிக்குணத்தோடும் சேர்ந்திருக்கவும் வைத்தது. ஒருவரை சீண்டிவிட்டால்தான் அவரின் உண்மையான குணம் வெளிப்படும் என்பார்களே அதுபோலத்தான். பாலசிங்கத்தை சற்று சீண்டி விட்டால் அவர் தன் சுய உருவத்தைக் காட்டி நிற்பார்.
பாலசிங்கத்தின் மரணம் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு பாரிய இழப்பு என்று நோர்வேயும் ஏனைய பலரும் கூறியிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பாலசிங்கம் உண்மையிலேயே புலிகள் அமைப்புக்குள்ளிருந்த மென்போக்காளர் அல்லது மிதவாதிதானா? அவர் உயிருடன் இருந்திருந்தால் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் அர்த்தமுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவைத்திருக்க முடிந்திருக்குமா? என்னும் கேள்விகளெல்லாம் ஒன்றும் விடைகாணப்பட முடியாதவைகள் அல்ல.
கடந்த காலங்களில் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் மேற்கொண்ட எந்தவொரு மோசமானதும் தவறானதுமான செய்கையையும் பாலசிங்கத்தால் மதியுரைஞர் என்ற வகையில் நிறுத்திவிடவோ தடுத்துவிடவோ முடியவில்லை. காரணம் பிரபாகரன் பாலசிங்கத்தை கேட்டு எதுவும் செய்வதுமில்லை அவருக்கு சொல்லிவிட்டு எதுவும் செய்வதுமில்லை. செய்து முடித்ததன் பின்னர் அதை நியாயப் படுத்துவதும், அதற்கு அர்த்தம் கற்பிப்பதும், அதற்கு வெள்ளைச் சாயம் பூசுவதும் மட்டும்தான் பால சிங்கத்தின் மதியுரைஞர் பணி. அதற்கு மேல் வேறொன்றுமில்லை.
ஆகவே பாலசிங்கத்தின் மரணம் என்பது நோர்வேயைப் பொறுத்தவரையும், தமிழ் மக்களை புலிகளின் கைகளில் காவுகொடுத்து பிரச்சினையைத் தீர்;க்க வகை செய்பவர்களுக்கும் பேரிழப்பாகத் தெரியலாம். ஆனால் தமிழரின் விமோசனத்திற்கான பாதையில் புலிகளும் அவர்களின் அரசியல் ஆதிக்கமும் தோற்கடிக்கபடும் அவசியத்துடன் நோக்கும்போது, பாலசிங்கத்தின் மரணம் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமே.
தனது பதவிக்காகவும் புகழுக்காகவுமே பாலசிங்கம் சகலதையும் செய்தார். எந்தவொரு கட்டத்திலும் பிரபாகரனையோ புலிகளின் அரசியலையோ விமர்சிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவும் இல்லை அதற்கான முதுகெலும்பும் அவருக்கு இருந்ததில்லை. சாதாரண தமிழில் சொன்னால் பாலசிங்கம் ஒரு நசிஞ்ச கள்ளன். பிரபாகரனின் தாளத்திற்கு ஆடி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டதே அவரது 30 வருட தமிழ் அரசியல் பணி. மதியுரைஞரின் விதி தமிழ் மக்களுக்கு விமோசனமா அல்லது சர்வநாசமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும.
பாலசிங்கம் எப்போதுமே பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் மட்டும்தான் இருந்தாரா? அல்லது அவரை ஆட்டுவித்த வேறு சில சக்திகள் இருந்தனவா? அவர்களின் தேவைகளுக்கேற்றபடியும் பாலசிங்கம் ஆடினாரா. புலிகள் இயக்கத்தை ஆட்டுவிக்க முயற்சித்தாரா? அதனால்தான் பிரபாகரனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தாரா? போன்ற கேள்விகளும் கடந்த காலத்தில் அவ்வப்போது எழுப்பப்பட்டன. இதுதொடர்பான விடயங்களை மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.