Friday, October 20, 2006

சமூக விடுதலைப் போராளியாக மக்கள் பணிபுரிந்த

சமூக விடுதலைப் போராளியாக மக்கள் பணிபுரிந்த மான் முத்தையா

வெகுஜனன்- வட புலத்து சங்கானைப் பட்டின சபையின் முன்னாள் தலைவரும் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் சமூக விடுதலைப் போராளியுமான நாகலிங்கம் முத்தையா தனது எண்பத்து நான்காவது வயதில் கடந்த 22-07-2006 அன்று சங்கானையில் காலமானார். மான் முத்தையா என்ற பெயர் வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பலராலும் அறியப்பட்ட பெயராக இருந்து வந்தது. உறுதியான உடற்கட்டும் நிமிர்ந்த நடையும் மட்டும் மான் என்ற அடைமொழிக்கு காரணமாக அமையவில்லை. சமூக அநீதிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும் துணிவும் ஆற்றலும் அவரது இளமைக்காலம் முதல் இருந்து வந்தமை அவரை மனிதர்களிடையே மனிதனாக அடையாளம் பெறவைத்தது.

மான் முத்தையா இளமைக்காலம் முதல் பொதுவுடமைவாதியாகவும் அதன் காரணமாக சமூக விடுதலைப்போராளியாகவும் வாழ்ந்து வந்தவர். பொது வாழ்வில் சங்கானைப் பட்டின சபை உறுப்பினராகவும் பின்பு ஒரு பதவிக் காலத்தின் தலைவராகவும் பதவி வகித்து மக்களுக்குப் பணியாற்றியவர். நா. (மான்) முத்தையா சங்கானையில் அக்காலத்திய மலேயாத் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவர். அதன் காரணமாக இளைமைக்காலத்தில் மலேசியாவில் கல்வி கற்றவர். ஆங்கிலத்தில் போதிய புலமையும் பெற்றவர். மலையா கம்யூனிஸ்ட் கட்சி கொலனித்துவத்தையும் பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வந்த அன்றைய கால கட்டத்தில் அப்போராட்டங்களினால் ஈர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களில் முத்தையாவும் ஒருவராகிக் கொண்டார். அதன் மூலம் அவர் மாக்சிசத்தை ஏற்று பொதுவுடமை இலட்சியங்களைக் சுமந்தவாறு இலங்கைக்கு தனது இளமைக் காலத்தில் திரும்பினார். தான் பிறந்த சங்கானை மண்ணில் தனது வாழ்வை நிலைப்படுத்திக் கொண்டார்.

அக் காலத்தில் வடபுலத்திலே பொதுவுடமை இயக்கம் தோழர் மு.கார்த்திகேசன் மற்றும் ஆரம்ப முன்னோடிகளின் தலைமையில் அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்தது. அப் பொதுவுடமை இயக்கத்தில் இளைஞனாக முத்தையா இணைந்து கொண்டார். அவர் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்தார். வெள்ளைக்கார தலைமை நிர்வாகிகளின் கீழ் அத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் எவ்வித உரிமைகள் சலுகைகள் இன்றி வேலை செய்து வந்த சூழலில் முதன் முதலில் தொழிற்சங்கம் கட்டும் முன் முயற்சி எடுக்கப்பட்டது. அதனை அங்கு தொழிலாளியாகக் கடமைபுரிந்த பொதுவுடமைவாதியான எஸ்.சந்தியாப்பிள்ளை முன்னின்று செயல்படுத்தினார்.

அத்தகைய தொழிற்சங்க உருவாக்கத்திற்கு முத்தையாவும் ஒத்துழைப்பு வழங்கினார். இவர்களது முயற்சியில் பயிலுனராக நியமனம் பெற்ற கே.ஏ. சுப்பிரமணியமும் இணைந்து கொண்டார். இம் மூவரும் ஏனைய தொழிலாளர்களை இணைத்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் ஆரம்ப தொழிற்சங்கத்தைதோற்றுவித்து கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டன. அதன் விளைவு இம் மூவரும் ஒருவர் பின் ஒருவராக நிர்வா கத்தினால் வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கே.ஏ. சுப்பிரமணியம் பொதுவுடமை இயக்கத்தின் வடபுலத்து முழுநேர அரசியல் ஊழியராகினார். முத்தையா வேறு தொழில் தேடினார். பின்பு சுய தொழில் முயற்சியிலும் ஈடுபட்டு திருமணமாகி குடும்ப வாழ்விலும் ஈடுபட்டார். சந்தியாப்பிள்ளை தொடர்ந்து ஒட்டுநராக தொழில் செய்ததுடன் கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டார்.

முத்தையா சங்கானைப் பிரதேசத்தில் பொதுவுடைமை கட்சியை விஸ்தரித்து வாலிபர் இயக்கத்தை கட்டினார். அக் காலத்தில் பல இளைஞர்கள் முத்தையாவின் வழிகாட்டலில் அணி திரண்டனர். அத்துடன் வட புலத்தில் பொதுவுடைமை வாலிபர் இயக்கத்தின் முதலாவது மாநாடு வெற்றிகரமாக இடம்பெறுவதற்கும் முத்தையா முன்னின்று செயல்பட்டார். வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பொதுவுடைமை இயக்கம் வளர்ச்சி பெற்ற சூழலில் உள்ளூராட்சி சபைகளுக்கு பல பொதுவுடைமைவாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். சங்கானை கிராமசபையிலும் பின்பு பட்டின சபையாக தரம் உயர்ந்த நிலையிலும் பொதுவுடைமை வாதிகள் உறுப்பினர்களாகினர். அதன் காரணமாக அறுபதுகளின் முற்கூறிலே சங் கானைப் பட்டின சபையின் தலைவராக மான் முத்தையா பதவி பெற்று அப்பிரதேச அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார். அக்கால கட்டத்தில் சுன்னாகம் காங்கேசன்துறை வல்வெட்டித்துறை கட்டைவேலி யாழ்ப்பாணம் பருத்தித்துறை போன்ற உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாக தலைவர்களாக இடதுசாரி செயற்பாட்டாளர்கள் பதவி வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி வட புலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கும் உரிய வழிகாட்டியாக அமைந்தது.
சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அந்த எழுச்சியும் அதன் பாதையில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. உயர்த்தப்பட்டவர்கள் என்போர் மத்தியில் பொதுவுடைமை வாதிகள் இடது சாரியினர் ஜனநாயக சக்திகள் மற்றும் நல்லெண்ணம் கொண்டோர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து நின்று போராடிய போராட்டங்களாகவே அவை அமைந்து கொண்டன.

அந்த வகையில் சங்கானைப் பிரதேசத்தில் தேநீர் கடைகளிலான சமத்துவம் கோரிய வெகுஜனப் போராட்டத்தில் மான் முத்தையா முன்னணியில் நின்றார். 1967 இல் இடம்பெற்ற அவ் வெகுஜனப் போராட்டத்தில் சமத்துவத்தை மறுத்து நின்ற தமது உறவினர்களான உயர்த்தப்பட்ட சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்றார். அதன் காரணமாக அவர் பொலிஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்வெளிக் காயங்களுக்கும் ஆளாகினார். அத்துடன் சங்கானையில் அவரது வீடு சாதி அகம்பாவம் கொண்டவர்களால் அடித்து உடைக்கப்பட்டதுடன் அங்கு தொடர்ந்து இருக்க முடியாத உயிராபத்துச் சூழலில் குடும்பத்துடன் இடம்பெயரவும் வேண்டி ஏற்பட்டது. இருப்பினும் மான் முத்தையா அநீதிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் அடிபணிந்து விடவில்லை. ஒரு பொதுவுடைமைப் போராளிக்கு முன்னால் உள்ள வரலாற்றுக் கடமையை முன்னெடுப்பதில் உறுதியுடனும் துணிவுடனும் செயல்பட்டமை அன்றைய நிலையில் முன்னுதாரணமாக அமைந்தது. 1966-71 கால கட்டத்தில் மான் முத்தையா ஏனைய பொதுவுடைமை வாத முன்னோடிகளுடன் இணைந்து வடபுலத்தில் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டங்கள் இறுதியில் வெற்றிபெற்றன.

தோழர் மான் முத்தையா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து கொள்ளும் இவ்வேளை அவர் விட்டுச் சென்ற பொதுவாழ்வினதும் போராட்டங்களினதும் அடிச் சுவடுகள் தெளிவாகக் கண்முன்னே பளிச்சிட்டு நிற்கின்றன. அவரது எண்பத்திநாலு வருட வாழ்விற்கு மிகக் கனதியான அர்த்தங்களும் அடையாளங்களும் உண்டு. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் சமூக நீதி மறுப்பு களும் கொண்ட இன்றைய சமூக அமைப்பில் ஒரு பொதுவுடைமைவாதி தனது ஆற்றலைப் பயன்படுத்தி மனிதத்துவத்திற்காகப் போராடுவதில் பொதுவுடைமை பாரம்பரியத்தை இறுதிவரை மான் முத்தையா கொண்டிருந்தார் என்பது அவருக்குரிய தனித்துவச் சிறப்பாக அமைந்து கொண்டது. அதன் காரணமாகவே புதிய - ஜனநாயக கட்சி 2003 இல் தனது 25 ஆவது ஆண்டு விழாவின் போது மான் முத்தையாவையும் ஏனைய ஐந்து தோழர்களையும் மூத்த பொதுவுடைமைப் போராளிகள் முன்னோடிகள் என கௌரவித்து நினைவு விருதுகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன முரண்பாடும் தேசிய இனப்பிரச்சினையும் உச்ச நிலை நெருக்கடியாகி நிற்கும் இன்றைய சூழலில் மான் முத்தையா போன்ற பொதுவுடைமைவாதிகளின் உறுதிமிக்க அரசியல் சமூகப் போராட்டங்களின் அனுபவங்கள் படிக்கப்படுவது பன்முகப் பயன்கள் தரக்கூடியனவாகும். மறைந்த நா.முத்தையா அவர்களுக்கு எம் அனைவரினதும் அஞ்சலியும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபமும் உரித்தாகுக.

Thursday, October 19, 2006

நரகபடுகுழியை நோக்கி தமிழர்களின் வாழ்வு

நரகபடுகுழியை நோக்கி தமிழர்களின் வாழ்வு

காந்தரூபன் அறிவுச்சோலை மீது கிபீர் விமானக் குண்டுகள் விழாததையிட்டு தமிழ் நெட் இணையத்தளம் தனது செய்தி குறிப்பொன்றில் தெரிவித்திருப்பது அதையிட்டு கவலையடைந்திருப்பதை புலப்படுத்துகிறது. கிபீர் விமானக் குண்டுகள் காந்தரூபன் அறிவுச்சோலைக்கு அருகாமையில் விழுந்ததாகவும் ஒரு சில பொதுமக்கள் குழந்தைகள் காயமடைந்ததாகவும் அது தெரிவித்திருந்தது. வண்ணங்களில் பலநு}ற்றுக்கணக்கான குழந்தைகளின் படங்களை பிரசுரிப்பதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது போல் அங்கலாய்க்கிறது.

வன்னிபுலத்தில் விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்ட புலிகளால் தமது படையணிகளுக்கென பலாத்காரமாக கொண்டுவரப்பட்ட பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதை வண்ணங்களில் காட்டி விற்று புலிகளின் கொலை மூலதனத்திற்கு உலகளாவியளவில் உபரி தேடிக்கொடுத்த வர்கள் ,காந்தரூபன் அறிவுச்சோலை குழந்தைகள் சாகவில்லையென இந்த சாவு வியாபாரி கள் அங்கலாய்க்கிறார்கள். இனிமேல் புலிகள் குண்டு வீச்சுக்களில் படுகொலை நிகழுமாறு ஆபத்தான இடங்களில் பிள்ளைகளை இருத்தலாம். பிணக்காட்டு ராசா பிரபாகரனும், போடுற ராசா பொட்டம்மானும் திட்டமிடலாம்.

ஜெனீவாவில் வடக்;கு கிழக்கில் நிகழ்ந்த படுகொலைகளை புலிகள் பட்டியலிடலாம். பெரும்பாலான படுகொலைகள் புலிகளாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எனவே இந்தப் படுகொலைகளும் புலிகளின் பட்டியலில் பிரச்சார நோக்கத்திற்காகவும், கப்ப வரி வசு10லிப் பிற்காகவும் இடம்பெறலாம். தற்போது நடைபெறும் படுகொலைகள் பல எல்லாளன் படையினால் உரிமை கோரப்பட்டும் உள்ளன. மட்டக்களப்பு பகுதியில் பரவலாக கொள்ளைச் சம்பவங்கள் நிகழுகின்றன. இன்று செல்வநாயகபுரத்தில் உள்ள வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை பொலிசாருக்கு அடையாளம் காட்டியதற்காக குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவங்களில் புலிகளே பிரதானமாக சம்பந்தப்பட்டிருப்பதாக அரசல் புரசலாக சங்கதிகள் கசியத் தொடங்கியுள்ளன.

புலிகளின் நிதர்சனம் ஒலி, ஒளிபரப்பு கோபுரம் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்தது தொடர்பாக புலிகள் விசனமடைந்துள்ளனர்.அது ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலென கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக்கூடிய பெரிய பகிடியை புலிகள் விட்டுள்ளார்கள். ஊடக சுதந்திரம் என்பது என்னவென்றே தெரியாத ஊடக கைநாட்டுக்காரர்கள் இவ்வாறு சொல்வதையிட்டு தமிழ் மக்கள் சிரிப்பதா அழுவதா என்ற நிலையில் இருக்கிறார்கள்.

நிதர்சனம் யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் பொருட்கள் போனால் தாக்குதல் நடத்துவோம், மக்கள் பிரயாணம் செய்தால் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல்களை விடுவதற்கும் யாழ்ப்பாணத்தில் கூட்டுறவு சங்க கடைகள் கொள்ளையடிக்கப்பட்டபோது முதலாவது கூட்டுறவுச் சங்கம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது இரண்டாவது சங்கம் கொள்ளையடிக்கப்பட்டது என்று மனமகிழ் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு திரித்தும், உருட்டியும், புரட்டியும், பொய் புரளிகளை அவிழ்த்து விடுவதற்குமே பயன்பட்டு வந்தன. வன்னி மக்களை உலகம் தெரியாதவர்களாக பாமரர்களாக வாழ வைப்பதற்குமே அது எப்போதும் சேவகம் செய்தது.

பாடசாலை மாணவர்களின் இறப்பையிட்டு குது}கல பிரச்சாரம் செய்வதும், பாடசாலைகளுக்கு மாணவர்களை செல்லாமல் தடுப்பதற்கும் புலிகளின் ஜனநாயக விரோதப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கும் தற்கொலை குண்டு பயங்கரவாதத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும் ஏற்றிப் போற்றுவதற்கும் பெரும் பிரச்சார பங்களிப்புச் செய்து வந்தது. இப்போது அந்தப் பங்களிப்புக்களுக்கு தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளதென்று பிணக்காட்டு ராசாவின் திருக்கூட்டத்தார் அங்கலாய்க்கிறார்கள்.

இதற்கிடையே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது பற்றி இப்போது இவர்கள் கூக்குரலிடுகிறார்கள். 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பின்னர் அதனடிப்படையில் வடக்கு கிழக்கை இணைத்து அதற்காக தம்மை அர்ப்பணித்த வடக்கு கிழக்கின் ஜனநாயக வழிக்கு வந்த கட்சிகளை சேர்ந்தோரை கொன்றொழித்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சகல பெறுபேறுகளையும் நாசமாக்குங்கள், என்று பிரேமதாசாவின் காலடியில் மண்டியிட்டு நின்ற புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிதாமகர் ராஜீவ்காந்தி அவர்களை தற்கொலை குண்டுதாரி மூலம் படுகொலை செய்த புலிகள் இப்போது வடக்கு கிழக்கு பிரிவு தொடர்பாக பாசாங்கு பண்ணுகிறார்கள்.

வடக்கு கிழக்கு பிரிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான தார்மீக தகுதி மாற்று தமிழ் கட்சிகளுக்குத்தான் உண்டு. புலிகள் உண்மையில் கடந்த கால் நு}ற்றாண்டுகளில் தமிழ் மக்கள் பெற்றிருக்கக் கூடிய சகல பலாபலன்களையும் நாசம் செய்திருக்கிறார்கள். வாகரையில் பல்லாயிரம் மக்கள் மரங்களின் கீழ் வாழும் நிலையையும் யாழ் குடாநாட்டின் மக்கள் அனுபவிக்கும் பொருளாதார கஷ்டங்களுக்கும் அவர்களே வழிவகுத்தார்கள். ஹபரணையில் நிராயுதபாணிகளாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கடற்படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதன் மூலம் பல தெற்கின் ஏழைக்குடும்பங்களின் வீடுகளை சோகத்தில் மூழ்கடித்திருக்கிறார்கள்.

சிங்கள மக்களை ஆத்திரப்படுத்தி இனவன்முறையென்ற நெருப்பில் தமிழ் மக்களை பலியிடுவதற்கான காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஹபரணை தாக்குதல் மூலமும் காலி துறைமுகத் தாக்குதல் மூலமும் தாம் வீராதி வீரர்கள் சு10ராதி சு10ரர்கள் என்ற மிதப்பில் புலிகள் இருக்கலாம். பாமரத் தமிழர்களும் அந்த மிதப்பில் இருக்கலாம். இதன் விபாPத விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பது பகுத்தறிவுள்ள எந்த மனிதனுக்கும் விளங்கும்.
இத்தகைய தாக்குதல்களால் எந்த விமோசனமும் ஏற்படப்போவதில்லை. கடந்த கால் நு}ற்றாண்டுகளில் புலிகள் இதுபோன்ற எத்தனையோ தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். இத் தாக்குதல்களால் தமிழர்களின் வாழ்வும் இலங்கையின் அனைத்து மக்களின் வாழ்வும் நரகப்படுகுழியை நோக்கியே இட்டுச்செல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை எச்சரிக்கையடையவும், துரிதமாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென எண்ணு வதற்குமே வழிவகுக்கும்.

நாசகார சக்திகளான புலிகளுக்கு இதுவொன்றும் புரியப் போவதில்லை. பயங்கரவாதம் பற்றிய விழிப்புணர்வு அதனை உலக வரைபடத்தில் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகின் நாகாPகமான அத்தனை சமூகங்களிடமும் ஏற்பட்டுள்ளது. உலகில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் புலிகள் முன்னணியில் இருப்பதை அமெரிக்காவின் நியூஸ் வீக் சஞ்சிகை சில மாதங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையின் பொருளாதாரத்தை உல்லாச பயணத்துறையை நாசமாக்குவதை இலங்கை முழுவதும் பாதுகாப்பில்லாத ஒரு சு10ழ்நிலையொன்று ஏற்படுவதை நாகாPக உலகம் ஏற்றுக்கொள்ளாது. அருவருப்புடனேயே அதனை பார்க்கும்.

இலங்கையின் பொருளாதார கட்டமைப்புக்கள் சீர்குலைக்கப்படுவது தற்போது உணவுப் பற்றாக்குறை, இடம் பெயர்வு, அகதிநிலை என வாழும் மக்களின் வாழ்வில் மேலும் மேலும் துன்பங்களையே ஏற்படுத்தும். ஒருவிதமான பாதிப்பும் இல்லாமல் ஐசுவரியங்களுடன் வாழும் முட்டாள் தமிழர்களுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள சு10ழ்நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
நாளும் பொழுதும் படுகொலைகளுக்கு மத்தியில் மோதல்களுக்கு மத்தியில் வாழும் தமிழர்களுக்கு கண்ணீரும், மரநிழலும் தான் மிச்சமாகும். இதைப்பற்றி பிணக்காட்டு ராசா பிரபாகரனுக்கோ அவரது திருக்கூட்டத்தாருக்கோ எந்த அக்கறையும் கிடையாது. சராசரி தமிழரின் கண்ணீரும், மரணமும் இவர்களின் உப்பரிகையில் வாழ்பவர்களுக்கு லாபகரமானதே. டப்ளினிலும், ஒஸ்லோவிலும் தமது பிள்ளைகளை கற்க வைப்பவர்களுக்கு ஏழைத் தமிழ் குழந்தைகளின் சாவு ஒரு பொருட்டல்ல. இவர்களது உப்பரிகை வாழ்க்கையின் மூலதனமது.
தமிழர்கள் மாயைகளில் இருந்து விடுபட வேண்டும். ஆக்கபூர்வமான சிந்தனை செயற் பாடுகளே தமிழர்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் சமூகங்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துவதில் புலிகள் கால் நு}ற்றாண்டுகால பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அனுராதபுரம் போதிமரத்தின் கீழ் வழிபாட்டில் ஈடுபட் டிருந்த சிங்கள மக்களை படுகொலை செய்ததில் இருந்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலைகளிலிருந்து மூது}ர் மக்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தது நிராயுதபாணிகளான படைவீரர்களை கொன்றுதள்ளியது வரை இன மோதல்களுக்கான களத்தை அமைப்பதற்கு புலிகள் மேற்கொண்ட சதிநாசகார வேலைகளுக்கு எண்ணிறந்த உதாரணங்களை குறிப்பிடலாம். தமிழ் மக்கள் மீது இடியாகத் துன்பம் இடையறாது இறங்கிக் கொண்டிருக்க வேண்டுமென பிணக்காட்டு ராசா பிரபாகரன் எதிர்பார்க்கிறார். அப்போதுதான் அவர்களின் பிழைப்பு நடக்கும். உண்மையில் எமது பிரதேசங்களில் ஆயுதங்களற்ற, வெடிமருந்து வீச்சமற்ற, மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழும் காலமொன்று உருவாக வேண்டும்.

அகதி தமிழன்

Wednesday, October 18, 2006

'தமிழ்புலிகளும்" பிரித்தானியாவில்...


'தமிழ்புலிகளும்" பிரித்தானியாவில்; விரிந்துள்ள அவர்களின் வலைப்பின்னலும்

டொமினிக் வைட்மன்
2006 ஒக்டோபர் 18

(Global Politician இணையத்தில் வந்த கட்டுரை. தமிழாக்கம:;. இலங்கை சமாதானச்செயலகம்)

லண்டனில் அமைந்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான LLSS அமைப்பின் பேச்சாளராக டொமினிக் வைட்மென் செயற்படுகிறார் - இவ்வமைப்பு முன்னாள் புலனாய்வு அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் மொழித்தேர்ச்சி பெற்றோர் முதல் வங்கியாளர்களை உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தடயங்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களைக் கொண்ட சர்வதேச வலைப்பின்னலொன்றாகும்.

2001 பெப்ரவரி 28ஆம் திகதி ஐக்கிய இராஜதானியில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கும் அல்-குவைதா இயக்கத்துக்கும் இடையில் தளிர்விட்டு வரும் தொடர்புகள் பற்றி லண்டனில் உள்ள சர்வதேச உத்தி ஆய்வுகள் நிறுவனத்தின் வருடாந்த வெளியீடு '2005- 2006 இராணுவ சமநிலை" குறிப்பிட்டிருந்தது. இது கொள்கை அடிப்படையிலான தொடர்பாகவல்லாது, கள்ளக்கடத்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொள்ளல் என்பதாகவிருந்தது என இராஜதந்திரிகளுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் இரகசியமாகப் பின்பு தெரிவித்தனர். இப்பல்வேறுபட்ட விடுதலைப்புலிகள் மற்றும் அல்-குவைதாவுக் கிடையிலான தொடர்புகளை நிபுணர்கள் இப்போது ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகின்றனர். கடல்சார்ந்த கொடுக்கல் வாங்கல்களிலும் இத்தொடர்பு நிலவுகிறது எனவும் நம்பப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்துக்கெதிராக ஆயுதம் ஏந்தியிருக்கும் தமிழ் புலிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குத் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பாவித்த முதலாவது பயங்கரவாத அமைப்பாகும். கடந்த 23ஆண்டுகளில், அது இலங்கையில் பல அரசியல் தலைவர்களையும், முன்னாள் இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்துள்ளதோடு, அநேகமாக அப்பாவிப் பொதுமக்களை உள்ளிட்ட சுமார் 60,000உயிர்களை பலிகொள்வதிலும் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2006 ஆகஸ்ட் 21ஆம் திகதி, பிரித்தானியப் பிரஜையான டாக்டர் முருகேசு விநாயகமூர்த்தி மற்றும் அவரது மனைவி டாக்டர் புஷ்பம்; ஆகிய இருவரையும் நிய10யோர்க்கில் வைத்து எப்பிஐ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். விடுதலைப்புலிகள் இனை ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக அமெரிக்க நீதித் திணைக்கள அதிகாரயொருவருக்கு 01மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உற்பத்தி செய்த ஏவுகணைகளையும் பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பம் தொழில்நுட்பத்தையும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காகக் கொள்வனவு செய்வதற்கு வசதிபடைக்க முயன்ற குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டது.

ஐக்கிய இராஜதானியில் பரந்து வாழும் தமிழ் சமூகத்திடம் இருந்து பயமுறுத்தியும் அதட்டியும் பெறப்படும் மிக அதிக அளவிலான பணத் தொகை பற்றி இவ்வாறு இவர்கள் கைது செய்யப்பட்டது பல அவதானிகளின் கண்களைத் திறந்து விட்டுள்ளது. இப்படியாக வசூலிக்கப்படும் பணம் ஆட்களைக் கொண்டு இலங்கைக்குக் கள்ளத்தனமாகக் கடத்தப்படுகிறது அல்லது மூன்றாம் நாடுகளில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பாவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராஜதானியில் பணம் வசூலித்தல் : முறை பற்றிய விடயம் சார்ந்த ஆய்வு

'இறுதி யுத்தத்திற்காகப் பணம் திரட்டல் - பரந்து வாழும் தமிழ் சமூகத்துக்கு எதிரான விடுதலைப்புலிகள்pன்; பயமுறுத்தல் (ய10.கே மற்றும் கனடாவில் விடயம் சார்ந்த ஆய்வொன்று)" என்ற தலைப்பிலான ஆய்வொன்றை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிய10மன் ரைட்ஸ் வொச் இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டது. இவ்வாய்வின் படி, பல குடும்பங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிடம் இருந்து 2000ய10ரோ முதல் 100,000 ய10ரோ வரையிலான தொகைகள் கேட்கப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள விடுதலைப்புலிகளின் முகப்பு அமைப்பான 'பிரித்தானிய தமிழ் இயக்கம்" நெட்வெஸ்ட் வங்கியிலுள்ள அதன் கணக்குக்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. இப்போது அவர்கள் கேள்விக்கொத்தொன்று மூலம் தமிழ் சமூகத்தினரிடம் அவர்கள் குடும்ப விபரம், வருமானம், இலங்கையில் அவர்கள் குடும்பம் பற்றிய விவரம் போன்றவற்றைக் கேட்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள். கொடுப்பனவுகளைச் செய்ய மறுத்தால் பின்வரும் விளைவுகளில் ஏதுமொன்றை எதிர்நோக்க நேரிடும். இலங்கையிலுள்ள உறவினர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுவார். பணம் கொடுக்க மறுப்பவரே கொலை செய்யப்படுவார்.

சுருக்கம்

விடுதலைப்புலிகள் 2001 இல் ஐக்கிய இராஜதானியில் தடை செய்யப்பட்டதானது அவர்களின் நடவடிக்கைகளில் ஒரேயொரு மாற்றத்தையே விளைவித்தது. அவர்களது செயலகம் மற்றும் முகப்பு அமைப்புக்களின் பெயர்களை அவர்கள் மாற்றி வழமை போல் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.இன்று அவர்கள் கடன் அட்டைக் களவு முதல் கள்ளப் பணத்தைச் சுத்திகரித்தல், சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகம் போன்ற இன்னோரன்ன துறைகளுக்கு வியாபித்துள்ளதோடு, இலாபகரமான கப்பல் போக்குவரத்துப் பின்னலொன்றையும் பேணி வருகின்றனர். முக்கியமாக ஐக்கிய இராஜதானி மற்றும் கனடாவில் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு இலங்கையில் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அபகரித்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைளின் மூலம் ஐக்கிய இராஜதானியில் இருந்து மாத்திரம் ஆண்டொன்றுக்கு சுமார் 10மில்லியன் ய10ரோ வந்து சேர்கிறது.

ஐக்கிய இராஜதானி நகரப் பொலிஸ் பிரிவின் பயங்கரவாதத்துக்கு எதிரான கட்டளைப் பீடத்தின் கூற்றுப்படி, இந்நடவடிக்கைள் பற்றி அவர்கள் அறிந்திருந்த போதிலும், 'இஸ்லாமிய பயங்கரவாதம்" பற்றிக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் ஆளணியின் குறைவு காரணமாக முட்டுக்கட்டைகளை எதிர் நோக்க அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயங்கரவாதம் எனப் இப்படிப் பிரித்துப் பார்ப்பதனால், ஐக்கிய இராஜதானி, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இன்னும் பல நாடுகள் தடைசெய்துள்ள பயங்கரவாதக் குழுக்கள் பொதுவாக ஐக்கிய இராஜதானியில் தடையின்றிச் செயற்படுவது வருந்தத் தக்கதொரு விடயமாகும்.

பிரித்தானிய காட்டும் சகிப்புத் தன்மை பயங்கரவாதத்தைப் போசிக்கிறது.

இலங்கையில் தமிழ் புலிகள் மேற்கொண்டு வரும் கிளர்ச்சியினால் ஏற்பட்ட சச்சரவுகள் இப்போது பிரித்தானியாவுக்கும் வியாபித்து, பல பயங்கரத் தாக்குதல்களுக்கு அது வழிவகுத்துள்ளது. ஐக்கிய இராஜதானியில் வசிக்கும் தமிழ் சமூகம் தொடர்புபட்ட 16 கொலைகள் 2005 ஆம் ஆண்டில் மாத்திரம் நேர்ந்திருக்கின்றன,சர்வதேச ரீதியாகத் தேடப்பட்டுவரும் குற்றவாளி வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் திரு. சார்ல்ஸ் அன்ரனி பெல்பாஸ்ட் பல்கலைக் கழகத்தில் இப்போது கல்வி கற்கும் மாணவன் என்பது கவனிக்கத்தாகும். இப்பல்கலைக் கழகத்துக்குச் சேர்வதற்கு அவருக்கு ஐஆர்ஏ இன் மார்ட்டின் மக்குயின்னிஸ் உதவியுள்ளார். அதற்கான காரணம், இலங்கையில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்காக 'நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் ஒரு நடவடிக்கை" என்பதாகும்.

இன்னும் மோசமானது.

1995 ஆம் ஆண்டு முதல், மூன்று விடுதலைப்புலிகளின் பிரத்தானிய தரும ஸ்தாபனங்களும் தமிழர் வீடமைப்பு இயக்கமும் 8மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சேகரித்தன. இவை ஐக்கிய இராஜதானியில் தர்ம ஸ்தானங்கள் மற்றும் ஒரு வீடமைப்பு இயக்கம் என்று பதிவு செய்யப்பட்டு சட்டப்படியான அந்தஸ்தை அவை பெற்றிருந்ததால், உள்நாட்டு மற்றும் மத்திய அரசாங்கத்தின் மான்யங்களை அவை பெறக்கூடியதாக இருந்தது.

1995ஆம் ஆண்டு தொடக்கம் வரி விலக்களிப்புடன் புனரமைப்புக்கான தர்மக்கொடை என்பதன் மூலம் பிரித்தானியாவில் இருந்து விடுதலைப்புலிகள்pன்; கட்டுப்பாட்டுக்கு சுமார் 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் போய்ச் சேர்ந்திருப்பதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரித்தானிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இக்குழுக்கள் ஓரளவு தொண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதில் சந்தேகமில்லை என்பதோடு, வன்னிக் கானகத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் அகதிகளுக்கான நிவாரண உதவியை வழங்குகிறது. 'ஹொட் ஸ்பிரிங்" என்ற சஞ்சிகைக்கு எழுதிய விடுதலைப்புலிகளின்; செயற்பாட்டாளர் சார்ல்ஸ் சோமசுந்தரம், இந்த தர்மங்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் சிந்தனைப் போக்கில் உருவானவையே எனக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய உதவி அமைப்புக்களான ய10என்எச்சிஆர், ஐசிஆர்சி, ஒக்ஸ்பாம் போன்ற அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது, இவ்வாறான நிவாரண நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளன (பிரித்தா னியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற 2.5மில்லியன் ய10ரோவின் சிறியதொரு அளவேயாகும்). இச்சர்வதேச அமைப்புக்கள், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கும் விடுதலைப்புலிகளினருக்கும் இடையேயுள்ள தொடர்பினை அறிந்திருப்பதால், அவை தமிழர் புனர்வாழ்பு கழகத்தை விட்டு விலகிச் செல்கின்றன.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் தர்ம நடவடிக்கைகள் அவர்களது முக்கிய நோக்கமான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக நிதி சேர்ப்பதை மறைப்பதற்கு மேற்கொள்ளப்படுவதாகும் என பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பற்றிய கனேடிய செனட் சபைக் குழுவின் பாதுகாப்பு நிபுணர் டொன் கிரேசி குறிப்பிடுகிறார். வன்னிப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் சிறிதளவு நடவடிக்கைகளைப் பலவாறாகப் பெரிசு படுத்தி விடுதலைப்புலிகள்pன்; கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஊடகங்கள் பரப்புரையொன்றை மேற்கொண்டு, வன்னிக் காட்டுப் பகுதியில் செயற்படும் மிகப் பெரிய அரச சார்பற்ற அமைப்பு தாங்களே என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்குக் காட்ட முனைகிறது. இப்படிச் செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதற்காக மேலும் நிதிகளைச் சேகரிக்க அவர்கள் விளைகின்றனர்
www.Thenee.com

Tuesday, October 17, 2006

இது எப்படி இருக்கு...?


இது எப்படி இருக்கு...?

ஆனந்தசங்கரி மீது சீறிப்பாயும் சிவசேகரப் புலி

ஆனந்தசங்கரி மீது சீறிப்பாயும் சிவசேகரப் புலி
- குளக்கோட்டன்

ஐ.தே.கட்சியைச் சேர்ந்த வர்த்தகரான எஸ்.பி. சாமி என்பவரால் வெளியிடப்படும் ~தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் ~மறுபக்கம் என்னும் பகுதியில் கோகர்ணன் என்னும் பெயரில் பேராசிரியர் சி. சிவசேகரம் பத்தி ஒன்றை வாரவாரம் எழுதிவருகின்றார் (திருகோணமலைக்கு கோகர்ணம் என்ற பெயரும் முன்னைய காலத்தில் வழங்கப்பட்டதால் அவ்விடத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவசேகரம் அப்பெயரை புனைபெயராக கொண்டுள்ளார்)
தன்னையொரு து}ய்மையான மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்ளும் சிவசேகரம் இப்பத்தியில் எழுதிவரும் விடயங்களோ மார்க்சியக் கண்ணோட்டத்திற்கு முற்றிலும் நேர் எதிரானவையாகும். அவரது எழுத்தின் சாரம்சம் புலிப் பாசிசத்துக்கு ஆதரவு, தமிழ் ஜனநாயக சக்திகள் மீது அவது}று, இடதுசாரிக் கட்சிகள் மீது வசைபாடுதல், மனித உரிமை அமைப்புக்கள் மீது கண்டனம் என்பவையாகும். குறிப்பாக ருவுர்சு(து) என்னும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பு மீது காரசாரமான கண்டனங்களை கோகர்ணன் என்னும் பெயரில் தெரிவித்து வருகின்றார். சிவசேகரம் பல ஆண்டுகளாக பல்கலைக்கழக பேராசிரியராகவும் இடதுசாரி புத்திஜீவியாகவும் இருந்தபோதிலும் சாதாரண மக்களின் மனித உரிமைகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நிலையில், அவரிடம் கற்ற மாணவர்கள் சிலர் உட்பட இந்த மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பிற்காக காத்திரமாக செயற்படுவது அவருக்குப் பொறுக்க முடியாததாக இருக்கின்றது.
சிவசேகரத்தின் எழுத்துக்கள் மார்க்சிய அடிப்படையிலான ஆக்கப10ர்வமான விஞ்ஞானப10ர்வமான தர்க்க hPதியான விமர்சனங்கள் அல்ல. எவராவது மீது அல்லது ஏதாவது ஒன்றின் மீது வசைபாடுவது அவரது எழுத்தின் பாணியாகும். அந்த வகையில் அக்டோபர் 01ம் திகதியின் தினக்குரல் இதழின் மறுபக்கம் பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
ஆனந்தசங்கரிக்கு ஐ.நாவின் யுனெஸ்கோ விருதி வழங்கி கௌரவித்ததை பொறுக்கமாட்டாமல் கரித்துக்கொட்டியவர்கள் புலிகள் மட்டுமல்ல சிவசேகரமும் கூட என்பதை தனது து}ற்றலில் வெளிக்காட்டியுள்ளார்.
ஆனந்தசங்கரி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இலங்கை இந்திய அரசுகளின் எடுபிடி என்றும் சாரப்பட சிவசேகரம் தனது அவது}றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆனந்தசங்கரி தமிழ்ப் பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து அரசியல் செய்ய முடியாமல் பலவந்தமாக தடுத்தவர்கள் யாரென்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். ஆனந்தசங்கரி மட்டுமல்ல வேறெந்த தமிழ்க் கட்சியோ இடதுசாரிக் கட்சியோ ஏன் சிவசேகரத்தின் புதிய ஜனநாயகக் கட்சியோ புலிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் வடக்கு கிழக்கில் சுதந்திரமாகச் சென்று அரசியல் செய்ய முடியுமா என்பதை சிவசேகரம் ஒரு முறை கூறட்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் ஆனந்தசங்கரியின் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காமலும் கள்ளவோட்டு போட்டு தமது பினாமிகளான தமிழ் கூட்டமைப்பினரை வெற்றிபெற வைத்ததும் புலிப் பாசிசவாதிகளின் அடாவடித்தனம் என்பதை சாதராண தமிழ் மக்கள் முதல் ஐரோப்பிய ய10னியன் தேர்தல் கண்காணிப்புக் குழுவரை அறிந்திருக்க, இந்த மெத்தப்படித்த பேராசிரியர் அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. து}ங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் து}ங்குபவர்கள்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதற்கு சிவசேகரம் ஒரு உதாரணம்.
ஒரு மனிதனின் நடத்தைதான் அவனது தகுதி நிலையைத் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் ஆனந்தசங்கரியின் வாழ்க்கையில் சில எதிர்மறை அம்சங்கள் இருப்பினும் அவரது வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்கு சேவையாற்றுவதிலும் தமிழ் மக்கள் வாழ்வில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் செலவிட்டுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியில் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த ஆனந்தசங்கரி கிளிநொச்சி மாவட்டத்தின் மிகபின்தங்கிய ப10நகரிப் பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் முழுநேர அரசியலுக்காக ஆசிரியர் தொழிலைத் துறந்து கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்டார். மிகவும் கீழ் மட்ட நிலையில் வாழ்ந்த ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் பகுதியில் கரைச்சி கிராமசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகவும் வந்து அப்பிரதேச மக்களின் தேவைகளை முடியுமானவைர நிறைபேற்றினார். கிளிநொச்சியில் முதல் முதலாக பட்டினசபை அமைப்க்கப்பட்டபோது அதன் தலைவராகவும் சேவைபுரிந்தார்.
1966 ஜனவரி 8ம் திகதி அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி கூட்டரசாங்கத்துக்கு எதிராக இனவாத அடிப்படையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் சமசமாஜக் கட்சியும் பங்குபற்றியதால் அக்கட்சியைவிட்டு விலகி தமிழ் காங்கிரசில் இணைந்து 1970ல் பாராளுமன்ற உறுப்பினரானதுடன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராகி இன்று அதன் தலைவராகவும் இருக்கின்றார்.
பிற்போக்கு தழிழ் தேசியவாத அரசியல் அணியில் அவர் இணைந்தபின் அவரால் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது உண்மையே. பிற்போக்கு தமிழ் தலைமையின் மலட்டு வாய்ச்சவடால் அரசியல் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தராதது மட்டுமின்றி அவர்களை இன்றைய அவல நிலைக்கு இட்டுவந்துள்ளதையும் ஆனந்தசங்கரி இன்று நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தகாலத்தில் சாதித்த முக்கியமான ஒரு சாதனை கிளிநொச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையான தனிமாவட்ட கோரிக்கைக்கு நடைமுறை வடிவம் கொடுக்கவைத்ததே. (தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தமிழரசுக்கட்சியின் தலைமை கிளிநொச்சி மக்களின் நிர்வாக பரவலாக்கலான தனிமாவட்டக் கோரிக்கையை தீவிரமாக எதிர்த்தது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்)
ஆனால் ஆனந்தசங்கரி இன்று தன் அரசியல் வாழ்வின் கடைசி காலகட்டத்திலே இதுவரை தழிழ் மக்களுக்கு ஆற்றாத பெரும்பணியை ஆற்றிவருகின்றார் என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் வாழ்வை இன்று சகல வழிகளிலும் அழித்து நாசமாக்கிவருகின்ற புலி மாபியா பாசிசத்தை தயவு தாட்சணியம் இன்றி எதிர்ப்பதில் ஆனந்தசங்கரி இன்று ஒரு முன்னணிப் போராளியாக திகழ்கின்றார். இதற்காக அவர் பாராளுமன்ற உறுப்பினராக வாய்ப்பை இழந்தது மட்டுமின்றி எந்த நேரமும் பெரும் உயிராபத்தையும் புலிகளால் எதிர்நோக்கிவருகின்றார். இதற்காக ஆனந்தசங்கரிக்கு ஒரு யுனெஸ்கோ விருதல்ல ஓராயிரம் விருதுகளைக்கூட வழங்கலாம்.
ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போல ஆனந்தசங்கரியும் தனது பதவியையும் உயிரையும் பாதுகாப்பதற்காக புலிகளின் காலடியில் மண்டியிருக்கலாம் ஆனால் தன்மானமும் மனச்சாட்சியும் உள்ள ஒரு மனிதர் என்ற வiயில் அவர் அவ்வாறு செய்யவில்லை. புலிகளின் கொடூரச் செயல்களை எதிhக்கும் தெளிவும் துணிவும் அவருக்கு கைவர பெற்றமைக்குக் காரணம் அவரது ஆரம்பகாலத்தில் அத்திவாரமாக அமைந்த இடதுசாரி அரசியலே இதையாரும் மறுத்துவிடமுடியாது.அதேநேரத்தில் அவரை புழுதிவாரித் து}ற்றும் சிவசேகரம் மக்களுக்காக எதனைச் செய்தார் என்பதற்கு உருப்படியான உதாரணம் எதுவுமே இல்லை.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1970களில் சமையல் அறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது அதை முறியடிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாண்வெட்டிக்கொடுத்த போலி தொழிலாளர் நண்பன், நாட்டில் தமிழ் மக்கள் மீது இன ஒடுக்குமுறை தீவிரமடைந்த போது இங்கிலாந்து சென்று வருடக்கணக்கில் தங்கியிருந்த வேஷதார தமிழ்த்தேசியவாதி, கொம்ய10னிஸ் கட்சியிலிருந்தபோது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி 1977 பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேர்தல் வேலை செய்த கொள்கைப்பற்றாளன், யாழ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் தொடங்குவதை எதிர்த்த (காரணம் எதுவாக இருப்பினும்) பிரதேசவாதி, படுபிற்போக்கு அரசியல்வாதி குமார்பொன்னம்பலத்துக்கு அஞ்சலிக்கட்டுரை தீட்டிய தர்க்க சமரசவாதி என சிவசேகரத்தின் அரசியல் செயற்பாடுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.
ஆனந்தசங்கரியின் அரசியல் பணிகளில் பத்து வீதம்கூடத் தேறாத, மக்கள் மத்தியில் ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப்போடாத சிவசேகரம் போன்றவர்கள் சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பதுபோல் குரைப்பது புதுமையானதோ முதற்தடவையன்றோ அல்ல. எல்லா ஏட்டுச் சுரைக்காய்களும் கறிக்குதவாதவைதான்.
(தமிழரசுக் கட்சியில் தனது அரசியலை ஆரம்பித்து, கொம்ய10னிஸ் கட்சியில் புகுந்து அதை சீர்குலைத்துவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக ~நிர்தன பந்திய பக்ஷய கட்சி என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் புதிய ஜனநாயக் கடசியில் இணைந்து அக் கட்சியையும் இழுத்துக்கொண்டு புலிகளின் கூடாரத்தில் நுழைந்த சிவசேகரத்தின் கதையை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

Monday, October 16, 2006

புலிகளின் பிழைத்துவிட்டேன் எனும் பிரகடனம்


புலிகளின் மூர்க்கத்தனமான முன்னரங்க தாக்குதல்
129 படையினர் பலி,283 இற்கு மேற்பட்டோர் படுகாயம்
புலிகளின் பிழைத்துவிட்டேன் எனும் பிரகடனம்


-அர்ச்சுனன்

படையினருடனான பல மோதல்களில் தமது நு}ற்றுக்கணக்கான போராளிகளை இழந்துடன் மாவிலாறு, மூது}ர், சம்பூர், முகமாலை முன்னரங்க காவல் ஆகிய பகுதிகளை இழந்த புலிகள் கடும் விரக்திக்கும், கௌரவ இன்மைக்கும் உள்ளாகியிருந்தார்கள். இதனை ஈடு கட்டுவதற்கு புலிகளின் உயர்மட்ட தலைமை எத்தனை போராளிகளை இழந்தேனும் அரச படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவிப்பார்கள் என நான் எனது கடந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தேன். அது மட்டுமல்லாது புலிகள் படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவிக்காது போனால் ஆனையிறவு முகாமினை படையினரிடம் இழக்கவேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறியிருந்தேன். அதே போன்று புதன் கிழமை (2006-10-11) நாகர்கோவில், முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க காவல் அரனு}டாக முன்னேறிய படையினருக்கு புலிகள் விளைவித்த உயிர்சேதம் படையினரை குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்காவது ஆனையிறவினை கைப்பற்றும் நோக்கத்தினை கைவிடவைத்திருக்கின்றது. அரச தரப்பின் தகவலில் 129படையினர் கொல்லப்பட்டு 283படையினர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 74படையினரின் உடல்கள் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் மேர்பார்வையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினு}டாக படையினரிடம் ஒப்படைப்பதற்காக ஒமந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்பொழுது அந்த உடல்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது இவ்வண்ணம் இருக்க படையினரின் மேலும் 42உடல்கள் தம்;வசம் இருப்பதாகவும் அவைகள் உருக்குலைந்த நிலையில் இருப்பதினால் அவைகளை ஒப்படைக்கமுடியாது என்றும் ஆகவே தாம் அந்த உடல்களை தகனம் செய்தாக புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஒரு முற்றிலும் நம்பகதன்மை இல்லாத ஒரு அறிவிப்பாகும். தம்மிடம் இருந்த படையினரின் 74 உடல்களை உலகத்திற்கு பெருமையோடு காண்பித்த புலிகள் அந்த 42உடல்களை காண்பிக்க முடியாது என கூறுவது சற்று அதிகம்தான். இருந்த போதும் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதின் பின்னர் படையினருக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்ட சமர் இதுவாகும். இந்த தாக்குதலில் கிடைத்த மனபலத்தோடு புலிகள் வியாழக்கிழமை (2006-10-12) காலை கிழக்கில் உள்ள விசேட அதிரடி ப்படையினரின் (ளுpநஉடைய வுயளம குழசஉநஇளுவுகு) கஞ்சிக்குடியாறு முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். படையினரால் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதோடு நான்கு புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் விசேட அதிரடிப்படையினரின் முகாமினை புலிகள் வென்றெடுத்தில்லை என்பது குறிப்பிடதக்தாகும்.

இரு பகுதியினருக்கும் தேவைபடும் இராணுவ வெற்றிகள்
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில கிழக்கு பிரதேசங்களை மீட்டெடுத்த அரச படையினரின் அவசரமே முகமாலையில் அவர்களுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. புலிகளை படிப்படியாக பலவீனப் படுத்துவதினை விடுத்து, அரசு தெற்கில் அரசியல் நடத்துவதற்கு ஏதுவாக ஆனையிறவினை அவசரப்பட்டு கைப்பற்ற முனைந்ததின் பலாபலனே இந்த அதிக உயிரிழப்பிற்கு காரணமாகும். இரு பகுதியினரும் தமது இழப்புக்களை முதலில் குறைத்து கூறிவிட்டு பின்னர் படிப்படியாக தமது இழப்புக்களை ஒத்துக்கொள்வது வழமையாகிவிட்டது. முதலில் இதனை புலிகள் செய்து காட்டினார்கள், தற்பொழுது அரசு அதனை பின்பற்றுகிறது. கடந்த ஓகஸ்ட்மாதம் மூது}ர் கிழக்கில் உள்ள அனைத்து அரச இராணுவ முகாம்களும் தமது கட்டுப்பாடு பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் படையினரின் 10 உடல்கள் தம்வசம் இருப்பதாகவும் புலிகளின் இராணுவ பேச்சாளர் கூறினார். அவையெல்லாம் பொய்யென பின்னர் தெரியவந்தது. அதே போன்று படையினரும் முகமாலையில் 32படையினரே கொல்லப்பட்டதாக கூறினார்கள். தற்பொழுது 74 படையினரின் உடல்களை பெற்றுக்கொண்ட பின்னர் 129 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். முதலில் கூறப்படும் எண்ணிக்கைகள் பத்திரிகையில் வெளிவரும் பொழுது மக்கள் அதனையே முதலில் நம்புகின்றார்கள். அது உண்மையா அல்லது அந்த எண்ணிக்கையினை மாற்றி கூறினார்களா என்பதையெல்லாம் அவதானித்து ஒப்பீடு செய்வதற்கு மக்களுக்கு நேரம் இருப்பதில்லை இதனால் அரசும், புலிகளும் முதலில் தமக்கு சாதகமான எண்ணிக்கைகளை கூறிவிடுகின்றனர். பின்னர் மக்களை ஏமாளிகளாக்குகின்றனர்.

முகமாலையில் முதலில் 5போராளிகளே கொல்லப்பட்டதாக கூறிய புலிகள் பின்னர் 11 போராளிகள் என கூறினார்கள். இறுதியாக தமது தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 30பேர் காயம் அடைந்துள்ளதாக புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார் .அரச தரப்பில் 129படையினர் கொல்லப்படும் பொழுது புலிகள் தரப்பில் குறைந்த பட்சம் 70 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும். 150 பேர் வரையில் காயம் அடைந்திருக்க வெண்டும் படையினர் 283 பேர் காயம் அடைந்திருப்பதாக அரசு கூறுகின்ற பொழுது குறைந்த பட்சம் 500 படையினர் காயம் அடைந்திருக்க வேண்டும். காயம் அடைந்தவர்களில் பலர் மீண்டும் இராணுவத்தில் செயல்பட முடியாத அளவிற்கு அங்கங்களை இழப்பதற்கு வாய்ப்பு உண்டு. கொழும்பில் வீதிகளில் காவல் காக்கும் படையினரை போல் அல்லாது வட கிழக்கில் யுத்த முனையில் போரிடும் படையினர் சிறப்பு பயிற்;சி பெற்ற படையினர் ஆகும். இவர்களில் 129பேரை படையினர் இழந்தமையினை சாதாரணமாக எடுக்கமுடியாது.அ ரசு தமது தரப்பில் 129 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கும் பொழுது குறைந்த பட்சம் 200 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

முன்னரங்க காவல் அரண் மோதல் ஆரம்பம்

கடந்த சிலவாரங்களாக புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி முகமாலை, நாகர்கோவில், கிளாலி ஆகிய முன்னரங்க காவல் அரண்களில் இருந்து எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு வந்தாகவும் தமது தற்பாதுகாப்பிற்காக அந்த பீரங்கி நிலைகளை அழிப்பதற்கு இராணுவம் முயன்றதாக அரச இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் படையினர் ஆனையிறவு முகாமினை கைப்பற்றுவதற்கான ஆயத்;தங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அவதானித்த புலிகள் தமது முன்னரங்க காவல் அரண்களை பலப்படுத்தும் முகமாக மேலதிக போராளிகளை கொண்டுவந்து நிறுத்தியதோடு இராணுவத்தினரின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு தயாராகி இருந்தனர். புலிகள் ஓகஸ்ட்மாதம் 11ஆம் திகதி படையினரின் முகமாலை முன்னரங்க காவல் அரண்களை தாக்கியது போன்று மீண்டும் தாக்கமுனைகின்றார்கள் என எண்ணிய படையினர் புதன் கிழமை காலை 6மணி 30 நிமிடம் அளவில் புலிகளின் முகமாலை, நாகர்கோவில், கிளாலி முன்னரங்காவல் அரணை உடைந்து கொண்டு முன்னேற முயன்றனர். முன்னேறிய படையினரை தமது பகுதிகுள் சிறிது து}ரம் உட்புகவிட்டபின்னர் புலிகள் கடுமையான எறிகணை தாக்குதல்களையும், மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு படையினரை சுற்றி வழைத்து தாக்கியுள்ளனர். இரண்டரை மணித்தியாங்களில் புலிகள் படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவித்தார்கள். அவர்கள் தமது முழு பலத்தினையும் பிரயோகித்து அரசபடையினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என அரச பேச்சாளர் ஹெகலிய ரம்புக்கெல தெரிவித்துள்ளார். புலிகள் மேற்கொள்ளும் ஆயத்தங்களை விமான தாக்குதல் மூலம் சீர்குலைய செய்து வந்த இராணுவத்தினர் அதே போன்று தமது நிலைகளில் இருந்து சற்று பின்வாங்கி புலிகளின் நிலைகள் மீது விமானத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு முன்னேறியிருந்தால் இந்த உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் .விமானப்படையினரின் உதவியினை கோரிவிட்டு பின்னர் படையினர் முன்னேறியிருப்பார் களாயின் உயிர்சேதங்களை குறைத்திருக்க முடியும். அல்லாது விடில் புலிகள் தமது வடபகுதி முன்னரங்க காவல் அரண்களில் போராளிகளை குவிக்கின்றார்கள் என்பதினை அவதானித்த படையினர் அங்கு தாக்குதல் நடத்துவதினை தவிர்த்துவிட்டு கிழக்கில் ஏஞ்சிய பிரதேசங்களை மீட்கும் வகையில் வாகரை,வெருகல் பகுதிகள் மீது தாக்குதலை நிகழ்தியிருக்கலாம். கிழக்கில் இருந்து புலிகளை முற்றாக விரட்டும் திட்டத்தில் இருக்கும் படையினர் இதனை செய்திருந்தால் படையினரின் மனோபலத்தினை தொடர்ந்து உயர்நிலையில் பேணியிருக்க முடியும். இதனை விடுத்து தெற்கில் அரசியல் ஆதரவு தேடுவதற்காக ஆனையிறவு முகாமினை கைப்பற்ற முனைந்தமை அவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் (2006-10-08) ஞாயிற்றுக்கிழமை அரச படையினர் மூது}ரின் மேற்கு பகுதியினை கைப்பற்ற முனையும் பொழ்து புலிகள் அதிக எதிர்ப்பு காட்டாது பின்வாங்கியிருந்தனர். இதற்கு காரணம் மூது}ர் கிழக்கினையும் சம்பூரையும் இழந்ததின் பிற்பாடு தாம் அங்கிருந்து போரிடுவது பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதற்காக அவர்கள் பின்வாங்கியிருந்தனர். இதே போன்று புலிகள் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து பின்வாங்குவார்கள் என படையினர் கணக்கு போட்டமை அவர்களின் தவறாகும் .புலிகள் புண்ணிய பூமியென அழைக்கும் வடபகுதி கட்டுப்பாடு பிரதேசங்களை கிழக்கினை போன்று எளிதில் விடப்போவதில்லை. என்ன விலை கொடுதேனும் கிளிநொச்சியினையும் முல்லதீவினை பாதுகாப்பதற்கு புலிகள் கடும்சிரத்தை எடுப்பார்கள். நாகர் கோவிலில் இருந்து ஆரம்பமாகும் கடற்கரை பிரதேசங்களை புலிகள் படையினரிடம் இழக்க நேரிட்டால் அது ஆனையிறவு, பளை, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆகையினால் நகர்கோவில் அரணிலும் புலிகள் மிகவும் அவதானமாக இருப்பார்கள். புலிகளின் முன்னரங்க காவல் அரண்கள் முகமாலை, நாகர்கோவில், கிளாலி போன்ற இடங்களில் இருந்தாலும் அவர்களின் நீண்ட து}ரம் சுடும் எறிகணை நிலைகளை(யசவடைடநசல pழiவெள) சில கிலோமீற்றர்கள் பின்நகர்த்தியே வைத்துள்ளார்கள். வட பகுதி கல்முனை, பூனைகரி போன்ற இடங்களில் இருக்கும் புலிகளின் நீண்ட து}ரம் சுடும் எறிகணை பீரங்கிகளை புலிகள் படையினரின் முகாம்கள் உள்ள யாழ்நகர், ஊர்காவல்துறை ,மணடைதீவு ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து நிறுத்தியுள்ளார்கள். பூனைகரியில் இருந்து தேவைக்கு ஏற்ப பலாலி விமானதளத்திற்கு இலக்கு வைக்கும் அளவிற்கு அங்குள்ள பீரங்கி தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பளை மற்றும் ஆனையிறவு பிரதேசத்தில் உள்ள புலிகளின் நீண்ட து}ர எறிகணை பீரங்கிகள் பலாலி விமானதளத்தினை ஏட்டும் அளவிற்கு தயார் நிலையில் உள்ளது. இவைகளை செயல் இழக்க செய்து ஆனையிறவினை கைப்பற்றுவதே படையினரின் நோக்கமாகும். இதனை நிறைவேற்றுவதற்கு படையினர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். கிழக்கில் புலிகள் தமது இடங்களை விட்டு சென்றது போன்று வடக்கில் இலகுவாக விட்டு செல்லமாட்டார்கள். புலி தனது பாதுகாப்பிற்காக அவ்வப்போது பதுங்கும் இடத்தினை எப்பொழுதும் பாதுகாப்பாகவே வைத்திருக்கும்.

முகமாலையில் கிடைத்தது வெற்றியல்ல, பிழைத்து விட்டேன் எனும் பிரகடனமே (னுநஉடயசயவழைn ழக ளுரசஎயiஎயட)

கடந்த இரண்டு மாதங்களாக படையினரின் தாக்குதலில் காயம் அடைந்த புலிகள் தனது காயங்களை ஆற்றியபடி இருந்துள்ளார்கள். சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் பாய்ந்துள்ளர்கள். மாவிலாற்றில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல தோல்விகளை சந்தித்த புலிகளுக்கு தம்மை சுதாகரித்து கொள்வதற்கு இவ்வகையான தாக்குதல் ஒன்று கட்டாயமாக தேவைபட்டது. கடந்த இரண்டு மாதங்களில் கொண்டு வந்த ஆயுதங்கள் மூழ்கடிக்கப்பட்டன, கடல் பிரயாணங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின, கிழ்க்கு பிரதேசங்கள் இல்லாமல் போயின,ஆயிரம் போராளிகள் உயிரிழந்தார்கள், இவ்வாறாக பல இழப்புக்கள் புலிகளுக்கு ஏற்பட்டன. இந்த இழப்புக்களினால் புலிகளினால் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் சென்று சாதனைகளை கூறி பணம் சேகரிக்க முடியாமல் போனது. புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்கள் புலிகளின் பலம் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள். குறிப்பாக கிளிநொச்சியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை கொண்டு சென்று நீங்கள் வீணாக சாகடிக்கின்றீர்கள் என வேதனையும் வேகமும் கொள்ள ஆரம்பித்தார்கள், புலிகள் தோல்விகளை சந்திக்கும் வேளையியில் கிளிநொச்சியில் இருக்கு மாணவ மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பயிற்;சி கொடுத்தமை அப்பகுதி மக்களுக்கு மேலும் சினத்தினை உண்டு பண்ணியது. இது மட்டும் அல்லாது புலிகளின் வளர்ப்பு தந்தையாக இருக்கும் நோர்வே அவர்களின் பலம் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தமை புலிகளுக்கு கௌரவ குறைவினை ஏற்படுத்தியது.
இவை எல்லாவற்றையும் ஓரளவிற்கு சமாளிப்பதற்கு புலிகளின் முகமாலை தாக்குதல் உதவியுள்ளது. படையினரின் 74 உடல்களை புலிகள் கிளிநொச்சிக்கு எடுத்து சென்று சமாதான பேச்சாளர்கள் வானு}ர்தியில் சென்றிறங்கும் மைதானத்தில் அடுக்கி வைத்து அதனை மக்களுக்கு காண்பித்து தமது வீரத்தினை செப்பியுள்ளார்கள். கடந்த இரு மாதங்களாக ஐரோப்பிய ,அமெரிக்க (கனேடிய) நாடுகளில் தலை குனிந்து நடந்த புலிகளின் முகவர்கள் தற்பொழுது சற்று தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்து ள்ளார்கள். அடக்கி வாசித்த புலிகளின் சார்பு இணையதளங்கள் இந்த தாக்குதலை ஒரு பாரிய சாதனையாக காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். புலிகளின் போராளிகளுக்கு உளபலத்தினை இந்த தாக்குதல் கொடுத்திருக்கின்றது. பிரதானமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மாவீரர் உரையினை ஓரளவு தலைநிமிர்ந்து பேசுவதற்கு முகமாலை தாக்குதல் உதவியுள்ளது.

மொத்தத்தில் புலிகளுக்கு இருந்த வந்த சில நெருடல்கள் இந்த தாக்குதலினால் இல்லாமல் போயுள்ளன. ஆனால் வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. முகமாலை தாக்குதல் புலிகளுக்கு வெற்றியினை கொடுக்கவில்லை, முன்னேறிய படையினரை தாக்கி விரட்டியடித்திருக்கின்றார்களே தவிர யாழ் பகுதியினை கைப்பற்றவேண்டும் என்கின்ற அவர்களில் இலக்கில் ஒரு இஞ்சினை கூட அவர்களினால் பெறமுடியவில்லை. கடந்த மாதம் முகமாலையில் படையினரிடம் இழந்த ஒரு கிலோமீற்றர் து}ரத்தினை கூட புலிகளினால் மீட்கமுடியாது போயுள்ளது. மாவிலாறு ,மூது}ர், சம்பூர் ஆகிய பிரதேசங்களை படையினர் தாக்கிய பொழுது அவர்களுக்கு அங்கு கிடைத்து வெற்றியாகும், அந்த பிரதேசங்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். புலிகள் கடந்த புதன் கிழமை படையினருக்கு ஏற்படுத்திய சேதங்கள் புலிகளுக்கு இருந்த அழுத்தங்களை தற்காலிகமாக விடுவித்து இருகின்றதே தவிர விடுதலைப்பாதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை. புலிகள் தமது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகளை வெகுவாக குறைப்பித்து காண்பித்து உள்ளார்கள். புலிகளின் ஆதரவு இணைய தளங்களும், விசுவாசிகளும் உண்மைகளை ஜீரணிக்க முடியாது தம்மை தாமே திருப்தி படுத்தி சந்தோசம் கொள்கின்ற ஒரு வகைநோயிற்கு உட்பட்டவர்களாவர்கள். நான் இங்கு கூறப்போகின்ற சில விடயங்கள் அவர்களினால் ஜீரணிக்க முடியாதவைகள் ஆகும்.

அரச தரப்பு புலனாய்வு துறையின் தகவலின் அடிபடையிலும், கிளிநொச்சியில் வசிக்கும் மக்கள் சிலரிடம் பெறப்பட்ட செய்திகளின் அடிபடையிலும் பார்க்கின்ற பொழுது கடந்த புதன் கிழமை முன்னரங்க காவல் அரண் மோதலில் புலிகளுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. முகமாலையில் கொல்லப்பட்ட புலிகளின் 160 உடல்கள் மட்டில் துணுக்காயிலும், கிளிநொச்சிலும் அடக்கம் செய்யப்பட்டதாக (விதைக்கப்பட்டுள்ளது) தெரியவந்துள்ளது. காயம் அடைந்த புலிகளின் 285 போராளிகள் கிளிநொச்சியில் உள்ள அரச வைத்தியசாலையிலும் ,தற்காலிக வைத்தியகூடாரங்களிலும் (அயமநளாகைவ அநனiஉயட உயஅpள) அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி அரச வைத்தியசாலை காயம் அடைந்த புலி போராளிகளினால் நிறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் சக இயக்க போராளிகள் மீதும், அரச படையினர் மீதும் தாக்குதலை மேற்கொள்ளும் போது தேவைக்கு அதிகமாக போராளிகளை பயன்படுத்துவதும், அவர்களில் பலரை வீனாக பலி கொடுப்பதும் வழக்கமாகும். இதனையே முகமாலையில் செய்திருக்கின்றார்கள். காயம் அடைந்த புலிகளின் போராளிகளுக்கு இரத்தம் வழங்குமாறு கிளிநொச்சியில் உள்ள மக்கள் கேட்கப்பட்டு வருகின்றார்கள். புலிகளை போன்று அரச தரப்பும் தமது இழப்புக்களை மூடி மறைக்ககின்ற போதும், இறந்தபடையினரின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பொழுது உண்மைகள் தெரிந்து விடுகின்றன. முதலில் 78படையினரை காணவில்லை என தெரிவித்து இருந்த படைதரப்பு புலிகளினால் 74 உடல்கள் கையளிக்கப்பட்ட பின்னர் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து உள்ளார்கள். படையினர் பொயகளை கூறினாலும் அது பின்னர் தெரியவந்து விடுகிறது. ஆனால் இரும்பு திரைக்குள் இருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் ஏற்படும் இழப்புகள் வெளிவருவது இல்லை. சிலர் அதனை ஆராய்ந்து உணமைகளை வெளியிட்டாலும் அதனை புலிகளின் விசுவாசிகள் மட்டும் விளங்கி கொள்ள மாட்டார்கள். படையினர் தரப்பில் படுகாயம் அடைந்தவர்கள் கொழும்பு இராணுவ வைத்திய சாலையிலும் சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் யாழ் பலாலி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 2006-10-13) பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட இராணுவ தளபதி சரத்பொன்சேகா அவரகள் காயம் அடைந்த படையினரை சென்று பார்வையுற்றுள்ளதோடு, படையினரின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வட பகுதி இராணுவ தலைமையுடன் விவாத்தித்து விட்டு சென்றுள்ளார்.

இருதரப்பினரின் படைபலமும்,இழந்த உயிர்சேதங்களும்
அரச படையினரின் தொகையளவினை புலிகளின் போராளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் படையினருக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் அதிகமானவை அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வட கிழக்கு பகுதிகளில் மக்களை வாக்களிக்க விடாது படையினருக்கு எதிராக கிளைமோர் தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் (2005-01-01) இருந்து இதுவரையில் 664பொதுமக்கள் உட்பட மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அரச படைதரப்பில் இராணுவத்தினர் 624, கடற்படையினர் 104, பொலிசார் 83, ஊர்காவல் படையினர் 36 என்ற எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.புலிகள் தரப்பில் 1546 போராளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கணிப்பீடு இலங்கை தேசிய பாதுகாப்பு துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .(றறற.யெவழையெடளநஉரசவைல.டம) இந்த எண்ணிக்கைகளை முற்றாக மறுக்கமுடியாது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 900 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்ப ட்டுள்ளார்கள். மாவிலாறு, மூது}ர், சம்பூர், தரவை முகாம் மீதான விமானதாக்குதல் ,கரடியனாறு விமானதாக்குதல் போன்ற சம்பவங்களில் புலிகளுக்கு கடும் உயிரழப்பு ஏற்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி புலிகள் யாழ்குடாநாட்டினை கைபற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி இராணுவத்தினரால் முறியடி க்கப்பட்டது. இதில் கடும் உயிழப்பு புலிகளுக்கு ஏற்பட்டதினாலேயெ அவர்கள் அந்த முயற்;சியினை கைவிட்டு இருந்தார்கள்.

தென்கிழக்காசியாவில் உள்ள இராணுவம் பலம் மிக்க நாடுகளான இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாட்டினை காட்டிலும் இலங்கை இராணுவத்தினரில் அதிக படையினர் உள்ளனர். பாகிஸ்தானில் ஒரு மில்லியன் மக்களுக்கு 4 ஆயிரம் படையினரும் இந்தியாவில் 1300படையினரும் உள்ளார்கள். இந்த நாடுகளை காட்டிலும் அதிகமாக இலங்கையில் ஒரு மில்லியனுக்கு மக்களுக்கு 8 ஆயிரம் படையினர் என்ற வகையில் படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்திய இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் இலங்கையில் 150,000 இராணுவத்தினர் உள்ளார்கள். இவர்கள் கனரக ஆயுதங்களை (ஆரடவi-டீயசசநட சுழஉமநவள டுயரnஉhநசள,டழபெ சயபெந யசவடைடநசலஇஅழசவயசளஇடியவவடந வயமௌ யனெ யசஅழரசநன pநசளழnநெட உயசசநைசள) பாவிக்ககூடிய வகையில் பயிற்றப்பட்டுள்ளார்கள். இதனைவிட 20,600 கடற்படையினர் உள்ளனர். மேலும் ஆஐபு-23இ ஆஐஊ 24இ முகசை ளரிநசளழniஉ கiபாவநச-டிழஅடிநச, ஆகிய யுத்த விமானங்களை உள்ளடக்கிய விமானப்படையினர் உள்ளார்கள். இலங்கை பாதுகாப்பு செலவீனங்களுக்கு இதுவரையில் 700 மில்லியன் அமெரிக்க டொடலாரக இருந்த செலவீனம் ஒரு பில்லியன் அமெரிக்க டொஒருக்கு உயர உள்ளது. சம்பூரை கைப்பற்றுவதற்கு மட்டுமாக இரண்டாயிரம் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டு இருந்தார்கள். இந்த பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு 20ஆயிரம் படையினர் மட்டில் சம்பூரையும் அதனை அண்டிய பிரதேசங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புலிகளும் பெருமளவிலான பணத்தினை ஆயுத கொள்வனவிற்காக ஆண்டு தோறும் செலவு செய்து வருகின்றார்கள். இதுவரையில் அவர்களிடம் செயற்பட கூடிய அளவிற்கு விமானப்படையினரோ அல்லது விமானஎதிர்ப்பு பாதுகாப்புகளோ இல்லை. ஆனால் தரைபடையும், கடற்புலிகளும் கடந்த காலங்களில் பலமாக இருந்து வந்துள்ளன. கடற்புலிகளிடம் 10மைல் கடல்வேகத்தில் இருந்து 40மைல் கடல்வேகம் செல்லக்கூடிய அளவிற்கு தாக்குதல் படகுகள் உள்ளன, இவைகளில் 23 மில்லி மீற்றர் இரட்டை குழல் பீரங்கிகளும் ரடார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனை விட பினாமிகளின் பெயர்களில் வர்த்தக கப்பல்கள் இருக்கின்றன. அரச படையினரின் இருக்கும் 150,000 இராணுவத்தினரையும், 20,600 கடற்படையினரையும் ஒப்பிடுகையில் புலிகளிடம் 10,000 ரைவழி போராளிகளும், 2,000 கடற்புலிகளும் மட்டுமே உள்ளார்கள். இந்த எண்ணிக்கைகளை ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த இரு மாதங்களில் புலிகளுக்கு நேர்ந்த உயிரழப்பு அதிகமேயாகும்.
முகமாலை முன்னரங்காவல் அரண்களில் கடந்த புதன்கிழமை காலை ஏற்பட்ட மோதலில் புலிகளை காட்டிலும் படையினருக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதினை அரச பாதுகாப்பு துறையினரே ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதனை புலிகள் தமக்கு வெற்றியென ஏனையோரை நம்பவைக்க முயற்சிக்கின்றார்கள். படையினருக்கு உயிரிழப்பினை ஏற்படுத்துவதினால் தமிழ்ஈழம் கிடைத்துவிடும் என புலிகள் கிளிநொச்சியில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை நம்பவைத்துள்ளார்கள். புலிகளின் ஊடகங்களை தவிர வேறு எந்த செய்திகளும் எட்டாது வாழும் அந்த மக்களுக்கு இது வெற்றி என புலிகள் காட்ட முனைகின்றனர். அவ்வப்போது புலிகளினால் இவ்வகையான உயிரிழப்பினை படையினருக்கு ஏற்படுத்த முடியுமே தவிர ஏனைய பிரதேசங்களை மீட்டெடுத்து அவைகளை பாதுகாத்து வைத்திருக்க முடியமா என்பதினை புலிகள் நீரூபிக்க வேண்டும்
தோழர் வி.விசுவானந்ததேவனின் 20 ஆண்டுகள் நினைவு நாள்

1960களின் பிற்பகுதிகளிலிருந்து மார்க்சிய லெனிசத் தத்துவங்களின் வழிகாட்டலில் தோழர் விசுவானந்ததேவன் இலங்கை .இடதுசாரி இயக்கத்தின் இயங்கு சக்தியாகவும், அமைப்பாளனாகவும், செயற்பாட்டாளனாகவும், தலைமைத்துவப் பண்புகளுடனும் எம்முடன் வாழ்ந்து மறைந்து இன்றுடன் (15-10-2006) இருபது ஆண்டுகளாகின்றன. இவரது கட்சி அரசியலென்பது சண்முகதாசனை தலைமையாகக் கொண்டிருந்த இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்கட்சியில் ஆரம்பித்தது. பின்னர் இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும், இக்கட்சியினது தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியில் முக்கிய நபராகவும் செயற்பட்டார். அதன்பின்னர் மூன்று வருடகால இடைவெளியில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (Nடுகுவு) தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (Pடுகுவு) என்ற இரு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்து, அவ்விரு அமைப்புகளையும் வழிநடாத்தினார்.
29-11-1952 இல் கரவெட்டியைச்சேர்ந்த கல்லுவம் கிராமத்தில் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தோழர் விசுவானந்ததேவன் தனது ஆரம்ப, உயர்தர கல்வியினை உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கற்றார். இவர் உயர்தர வகுப்பு மாணவனாக இருக்கும் காலகட்டத்திலே முற்போக்கு கலை இலக்கியங்களிலும் இடதுசாரிக்கருத்துக்களிலும் மிகவும் ஈடுபாடுகொண்டிருந்தார். இதற்கு வடமராட்சிப்பிரதேசம் நீண்ட காலமாகவே இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தமை முக்கிய காரணம் எனலாம். 1956 ஆண்டு இலங்கை பாராளுமன்ற தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் போட்டியிட்ட தோழர் பொன். கந்தையா அவர்களை வெற்றிகொள்ளவைக்குமளவிற்கு அக்காலத்தில் வடமராட்சியில் இடதுசாரிக்கருத்துக்களின் செல்வாக்கு வலுப்பெற்றிருந்தது.
தோழர் விசுவானந்ததேவன் 1971 ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். இப்பல்கலைக்கழக பிரவேசம் இவரிற்கு தென்னிலங்கை மக்களினதும் மலையக மக்களினதும் பரீட்சயம் கிடைக்க வழிவகுத்தது. பல்கலைக்கழக வாழ்வில் மார்க்சிய லெனிச மாவோயிசத் தத்துவங்;களில் சிறந்த தேர்ச்சியுற்றவராக இடதுசாரி மாணவர்களுடனும் தான் சார்ந்திருந்த கட்சி பிரதிநிதிகளுடனும் இலங்கையின் சோசலிசப்புரட்சி தொடர்பாக சளைக்காது விவாதங்கள் புரிந்தார். இக்காலகட்டத்தில் அரசியல், மக்கள் சார்ந்த வேலைகளில் ஓர் அமைப்பாளனாகவும் செயற்பாட்டாளனாவும் பரிணமிக்கத்தொடங்கினார்.


இதனால், சண்முகதாசனை தலைமையாகக் கொண்டிருந்த இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்கட்சியினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அக்கட்சியிலேற்பட்ட பிளவின் பின்னர்; உருவாக்கப்பட்ட இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியில் தோழர் விசுவானந்ததேவன் மத்திய குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். சண்முகதாசனின் ஒருமுனைவாதப்போக்கு, தீவிர இடதுசாரிப்போக்கு, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையில் தவறான நிலைப்பாடு போன்ற காரணங்களினால் 1972 ஆண்டில் இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்கட்சியினைச் சேர்ந்த வி.ஏ.கந்தசாமி, கார்த்திகேயன், வாட்சன் பெர்னாண்டோ, ஆரியவன்ச, குணகேர, டி.ஏ.நந்துங்க, ஒ.ஏ.ராமையா, சாகுல் ஹமிது போன்றவர்கள் சேர்ந்து இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியை உருவாக்கினார்கள். தோழர் விசுவானந்ததேவன் பேராதனைப் பல்கலைகழகத்தில் பயிலும் காலத்தில் கண்டி கலாச்சாரக்குழுவிலும் நதி சஞ்சிகைக்குழுவிலும் மலையக மக்கள் முன்னணியிலும் அங்கம்வகித்து செயற்பட்டார்.


சிங்கள பௌத்த இனவாதமென்பது இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நிறுவனமயப்பட்டு தமிழ் மக்களை இனரீதியாக ஒடுக்குவதனை தமிழ் பாராளுமன்ற தலைமைகள் தமது தேர்தல் பிரச்சாரங்களுக்காக மாத்திரம் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறான தமிழ் பாராளுமன்ற தலைமைகளின் கீழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமென்பது வென்றெடுக்கப்பட முடியாதது, எனவே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமென்பது முதன்மைப்படுத்தவேண்டுமென்பதை இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியினர் தீர்மானித்தனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்காகவே 1975 ஆண்டில் இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சி தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை உருவாக்கினர்.


இக்காலகட்டத்தில் பாராளுமன்றபாதையை நிராகரிப்பதாகக் கூறி தமிழ் மக்களுக்கென தனிநாடொன்றினை நிறுவுவதற்கு ஆயுதமேந்தி போராடுவதே ஒரேவழியென்ற தமிழ் இளைஞர்களின் குரல்கள் படிப்படியாக ஓங்கி ஒலிக்கத்தொடங்கியிருந்தது. இந்த இளைஞர் குழுக்கள் ஆங்காங்கே இலங்கை பாதுகாப்புத்துறையினருக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களிலும் ஈடுபடத்தொடங்கியிருந்தனர். பின்னர் இந்த இளைஞர் குழுக்கள் தமக்கிடையேயுள்ள முரண்பாட்டினையும் ஆயுதங்களின் துணைகொண்டே தீர்க்க ஆரம்பித்தனர். 1982 ஆண்டு யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தினுள் வைத்து தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தைச்சேர்ந்த சுந்தரம் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு நல்ல உதாரணமாகும்.


தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டம் ஒருபுறம் தமிழ் பாராளுமன்றவாதிகளின் கைகளிலும் மறுபுறம் தமிழ் மக்களைப்பற்றி கொஞ்சமேனும் அக்கறையில்லாத சுத்த இராணுவக்கண்ணோட்டங்கொண்ட இளைஞர்களிடம் சிக்கியிருப்பதனையும் தோழர் விசுவானந்ததேவன் தெளிவாக உணர்ந்தார். இதன்காரணமாகவே 1983 ஆண்டில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (Nடுகுவு) என்ற அமைப்பினை ஸ்தாபித்தார். இவ்வமைப்பில் இவருடன் ஏற்கனவே நீண்டகாலமாக சேர்ந்து வேலைசெய்த சில தோழர்களும் பல புதிய இளைஞர்களும் இணைந்துகொண்டனர். செயலூக்கம் கொண்ட அல்லது உற்சாகங்கொண்டு முன்னேவரும் புதிய இளந்தோழர்களை ஓர் அமைப்பின் முன்னணி நபர்களாக நிறுத்த வேண்டுமென்கின்ற தனது நீண்டகாலக் கருத்திற்கேற்ப தோழர் விசுவானந்ததேவன் Nடுகுவு அமைப்பின் முன்னணியாளர்களாக புதிய இளந்தோழர்களை நிறுத்தினார்.


1983 யூலைமாதத்தின் பின்னர்; பல மடங்குகளாக வீக்கமுற்ற ஏனைய தேசிய விடுதலை இயக்கங்கள் போலன்றி Nடுகுவு மிகவும் சிறியதாகவே இருந்தது. இலங்கை அரச படைகளுக்கெதிரான சிறிய, நடுத்தர, பாரிய இராணுவத்தாக்குதல்களே தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டமாகவும், தமிழீழத்தை நிறுவுவதற்கான முக்கிய வேலைத்திட்டமாகவும் வர்ணிக்கப்படுகையில், மார்க்சிய லெனிசத் சித்தாந்தங்;களின் வழிகாட்டலில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டுமெனக் கூறிவந்த Nடுகுவு அமைப்பு, அக்காலகட்டத்திற்கேற்ப சரியான வேலைத்திட்டங்களை வகுப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காகப்போராடும் எல்லாப்பிரிவுடனும் ஐக்கியப்பட்டு போராடவேண்டுமென்பதை Nடுகுவு கருத்து ரீதியாக ஏற்றுக்கொண்டாலும், தோழர் விசுவானந்ததேவன் போன்ற ஒரு சிலர் அக்கருத்தினை நடைமுறைப்படுத்துவதை Nடுகுவு எதிர்த்தது. பாட்டாளிவர்க்கத்தலைமையிலான கட்சியொன்றினை நிறுவிய பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுவதா அல்லது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுவதினுடாக பாட்டாளிவர்க்கத்தலைமையிலான கட்சியொன்றினை நிறுவுவதா போன்ற விவாதங்களும் Nடுகுவு அமைப்புக்குள் எழுந்தன.


ஏறத்தாழ 1985 ஆண்டின் முழுக்காலப்பகுதியும் Nடுகுவு அமைப்புக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் போராட்டத்திலே கழிந்துபோயிற்று. Nடுகுவு உருவாகி 3 வருட காலத்தில் Nடுகுவு அமைப்புக்குள் உருவாகியிருந்ந தீவிர இடதுசாரிப்போக்கினையும் தமிழ் மக்களின தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய சக்திகளை அரவணைத்து பரந்தளவில் போராடமறுக்கும் கருத்தினையும் தோழர் விசுவானந்ததேவனும் Nடுகுவு அமைப்பின் ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். முரண்பாடுகள் முற்றி இறுதியில் 1986 ஜனவரியில் Nடுகுவு பிளவுற்று தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (Pடுகுவு) என்ற புதிய அமைப்பினை தோழர் விசுவானந்ததேவன் தோற்றுவித்தார்.


குறிப்பாக தோழர் விசுவானந்ததேவனின் வெளியேற்றத்தின் பின்னர் Nடுகுவு அமைப்புக்குள் மீண்டும் இன்னோரன்ன கருத்து மோதல்கள் ஏற்பட்டு மேலும் பல தோழர்கள் வெளியேறினார்கள். சில ஆண்டுகளின் பின்னர்; Nடுகுவு செயலிழந்து போயிற்று. Nடுகுவு செயலிழந்து போவதைத்தவிர வேறுவழியில்லையென Pடுகுவு என்ற புதிய அமைப்பினை தோற்றுவிக்கும்போதே தோழர் விசுவானந்ததேவன் பலரிடம் கூறியிருந்தார்.
தோழர் விசுவானந்ததேவன் மறைந்த பின்னர் Pடுகுவு அமைப்பும் அதிமுக்கியமான இயங்குசக்தியின்றி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்தது. ஏற்கனவே சிறிய அமைப்பாக இருந்த Nடுகுவுஇ Nடுகுவு என்றும் Pடுகுவு என்றும் மிகச்சிறிய அமைப்புகளாகி இரண்டுமே இறுதியில் சிதைவடைந்து இன்று எதுவித அடையாளமற்றுப் போய்விட்டது.
1986 ஆண்டு செப்டம்பர் மாதமளவில் சென்னையில் தங்கியிருந்த தோழர் விசுவானந்ததேவன் ஒரு முக்கிய கருமமொன்றின் நிமித்தம் அவசர அவசரமாக யாழப்பாணம் சென்றிருந்தார். அப்போது புலிகள் வுநுடுழு இயக்கத்தை அழித்து 4 மாதங்களேயாகியிருந்தன. தனது கருமத்தை நிறைவேற்றிய பின்னர், தோழர் விசுவானந்ததேவன், Pடுகுவு தோழர்களான மன்னார் முருங்கன்பிட்டியைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்பட்ட தோழர் ரோய்சன் சந்தாம்பிள்ளை, விசு என்று அழைக்கப்பட்ட தோழர் நரேஷ் சர்மா (இவர் Pடுழுவுநு அமைப்பின் முன்னாள் உறுப்பினர்) ஆகியோர் 1986 ஆண்டு ஒக்ரோபர் மாதம் 15ந் திகதி பொழுதுசாயும் நேரத்தில் ரோலர் வகை படகொன்றில் கரையூரிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டனர்;. நெடுந்தீவிலிருந்து பின்னர் தென்னிந்தியா நோக்கிப் புறப்படுவதே இவர்களது எண்ணமாக இருந்தது. 1986களில் புலிகள் வுநுடுழு இயக்கத்தை அழித்த பின்னர் ஏனைய இயக்கங்களையும் கொன்று குவிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததினால் யாழ்குடாநாட்டின் வடபகுதிக் கரையோரங்களிலிருந்து நேரடியாக தென்னிந்தியா செல்வதை இவர்கள் தவிர்;த்துக்கொண்டனர். இவர்களுடன் நெடுந்தீவை நோக்கி பயணம் செய்யும் ஏறத்தாழ 20 சாதாரண பயணிகளும் அந்த ரோலரில் இருந்தனர்.

மக்களுடன் மக்களாக சாதாரண பயணிகள்போல் பயணித்து, நெடுந்தீவினுடாக தென்னிந்தியா செல்லும் Pடுகுவு தோழர்களின் பயணம் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு சில மணி நேரத்தில் நெடுந்தீவிற்கு போய்ச்சேர வேண்டிய அந்த ரோலர் நெடுந்தீவை வந்தடையவேயில்லை. மப்பும் மந்தாரமுமான பொழுது சாயந்த அந்த மாலைப்பொழுதில் தோழர் விசுவானந்ததேவன் உட்பட வேறு இரு Pடுகுவு தோழர்களுடனும் 20 சாதாரண பயணிகளுடனும் அந்த ரோலர் எங்கோ மறைந்து போயிற்று. மனிதர்களும் தொலைந்து போயினர். ரோலருக்கு விபத்து ஏதாவது நேர்ந்திருந்தால் அல்லது இலங்கை கடற்படை தாக்கியிருந்தால் உடனடியாகவே நிட்சயமாக ஒரு சில தடயங்கள் சிக்கியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இவர்கள் யாரால், எப்படி, எங்கே மறைக்கப்பட்டார்களென்ற உறுதியான தகவல்களோ அல்லது தடயங்களோ இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இவர்களைக் கொன்றவர்களோ அல்லது இவர்களின் கொலைக்கு உடந்தையானவர்களோ அல்லது இவர்களின் கொலைபற்றிய உண்மை தெரிந்தவர்களோ இன்னமும் உயிர் வாழ்கின்றார்கள் என்பதனை நாங்கள் உறுதியாக நம்பலாம். இன்னமும் துப்புத்துலங்காத ஆயிரமாயிரம் இலங்கை தமிழ் மக்களின் கொலைகளுடன் தோழர் விசுவானந்ததேவன் உட்பட இரு Pடுகுவு தோழர்களினதும் மற்றும் 20 சாதாரண பயணிகளினதும் கொலைகளும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன.

இளமையிலிருந்து தனக்காக வாழாமல் மக்களுக்காகமட்டும் வாழந்து, தனது முழு நேரத்தினையும் சொத்துக்களையும் மக்;களுக்காகவே செலவிட்ட தோழர் விசுவானந்ததேவன் மறைந்த 20 ஆண்டில், தோழர் விசுவானந்ததேவனுக்கும் மற்றும் தோழர்கள் ரோய்சன் சந்தாம்பிள்ளை, நரேஸ் சர்மா ஆகியோருக்கும் புரட்சிகர அஞசலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1977களிலே தோழர் விசுவானந்ததேவன் தென்னாசிய புரட்சிகர சக்திகளுடனும் இணைந்து இலங்கையில் அரசியல் வேலைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதை சுயமாக சிந்தித்து, பல தென்னாசிய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டவர். சிறந்த சிந்தனையாளன், புரட்சியாளன் தோழர் விசுவானந்ததேவனை இருபதாண்டுகளென்ன இப்பூமியில் மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்வரை நினைவு கூரலாம்.
தோழர் வி.விசுவானந்ததேவனை என்றென்றும் நினைவில் நிறுத்தும் தோழர்கள்

www.Thenee.com
15-10-2006