Monday, October 16, 2006

தோழர் வி.விசுவானந்ததேவனின் 20 ஆண்டுகள் நினைவு நாள்

1960களின் பிற்பகுதிகளிலிருந்து மார்க்சிய லெனிசத் தத்துவங்களின் வழிகாட்டலில் தோழர் விசுவானந்ததேவன் இலங்கை .இடதுசாரி இயக்கத்தின் இயங்கு சக்தியாகவும், அமைப்பாளனாகவும், செயற்பாட்டாளனாகவும், தலைமைத்துவப் பண்புகளுடனும் எம்முடன் வாழ்ந்து மறைந்து இன்றுடன் (15-10-2006) இருபது ஆண்டுகளாகின்றன. இவரது கட்சி அரசியலென்பது சண்முகதாசனை தலைமையாகக் கொண்டிருந்த இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்கட்சியில் ஆரம்பித்தது. பின்னர் இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும், இக்கட்சியினது தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியில் முக்கிய நபராகவும் செயற்பட்டார். அதன்பின்னர் மூன்று வருடகால இடைவெளியில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (Nடுகுவு) தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (Pடுகுவு) என்ற இரு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்து, அவ்விரு அமைப்புகளையும் வழிநடாத்தினார்.
29-11-1952 இல் கரவெட்டியைச்சேர்ந்த கல்லுவம் கிராமத்தில் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தோழர் விசுவானந்ததேவன் தனது ஆரம்ப, உயர்தர கல்வியினை உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கற்றார். இவர் உயர்தர வகுப்பு மாணவனாக இருக்கும் காலகட்டத்திலே முற்போக்கு கலை இலக்கியங்களிலும் இடதுசாரிக்கருத்துக்களிலும் மிகவும் ஈடுபாடுகொண்டிருந்தார். இதற்கு வடமராட்சிப்பிரதேசம் நீண்ட காலமாகவே இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தமை முக்கிய காரணம் எனலாம். 1956 ஆண்டு இலங்கை பாராளுமன்ற தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் போட்டியிட்ட தோழர் பொன். கந்தையா அவர்களை வெற்றிகொள்ளவைக்குமளவிற்கு அக்காலத்தில் வடமராட்சியில் இடதுசாரிக்கருத்துக்களின் செல்வாக்கு வலுப்பெற்றிருந்தது.
தோழர் விசுவானந்ததேவன் 1971 ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். இப்பல்கலைக்கழக பிரவேசம் இவரிற்கு தென்னிலங்கை மக்களினதும் மலையக மக்களினதும் பரீட்சயம் கிடைக்க வழிவகுத்தது. பல்கலைக்கழக வாழ்வில் மார்க்சிய லெனிச மாவோயிசத் தத்துவங்;களில் சிறந்த தேர்ச்சியுற்றவராக இடதுசாரி மாணவர்களுடனும் தான் சார்ந்திருந்த கட்சி பிரதிநிதிகளுடனும் இலங்கையின் சோசலிசப்புரட்சி தொடர்பாக சளைக்காது விவாதங்கள் புரிந்தார். இக்காலகட்டத்தில் அரசியல், மக்கள் சார்ந்த வேலைகளில் ஓர் அமைப்பாளனாகவும் செயற்பாட்டாளனாவும் பரிணமிக்கத்தொடங்கினார்.


இதனால், சண்முகதாசனை தலைமையாகக் கொண்டிருந்த இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்கட்சியினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அக்கட்சியிலேற்பட்ட பிளவின் பின்னர்; உருவாக்கப்பட்ட இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியில் தோழர் விசுவானந்ததேவன் மத்திய குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். சண்முகதாசனின் ஒருமுனைவாதப்போக்கு, தீவிர இடதுசாரிப்போக்கு, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையில் தவறான நிலைப்பாடு போன்ற காரணங்களினால் 1972 ஆண்டில் இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்கட்சியினைச் சேர்ந்த வி.ஏ.கந்தசாமி, கார்த்திகேயன், வாட்சன் பெர்னாண்டோ, ஆரியவன்ச, குணகேர, டி.ஏ.நந்துங்க, ஒ.ஏ.ராமையா, சாகுல் ஹமிது போன்றவர்கள் சேர்ந்து இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியை உருவாக்கினார்கள். தோழர் விசுவானந்ததேவன் பேராதனைப் பல்கலைகழகத்தில் பயிலும் காலத்தில் கண்டி கலாச்சாரக்குழுவிலும் நதி சஞ்சிகைக்குழுவிலும் மலையக மக்கள் முன்னணியிலும் அங்கம்வகித்து செயற்பட்டார்.


சிங்கள பௌத்த இனவாதமென்பது இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நிறுவனமயப்பட்டு தமிழ் மக்களை இனரீதியாக ஒடுக்குவதனை தமிழ் பாராளுமன்ற தலைமைகள் தமது தேர்தல் பிரச்சாரங்களுக்காக மாத்திரம் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறான தமிழ் பாராளுமன்ற தலைமைகளின் கீழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமென்பது வென்றெடுக்கப்பட முடியாதது, எனவே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமென்பது முதன்மைப்படுத்தவேண்டுமென்பதை இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியினர் தீர்மானித்தனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்காகவே 1975 ஆண்டில் இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சி தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை உருவாக்கினர்.


இக்காலகட்டத்தில் பாராளுமன்றபாதையை நிராகரிப்பதாகக் கூறி தமிழ் மக்களுக்கென தனிநாடொன்றினை நிறுவுவதற்கு ஆயுதமேந்தி போராடுவதே ஒரேவழியென்ற தமிழ் இளைஞர்களின் குரல்கள் படிப்படியாக ஓங்கி ஒலிக்கத்தொடங்கியிருந்தது. இந்த இளைஞர் குழுக்கள் ஆங்காங்கே இலங்கை பாதுகாப்புத்துறையினருக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களிலும் ஈடுபடத்தொடங்கியிருந்தனர். பின்னர் இந்த இளைஞர் குழுக்கள் தமக்கிடையேயுள்ள முரண்பாட்டினையும் ஆயுதங்களின் துணைகொண்டே தீர்க்க ஆரம்பித்தனர். 1982 ஆண்டு யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தினுள் வைத்து தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தைச்சேர்ந்த சுந்தரம் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு நல்ல உதாரணமாகும்.


தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டம் ஒருபுறம் தமிழ் பாராளுமன்றவாதிகளின் கைகளிலும் மறுபுறம் தமிழ் மக்களைப்பற்றி கொஞ்சமேனும் அக்கறையில்லாத சுத்த இராணுவக்கண்ணோட்டங்கொண்ட இளைஞர்களிடம் சிக்கியிருப்பதனையும் தோழர் விசுவானந்ததேவன் தெளிவாக உணர்ந்தார். இதன்காரணமாகவே 1983 ஆண்டில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (Nடுகுவு) என்ற அமைப்பினை ஸ்தாபித்தார். இவ்வமைப்பில் இவருடன் ஏற்கனவே நீண்டகாலமாக சேர்ந்து வேலைசெய்த சில தோழர்களும் பல புதிய இளைஞர்களும் இணைந்துகொண்டனர். செயலூக்கம் கொண்ட அல்லது உற்சாகங்கொண்டு முன்னேவரும் புதிய இளந்தோழர்களை ஓர் அமைப்பின் முன்னணி நபர்களாக நிறுத்த வேண்டுமென்கின்ற தனது நீண்டகாலக் கருத்திற்கேற்ப தோழர் விசுவானந்ததேவன் Nடுகுவு அமைப்பின் முன்னணியாளர்களாக புதிய இளந்தோழர்களை நிறுத்தினார்.


1983 யூலைமாதத்தின் பின்னர்; பல மடங்குகளாக வீக்கமுற்ற ஏனைய தேசிய விடுதலை இயக்கங்கள் போலன்றி Nடுகுவு மிகவும் சிறியதாகவே இருந்தது. இலங்கை அரச படைகளுக்கெதிரான சிறிய, நடுத்தர, பாரிய இராணுவத்தாக்குதல்களே தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டமாகவும், தமிழீழத்தை நிறுவுவதற்கான முக்கிய வேலைத்திட்டமாகவும் வர்ணிக்கப்படுகையில், மார்க்சிய லெனிசத் சித்தாந்தங்;களின் வழிகாட்டலில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டுமெனக் கூறிவந்த Nடுகுவு அமைப்பு, அக்காலகட்டத்திற்கேற்ப சரியான வேலைத்திட்டங்களை வகுப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காகப்போராடும் எல்லாப்பிரிவுடனும் ஐக்கியப்பட்டு போராடவேண்டுமென்பதை Nடுகுவு கருத்து ரீதியாக ஏற்றுக்கொண்டாலும், தோழர் விசுவானந்ததேவன் போன்ற ஒரு சிலர் அக்கருத்தினை நடைமுறைப்படுத்துவதை Nடுகுவு எதிர்த்தது. பாட்டாளிவர்க்கத்தலைமையிலான கட்சியொன்றினை நிறுவிய பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுவதா அல்லது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுவதினுடாக பாட்டாளிவர்க்கத்தலைமையிலான கட்சியொன்றினை நிறுவுவதா போன்ற விவாதங்களும் Nடுகுவு அமைப்புக்குள் எழுந்தன.


ஏறத்தாழ 1985 ஆண்டின் முழுக்காலப்பகுதியும் Nடுகுவு அமைப்புக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் போராட்டத்திலே கழிந்துபோயிற்று. Nடுகுவு உருவாகி 3 வருட காலத்தில் Nடுகுவு அமைப்புக்குள் உருவாகியிருந்ந தீவிர இடதுசாரிப்போக்கினையும் தமிழ் மக்களின தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய சக்திகளை அரவணைத்து பரந்தளவில் போராடமறுக்கும் கருத்தினையும் தோழர் விசுவானந்ததேவனும் Nடுகுவு அமைப்பின் ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். முரண்பாடுகள் முற்றி இறுதியில் 1986 ஜனவரியில் Nடுகுவு பிளவுற்று தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (Pடுகுவு) என்ற புதிய அமைப்பினை தோழர் விசுவானந்ததேவன் தோற்றுவித்தார்.


குறிப்பாக தோழர் விசுவானந்ததேவனின் வெளியேற்றத்தின் பின்னர் Nடுகுவு அமைப்புக்குள் மீண்டும் இன்னோரன்ன கருத்து மோதல்கள் ஏற்பட்டு மேலும் பல தோழர்கள் வெளியேறினார்கள். சில ஆண்டுகளின் பின்னர்; Nடுகுவு செயலிழந்து போயிற்று. Nடுகுவு செயலிழந்து போவதைத்தவிர வேறுவழியில்லையென Pடுகுவு என்ற புதிய அமைப்பினை தோற்றுவிக்கும்போதே தோழர் விசுவானந்ததேவன் பலரிடம் கூறியிருந்தார்.
தோழர் விசுவானந்ததேவன் மறைந்த பின்னர் Pடுகுவு அமைப்பும் அதிமுக்கியமான இயங்குசக்தியின்றி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்தது. ஏற்கனவே சிறிய அமைப்பாக இருந்த Nடுகுவுஇ Nடுகுவு என்றும் Pடுகுவு என்றும் மிகச்சிறிய அமைப்புகளாகி இரண்டுமே இறுதியில் சிதைவடைந்து இன்று எதுவித அடையாளமற்றுப் போய்விட்டது.
1986 ஆண்டு செப்டம்பர் மாதமளவில் சென்னையில் தங்கியிருந்த தோழர் விசுவானந்ததேவன் ஒரு முக்கிய கருமமொன்றின் நிமித்தம் அவசர அவசரமாக யாழப்பாணம் சென்றிருந்தார். அப்போது புலிகள் வுநுடுழு இயக்கத்தை அழித்து 4 மாதங்களேயாகியிருந்தன. தனது கருமத்தை நிறைவேற்றிய பின்னர், தோழர் விசுவானந்ததேவன், Pடுகுவு தோழர்களான மன்னார் முருங்கன்பிட்டியைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்பட்ட தோழர் ரோய்சன் சந்தாம்பிள்ளை, விசு என்று அழைக்கப்பட்ட தோழர் நரேஷ் சர்மா (இவர் Pடுழுவுநு அமைப்பின் முன்னாள் உறுப்பினர்) ஆகியோர் 1986 ஆண்டு ஒக்ரோபர் மாதம் 15ந் திகதி பொழுதுசாயும் நேரத்தில் ரோலர் வகை படகொன்றில் கரையூரிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டனர்;. நெடுந்தீவிலிருந்து பின்னர் தென்னிந்தியா நோக்கிப் புறப்படுவதே இவர்களது எண்ணமாக இருந்தது. 1986களில் புலிகள் வுநுடுழு இயக்கத்தை அழித்த பின்னர் ஏனைய இயக்கங்களையும் கொன்று குவிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததினால் யாழ்குடாநாட்டின் வடபகுதிக் கரையோரங்களிலிருந்து நேரடியாக தென்னிந்தியா செல்வதை இவர்கள் தவிர்;த்துக்கொண்டனர். இவர்களுடன் நெடுந்தீவை நோக்கி பயணம் செய்யும் ஏறத்தாழ 20 சாதாரண பயணிகளும் அந்த ரோலரில் இருந்தனர்.

மக்களுடன் மக்களாக சாதாரண பயணிகள்போல் பயணித்து, நெடுந்தீவினுடாக தென்னிந்தியா செல்லும் Pடுகுவு தோழர்களின் பயணம் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு சில மணி நேரத்தில் நெடுந்தீவிற்கு போய்ச்சேர வேண்டிய அந்த ரோலர் நெடுந்தீவை வந்தடையவேயில்லை. மப்பும் மந்தாரமுமான பொழுது சாயந்த அந்த மாலைப்பொழுதில் தோழர் விசுவானந்ததேவன் உட்பட வேறு இரு Pடுகுவு தோழர்களுடனும் 20 சாதாரண பயணிகளுடனும் அந்த ரோலர் எங்கோ மறைந்து போயிற்று. மனிதர்களும் தொலைந்து போயினர். ரோலருக்கு விபத்து ஏதாவது நேர்ந்திருந்தால் அல்லது இலங்கை கடற்படை தாக்கியிருந்தால் உடனடியாகவே நிட்சயமாக ஒரு சில தடயங்கள் சிக்கியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இவர்கள் யாரால், எப்படி, எங்கே மறைக்கப்பட்டார்களென்ற உறுதியான தகவல்களோ அல்லது தடயங்களோ இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இவர்களைக் கொன்றவர்களோ அல்லது இவர்களின் கொலைக்கு உடந்தையானவர்களோ அல்லது இவர்களின் கொலைபற்றிய உண்மை தெரிந்தவர்களோ இன்னமும் உயிர் வாழ்கின்றார்கள் என்பதனை நாங்கள் உறுதியாக நம்பலாம். இன்னமும் துப்புத்துலங்காத ஆயிரமாயிரம் இலங்கை தமிழ் மக்களின் கொலைகளுடன் தோழர் விசுவானந்ததேவன் உட்பட இரு Pடுகுவு தோழர்களினதும் மற்றும் 20 சாதாரண பயணிகளினதும் கொலைகளும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன.

இளமையிலிருந்து தனக்காக வாழாமல் மக்களுக்காகமட்டும் வாழந்து, தனது முழு நேரத்தினையும் சொத்துக்களையும் மக்;களுக்காகவே செலவிட்ட தோழர் விசுவானந்ததேவன் மறைந்த 20 ஆண்டில், தோழர் விசுவானந்ததேவனுக்கும் மற்றும் தோழர்கள் ரோய்சன் சந்தாம்பிள்ளை, நரேஸ் சர்மா ஆகியோருக்கும் புரட்சிகர அஞசலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1977களிலே தோழர் விசுவானந்ததேவன் தென்னாசிய புரட்சிகர சக்திகளுடனும் இணைந்து இலங்கையில் அரசியல் வேலைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதை சுயமாக சிந்தித்து, பல தென்னாசிய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டவர். சிறந்த சிந்தனையாளன், புரட்சியாளன் தோழர் விசுவானந்ததேவனை இருபதாண்டுகளென்ன இப்பூமியில் மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்வரை நினைவு கூரலாம்.
தோழர் வி.விசுவானந்ததேவனை என்றென்றும் நினைவில் நிறுத்தும் தோழர்கள்

www.Thenee.com
15-10-2006

No comments: