காந்தரூபன் அறிவுச்சோலை மீது கிபீர் விமானக் குண்டுகள் விழாததையிட்டு தமிழ் நெட் இணையத்தளம் தனது செய்தி குறிப்பொன்றில் தெரிவித்திருப்பது அதையிட்டு கவலையடைந்திருப்பதை புலப்படுத்துகிறது. கிபீர் விமானக் குண்டுகள் காந்தரூபன் அறிவுச்சோலைக்கு அருகாமையில் விழுந்ததாகவும் ஒரு சில பொதுமக்கள் குழந்தைகள் காயமடைந்ததாகவும் அது தெரிவித்திருந்தது. வண்ணங்களில் பலநு}ற்றுக்கணக்கான குழந்தைகளின் படங்களை பிரசுரிப்பதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது போல் அங்கலாய்க்கிறது.
வன்னிபுலத்தில் விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்ட புலிகளால் தமது படையணிகளுக்கென பலாத்காரமாக கொண்டுவரப்பட்ட பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதை வண்ணங்களில் காட்டி விற்று புலிகளின் கொலை மூலதனத்திற்கு உலகளாவியளவில் உபரி தேடிக்கொடுத்த வர்கள் ,காந்தரூபன் அறிவுச்சோலை குழந்தைகள் சாகவில்லையென இந்த சாவு வியாபாரி கள் அங்கலாய்க்கிறார்கள். இனிமேல் புலிகள் குண்டு வீச்சுக்களில் படுகொலை நிகழுமாறு ஆபத்தான இடங்களில் பிள்ளைகளை இருத்தலாம். பிணக்காட்டு ராசா பிரபாகரனும், போடுற ராசா பொட்டம்மானும் திட்டமிடலாம்.
ஜெனீவாவில் வடக்;கு கிழக்கில் நிகழ்ந்த படுகொலைகளை புலிகள் பட்டியலிடலாம். பெரும்பாலான படுகொலைகள் புலிகளாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எனவே இந்தப் படுகொலைகளும் புலிகளின் பட்டியலில் பிரச்சார நோக்கத்திற்காகவும், கப்ப வரி வசு10லிப் பிற்காகவும் இடம்பெறலாம். தற்போது நடைபெறும் படுகொலைகள் பல எல்லாளன் படையினால் உரிமை கோரப்பட்டும் உள்ளன. மட்டக்களப்பு பகுதியில் பரவலாக கொள்ளைச் சம்பவங்கள் நிகழுகின்றன. இன்று செல்வநாயகபுரத்தில் உள்ள வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை பொலிசாருக்கு அடையாளம் காட்டியதற்காக குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவங்களில் புலிகளே பிரதானமாக சம்பந்தப்பட்டிருப்பதாக அரசல் புரசலாக சங்கதிகள் கசியத் தொடங்கியுள்ளன.
புலிகளின் நிதர்சனம் ஒலி, ஒளிபரப்பு கோபுரம் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்தது தொடர்பாக புலிகள் விசனமடைந்துள்ளனர்.அது ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலென கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக்கூடிய பெரிய பகிடியை புலிகள் விட்டுள்ளார்கள். ஊடக சுதந்திரம் என்பது என்னவென்றே தெரியாத ஊடக கைநாட்டுக்காரர்கள் இவ்வாறு சொல்வதையிட்டு தமிழ் மக்கள் சிரிப்பதா அழுவதா என்ற நிலையில் இருக்கிறார்கள்.
நிதர்சனம் யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் பொருட்கள் போனால் தாக்குதல் நடத்துவோம், மக்கள் பிரயாணம் செய்தால் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல்களை விடுவதற்கும் யாழ்ப்பாணத்தில் கூட்டுறவு சங்க கடைகள் கொள்ளையடிக்கப்பட்டபோது முதலாவது கூட்டுறவுச் சங்கம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது இரண்டாவது சங்கம் கொள்ளையடிக்கப்பட்டது என்று மனமகிழ் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு திரித்தும், உருட்டியும், புரட்டியும், பொய் புரளிகளை அவிழ்த்து விடுவதற்குமே பயன்பட்டு வந்தன. வன்னி மக்களை உலகம் தெரியாதவர்களாக பாமரர்களாக வாழ வைப்பதற்குமே அது எப்போதும் சேவகம் செய்தது.
பாடசாலை மாணவர்களின் இறப்பையிட்டு குது}கல பிரச்சாரம் செய்வதும், பாடசாலைகளுக்கு மாணவர்களை செல்லாமல் தடுப்பதற்கும் புலிகளின் ஜனநாயக விரோதப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கும் தற்கொலை குண்டு பயங்கரவாதத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும் ஏற்றிப் போற்றுவதற்கும் பெரும் பிரச்சார பங்களிப்புச் செய்து வந்தது. இப்போது அந்தப் பங்களிப்புக்களுக்கு தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளதென்று பிணக்காட்டு ராசாவின் திருக்கூட்டத்தார் அங்கலாய்க்கிறார்கள்.
இதற்கிடையே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது பற்றி இப்போது இவர்கள் கூக்குரலிடுகிறார்கள். 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பின்னர் அதனடிப்படையில் வடக்கு கிழக்கை இணைத்து அதற்காக தம்மை அர்ப்பணித்த வடக்கு கிழக்கின் ஜனநாயக வழிக்கு வந்த கட்சிகளை சேர்ந்தோரை கொன்றொழித்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சகல பெறுபேறுகளையும் நாசமாக்குங்கள், என்று பிரேமதாசாவின் காலடியில் மண்டியிட்டு நின்ற புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிதாமகர் ராஜீவ்காந்தி அவர்களை தற்கொலை குண்டுதாரி மூலம் படுகொலை செய்த புலிகள் இப்போது வடக்கு கிழக்கு பிரிவு தொடர்பாக பாசாங்கு பண்ணுகிறார்கள்.
வடக்கு கிழக்கு பிரிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான தார்மீக தகுதி மாற்று தமிழ் கட்சிகளுக்குத்தான் உண்டு. புலிகள் உண்மையில் கடந்த கால் நு}ற்றாண்டுகளில் தமிழ் மக்கள் பெற்றிருக்கக் கூடிய சகல பலாபலன்களையும் நாசம் செய்திருக்கிறார்கள். வாகரையில் பல்லாயிரம் மக்கள் மரங்களின் கீழ் வாழும் நிலையையும் யாழ் குடாநாட்டின் மக்கள் அனுபவிக்கும் பொருளாதார கஷ்டங்களுக்கும் அவர்களே வழிவகுத்தார்கள். ஹபரணையில் நிராயுதபாணிகளாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கடற்படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதன் மூலம் பல தெற்கின் ஏழைக்குடும்பங்களின் வீடுகளை சோகத்தில் மூழ்கடித்திருக்கிறார்கள்.
சிங்கள மக்களை ஆத்திரப்படுத்தி இனவன்முறையென்ற நெருப்பில் தமிழ் மக்களை பலியிடுவதற்கான காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஹபரணை தாக்குதல் மூலமும் காலி துறைமுகத் தாக்குதல் மூலமும் தாம் வீராதி வீரர்கள் சு10ராதி சு10ரர்கள் என்ற மிதப்பில் புலிகள் இருக்கலாம். பாமரத் தமிழர்களும் அந்த மிதப்பில் இருக்கலாம். இதன் விபாPத விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பது பகுத்தறிவுள்ள எந்த மனிதனுக்கும் விளங்கும்.
இத்தகைய தாக்குதல்களால் எந்த விமோசனமும் ஏற்படப்போவதில்லை. கடந்த கால் நு}ற்றாண்டுகளில் புலிகள் இதுபோன்ற எத்தனையோ தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். இத் தாக்குதல்களால் தமிழர்களின் வாழ்வும் இலங்கையின் அனைத்து மக்களின் வாழ்வும் நரகப்படுகுழியை நோக்கியே இட்டுச்செல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை எச்சரிக்கையடையவும், துரிதமாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென எண்ணு வதற்குமே வழிவகுக்கும்.
நாசகார சக்திகளான புலிகளுக்கு இதுவொன்றும் புரியப் போவதில்லை. பயங்கரவாதம் பற்றிய விழிப்புணர்வு அதனை உலக வரைபடத்தில் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகின் நாகாPகமான அத்தனை சமூகங்களிடமும் ஏற்பட்டுள்ளது. உலகில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் புலிகள் முன்னணியில் இருப்பதை அமெரிக்காவின் நியூஸ் வீக் சஞ்சிகை சில மாதங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையின் பொருளாதாரத்தை உல்லாச பயணத்துறையை நாசமாக்குவதை இலங்கை முழுவதும் பாதுகாப்பில்லாத ஒரு சு10ழ்நிலையொன்று ஏற்படுவதை நாகாPக உலகம் ஏற்றுக்கொள்ளாது. அருவருப்புடனேயே அதனை பார்க்கும்.
இலங்கையின் பொருளாதார கட்டமைப்புக்கள் சீர்குலைக்கப்படுவது தற்போது உணவுப் பற்றாக்குறை, இடம் பெயர்வு, அகதிநிலை என வாழும் மக்களின் வாழ்வில் மேலும் மேலும் துன்பங்களையே ஏற்படுத்தும். ஒருவிதமான பாதிப்பும் இல்லாமல் ஐசுவரியங்களுடன் வாழும் முட்டாள் தமிழர்களுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள சு10ழ்நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
நாளும் பொழுதும் படுகொலைகளுக்கு மத்தியில் மோதல்களுக்கு மத்தியில் வாழும் தமிழர்களுக்கு கண்ணீரும், மரநிழலும் தான் மிச்சமாகும். இதைப்பற்றி பிணக்காட்டு ராசா பிரபாகரனுக்கோ அவரது திருக்கூட்டத்தாருக்கோ எந்த அக்கறையும் கிடையாது. சராசரி தமிழரின் கண்ணீரும், மரணமும் இவர்களின் உப்பரிகையில் வாழ்பவர்களுக்கு லாபகரமானதே. டப்ளினிலும், ஒஸ்லோவிலும் தமது பிள்ளைகளை கற்க வைப்பவர்களுக்கு ஏழைத் தமிழ் குழந்தைகளின் சாவு ஒரு பொருட்டல்ல. இவர்களது உப்பரிகை வாழ்க்கையின் மூலதனமது.
தமிழர்கள் மாயைகளில் இருந்து விடுபட வேண்டும். ஆக்கபூர்வமான சிந்தனை செயற் பாடுகளே தமிழர்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்தும்.
இலங்கையில் சமூகங்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துவதில் புலிகள் கால் நு}ற்றாண்டுகால பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அனுராதபுரம் போதிமரத்தின் கீழ் வழிபாட்டில் ஈடுபட் டிருந்த சிங்கள மக்களை படுகொலை செய்ததில் இருந்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலைகளிலிருந்து மூது}ர் மக்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தது நிராயுதபாணிகளான படைவீரர்களை கொன்றுதள்ளியது வரை இன மோதல்களுக்கான களத்தை அமைப்பதற்கு புலிகள் மேற்கொண்ட சதிநாசகார வேலைகளுக்கு எண்ணிறந்த உதாரணங்களை குறிப்பிடலாம். தமிழ் மக்கள் மீது இடியாகத் துன்பம் இடையறாது இறங்கிக் கொண்டிருக்க வேண்டுமென பிணக்காட்டு ராசா பிரபாகரன் எதிர்பார்க்கிறார். அப்போதுதான் அவர்களின் பிழைப்பு நடக்கும். உண்மையில் எமது பிரதேசங்களில் ஆயுதங்களற்ற, வெடிமருந்து வீச்சமற்ற, மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழும் காலமொன்று உருவாக வேண்டும்.
அகதி தமிழன்
No comments:
Post a Comment