ஆனந்தசங்கரி மீது சீறிப்பாயும் சிவசேகரப் புலி
- குளக்கோட்டன்
ஐ.தே.கட்சியைச் சேர்ந்த வர்த்தகரான எஸ்.பி. சாமி என்பவரால் வெளியிடப்படும் ~தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் ~மறுபக்கம் என்னும் பகுதியில் கோகர்ணன் என்னும் பெயரில் பேராசிரியர் சி. சிவசேகரம் பத்தி ஒன்றை வாரவாரம் எழுதிவருகின்றார் (திருகோணமலைக்கு கோகர்ணம் என்ற பெயரும் முன்னைய காலத்தில் வழங்கப்பட்டதால் அவ்விடத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவசேகரம் அப்பெயரை புனைபெயராக கொண்டுள்ளார்)
தன்னையொரு து}ய்மையான மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்ளும் சிவசேகரம் இப்பத்தியில் எழுதிவரும் விடயங்களோ மார்க்சியக் கண்ணோட்டத்திற்கு முற்றிலும் நேர் எதிரானவையாகும். அவரது எழுத்தின் சாரம்சம் புலிப் பாசிசத்துக்கு ஆதரவு, தமிழ் ஜனநாயக சக்திகள் மீது அவது}று, இடதுசாரிக் கட்சிகள் மீது வசைபாடுதல், மனித உரிமை அமைப்புக்கள் மீது கண்டனம் என்பவையாகும். குறிப்பாக ருவுர்சு(து) என்னும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பு மீது காரசாரமான கண்டனங்களை கோகர்ணன் என்னும் பெயரில் தெரிவித்து வருகின்றார். சிவசேகரம் பல ஆண்டுகளாக பல்கலைக்கழக பேராசிரியராகவும் இடதுசாரி புத்திஜீவியாகவும் இருந்தபோதிலும் சாதாரண மக்களின் மனித உரிமைகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நிலையில், அவரிடம் கற்ற மாணவர்கள் சிலர் உட்பட இந்த மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பிற்காக காத்திரமாக செயற்படுவது அவருக்குப் பொறுக்க முடியாததாக இருக்கின்றது.
சிவசேகரத்தின் எழுத்துக்கள் மார்க்சிய அடிப்படையிலான ஆக்கப10ர்வமான விஞ்ஞானப10ர்வமான தர்க்க hPதியான விமர்சனங்கள் அல்ல. எவராவது மீது அல்லது ஏதாவது ஒன்றின் மீது வசைபாடுவது அவரது எழுத்தின் பாணியாகும். அந்த வகையில் அக்டோபர் 01ம் திகதியின் தினக்குரல் இதழின் மறுபக்கம் பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
ஆனந்தசங்கரிக்கு ஐ.நாவின் யுனெஸ்கோ விருதி வழங்கி கௌரவித்ததை பொறுக்கமாட்டாமல் கரித்துக்கொட்டியவர்கள் புலிகள் மட்டுமல்ல சிவசேகரமும் கூட என்பதை தனது து}ற்றலில் வெளிக்காட்டியுள்ளார்.
ஆனந்தசங்கரி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இலங்கை இந்திய அரசுகளின் எடுபிடி என்றும் சாரப்பட சிவசேகரம் தனது அவது}றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆனந்தசங்கரி தமிழ்ப் பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து அரசியல் செய்ய முடியாமல் பலவந்தமாக தடுத்தவர்கள் யாரென்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். ஆனந்தசங்கரி மட்டுமல்ல வேறெந்த தமிழ்க் கட்சியோ இடதுசாரிக் கட்சியோ ஏன் சிவசேகரத்தின் புதிய ஜனநாயகக் கட்சியோ புலிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் வடக்கு கிழக்கில் சுதந்திரமாகச் சென்று அரசியல் செய்ய முடியுமா என்பதை சிவசேகரம் ஒரு முறை கூறட்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் ஆனந்தசங்கரியின் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காமலும் கள்ளவோட்டு போட்டு தமது பினாமிகளான தமிழ் கூட்டமைப்பினரை வெற்றிபெற வைத்ததும் புலிப் பாசிசவாதிகளின் அடாவடித்தனம் என்பதை சாதராண தமிழ் மக்கள் முதல் ஐரோப்பிய ய10னியன் தேர்தல் கண்காணிப்புக் குழுவரை அறிந்திருக்க, இந்த மெத்தப்படித்த பேராசிரியர் அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. து}ங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் து}ங்குபவர்கள்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதற்கு சிவசேகரம் ஒரு உதாரணம்.
ஒரு மனிதனின் நடத்தைதான் அவனது தகுதி நிலையைத் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் ஆனந்தசங்கரியின் வாழ்க்கையில் சில எதிர்மறை அம்சங்கள் இருப்பினும் அவரது வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்கு சேவையாற்றுவதிலும் தமிழ் மக்கள் வாழ்வில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் செலவிட்டுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியில் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த ஆனந்தசங்கரி கிளிநொச்சி மாவட்டத்தின் மிகபின்தங்கிய ப10நகரிப் பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் முழுநேர அரசியலுக்காக ஆசிரியர் தொழிலைத் துறந்து கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்டார். மிகவும் கீழ் மட்ட நிலையில் வாழ்ந்த ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் பகுதியில் கரைச்சி கிராமசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகவும் வந்து அப்பிரதேச மக்களின் தேவைகளை முடியுமானவைர நிறைபேற்றினார். கிளிநொச்சியில் முதல் முதலாக பட்டினசபை அமைப்க்கப்பட்டபோது அதன் தலைவராகவும் சேவைபுரிந்தார்.
1966 ஜனவரி 8ம் திகதி அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி கூட்டரசாங்கத்துக்கு எதிராக இனவாத அடிப்படையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் சமசமாஜக் கட்சியும் பங்குபற்றியதால் அக்கட்சியைவிட்டு விலகி தமிழ் காங்கிரசில் இணைந்து 1970ல் பாராளுமன்ற உறுப்பினரானதுடன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராகி இன்று அதன் தலைவராகவும் இருக்கின்றார்.
பிற்போக்கு தழிழ் தேசியவாத அரசியல் அணியில் அவர் இணைந்தபின் அவரால் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது உண்மையே. பிற்போக்கு தமிழ் தலைமையின் மலட்டு வாய்ச்சவடால் அரசியல் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தராதது மட்டுமின்றி அவர்களை இன்றைய அவல நிலைக்கு இட்டுவந்துள்ளதையும் ஆனந்தசங்கரி இன்று நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தகாலத்தில் சாதித்த முக்கியமான ஒரு சாதனை கிளிநொச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையான தனிமாவட்ட கோரிக்கைக்கு நடைமுறை வடிவம் கொடுக்கவைத்ததே. (தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தமிழரசுக்கட்சியின் தலைமை கிளிநொச்சி மக்களின் நிர்வாக பரவலாக்கலான தனிமாவட்டக் கோரிக்கையை தீவிரமாக எதிர்த்தது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்)
ஆனால் ஆனந்தசங்கரி இன்று தன் அரசியல் வாழ்வின் கடைசி காலகட்டத்திலே இதுவரை தழிழ் மக்களுக்கு ஆற்றாத பெரும்பணியை ஆற்றிவருகின்றார் என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் வாழ்வை இன்று சகல வழிகளிலும் அழித்து நாசமாக்கிவருகின்ற புலி மாபியா பாசிசத்தை தயவு தாட்சணியம் இன்றி எதிர்ப்பதில் ஆனந்தசங்கரி இன்று ஒரு முன்னணிப் போராளியாக திகழ்கின்றார். இதற்காக அவர் பாராளுமன்ற உறுப்பினராக வாய்ப்பை இழந்தது மட்டுமின்றி எந்த நேரமும் பெரும் உயிராபத்தையும் புலிகளால் எதிர்நோக்கிவருகின்றார். இதற்காக ஆனந்தசங்கரிக்கு ஒரு யுனெஸ்கோ விருதல்ல ஓராயிரம் விருதுகளைக்கூட வழங்கலாம்.
ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போல ஆனந்தசங்கரியும் தனது பதவியையும் உயிரையும் பாதுகாப்பதற்காக புலிகளின் காலடியில் மண்டியிருக்கலாம் ஆனால் தன்மானமும் மனச்சாட்சியும் உள்ள ஒரு மனிதர் என்ற வiயில் அவர் அவ்வாறு செய்யவில்லை. புலிகளின் கொடூரச் செயல்களை எதிhக்கும் தெளிவும் துணிவும் அவருக்கு கைவர பெற்றமைக்குக் காரணம் அவரது ஆரம்பகாலத்தில் அத்திவாரமாக அமைந்த இடதுசாரி அரசியலே இதையாரும் மறுத்துவிடமுடியாது.அதேநேரத்தில் அவரை புழுதிவாரித் து}ற்றும் சிவசேகரம் மக்களுக்காக எதனைச் செய்தார் என்பதற்கு உருப்படியான உதாரணம் எதுவுமே இல்லை.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1970களில் சமையல் அறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது அதை முறியடிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாண்வெட்டிக்கொடுத்த போலி தொழிலாளர் நண்பன், நாட்டில் தமிழ் மக்கள் மீது இன ஒடுக்குமுறை தீவிரமடைந்த போது இங்கிலாந்து சென்று வருடக்கணக்கில் தங்கியிருந்த வேஷதார தமிழ்த்தேசியவாதி, கொம்ய10னிஸ் கட்சியிலிருந்தபோது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி 1977 பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேர்தல் வேலை செய்த கொள்கைப்பற்றாளன், யாழ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் தொடங்குவதை எதிர்த்த (காரணம் எதுவாக இருப்பினும்) பிரதேசவாதி, படுபிற்போக்கு அரசியல்வாதி குமார்பொன்னம்பலத்துக்கு அஞ்சலிக்கட்டுரை தீட்டிய தர்க்க சமரசவாதி என சிவசேகரத்தின் அரசியல் செயற்பாடுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.
ஆனந்தசங்கரியின் அரசியல் பணிகளில் பத்து வீதம்கூடத் தேறாத, மக்கள் மத்தியில் ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப்போடாத சிவசேகரம் போன்றவர்கள் சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பதுபோல் குரைப்பது புதுமையானதோ முதற்தடவையன்றோ அல்ல. எல்லா ஏட்டுச் சுரைக்காய்களும் கறிக்குதவாதவைதான்.
(தமிழரசுக் கட்சியில் தனது அரசியலை ஆரம்பித்து, கொம்ய10னிஸ் கட்சியில் புகுந்து அதை சீர்குலைத்துவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக ~நிர்தன பந்திய பக்ஷய கட்சி என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் புதிய ஜனநாயக் கடசியில் இணைந்து அக் கட்சியையும் இழுத்துக்கொண்டு புலிகளின் கூடாரத்தில் நுழைந்த சிவசேகரத்தின் கதையை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)
No comments:
Post a Comment