- நமது நிருபர்
ஜேர்மனியிலுள்ள தமிழ் நண்பர்கள் பரோபகார சிந்தையுள்ள இலங்கை தமிழ் அன்பர்களிடமிருந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தமது நண்பர் ஒருவரின் வைத்திய செலவுக்காக உதவி கோருகிறார்கள். பரநிருபசிங்கம் விஜயரெட்ணம் ஸ்ரீரங்கன் என்னும் இயற்பெயருள்ள இந்த நண்பர், நோய் அதிகரிக்கும் நேரங்களில் ப.வி.சிறீரங்கன் அல்லது எண் சோதிடரின் ஆலோசனைப்படி மாற்றிய ப.வி.ஸ்ரீரங்கன் என்னும் பெயர்களால் இணையத்தளங்களில் நீண்ட கட்டுரைகள் எழுதி வருபவராவர்.
மேற்படி நண்பர் நீண்ட காலமாக ~புலிக்குனியா தேனீபோபியா என்னும் விலங்குகளை மட்டும் பீடிக்கும் ஒருவித மனநோயினால் அவதிப்பட்டு வருவதாகவும், ஜேர்மனியில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எவையும் பலன் தராமையால் இறுதி முயற்சியாக கேரளாவிற்கு வைத்தியத்திற்கு அழைத்துச் செல்ல அன்னாரது நண்பர்கள் விரும்புவதாகவும் அதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படுவதாகவும் பரோபகார சிந்தையுள்ள நண்பர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.
ஸ்ரீரங்கனின் நோய்குணம் பற்றி மேலும் அறியவருவதாவது, இவர் நீண்ட காலமாக மேற்படி நோயினால் பீடிக்கபட்டு வந்துள்ளதாகவும், இவ்வருட நடுப்பகுதியிலிருந்து இந்நோய் அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. புலி எதிர்ப்பாளர்களை கடுமையாக சாடிவந்த இவர் திடீரென புலிகள் தன்னைக் கொலை செய்ய வருவதாக கடடுரைகள் எழுதி வந்ததாகவும், பின்னர் வன்னிக்கு வர டிக்கற் தருமாறு கோரி இணையத்தளங்களில் கட்டுரைகள் எழுதியதாகவும் கூறப்;படுகிறது. இவ்வாறான கட்டுரைகளை இவர் இரவில் திடீரென நித்திரையிலிருந்து எழும்பி எழுதுவதாகவும், குறிப்பாக 31.5.2006 அன்று நடுச்சாமம் 2.11 மணி என இவரே குறிப்பிட்டு ~என்னைத் தேடும் புலிகள் என்ற தலைப்பில் தமிழ் அரங்கம் என்னும் இணையத்தளத்தில் இவர் எழுதிய கட:டுரையை இவ் இணையத்தளத்தில் இப்போதும் பார்வையிடலாமென இவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
மேற்படி புலிகள் தன்னைக் கொலை செய்ய மிரட்டுவதாக ஸ்ரீரங்கனின் முறைப்பாடுதலைத் தொடர்ந்து, புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் பொறுப்பாளர்களுடன் அன்னாரின் குடும்பத்தினரும், நண்பர்களும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இப்படியொரு நபரைப்பற்றி தாம் முன்னர் ஒருபோதும் கேள்விப்பட்டது இல்லை எனவும், தாம் கேள்விப்படாத ஒருவரிற்கு எதிராக தாம் எவ்வாறு கொலைப்பயமுறுத்தல் விடலாம் என கேட்டதாகவும் தெரிய வருகிறது.
மேற்படி நண்பரிற்கு கேரள வைத்தியம் பலனளிக்கும் பட்சத்தில் தமிழ் அரங்கம் இணையத்தள ஆசிரியரையும் சிகிச்சைக்காக கேரளாவிற்கு அழைத்துச்செல்ல அவர்களது நண்பர்கள் விரும்புவதால், தாராள சிந்தையுள்ளவர்கள் சமூக நலன் கருதி மனம் உவந்து உதவுமாறு கோரப்படுகிறார்கள்.
2 comments:
மக்களுக்கு புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படுவது அவசியம்
Post a Comment