Monday, November 27, 2006

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள்

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள் விரோதமானது

- ஞானம் அருட்பிரகாசம்

இலங்கையில் ஏனைய பகுதிகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி மூன்றுமாதங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பாதை மூடப்பட்டதால் யாழ் குடாவில் வாழுகின்ற சுமார் 5லட்சம் மக்கள் மோசமான உணவு,மருந்து,எரிபொருள் மற்றும் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், சுதந்திரமான போக்குவரத்து தகவல் தொடர்பு இன்மையாலும் அல்லப்படுவது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

நோக்கங்கள் வௌ;வேறாக இருப்பினும் இப்பாதையைத் திறக்கும்படி யாழ்ப்பாணமக்கள், விடுதலைப் புலிகள், தென்னிலங்கை மனிதாபிமான சக்திகள் என்பன வேண்டுகோள் விடுத்தவ்ணம் உள்ளன. இப்பொழுது இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் வாசிங்டனில் கூடிய பொழுது இவ்வாறானதொருவேண்டுகோளை விடுத்துள்ளன.
ஏ - 9 வீதிய10டாக பொருட்கள் கொண்டு செல்லும் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடுவதையும், தமக்கு விரோதமானவர்களைக் கடத்துவதையும் கைவிடுவதாக உறுதியளித்தால் பாதையைத் திறக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது. பலிகளைப் பொறுத்தவரை இவை இரண்டையும் அவர்கள் என்றுமே கைவிடப்போவதில்லை. அப்படிப்பார்த்தால் இப்பாதை என்றுமே திறக்கப்படப்போவதில்லை என முடிவாகின்றது.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது தானா?
புலிகள் அமைப்பு ஒரு பாசிச இயக்கம். அதற்கு அதன் சொந்த மக்களைப் பற்றியே எந்தவித அக்கறையும் கிடையாது. தேசியஇன விடுதலை என்று சொல்லிக்கொண்டு தனது சொந்த இன மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ள இயக்கம் என்றால் அது விடுதலைப் புலிகள் மட்டும்தான். சமீபத்திய ஆய்வொன்றின்படி இலங்கை இராணுவம் கொலை செய்த தமிழ் மக்களைவிட புலிகள் கொலை செய்த தமிழ் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு எனத் தெரியவருகின்றது. (அரசாங்கப் படைகளுடன் போரிட்டு மடிந்த புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை)

எனவே இப்பாதை திறப்பு விவகாரத்தில் அரசாங்கம் தமது கட்டப்பாட்டிலிருக்கும் தனது சொந்தக் குடிமக்களான 5 லட்சம் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினையை எவ்வாறு கையாளுகின்றது என்பதே கேள்வியாகும். ஏனெனில் இம் மக்கள் 1995 அக்டோபர் 30ம் திகதி புலிகளால் பலவந்தமாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் புலிகளின் வேண்டுகோளை ஏறறு வன்னி செல்லாமல் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்துக்கு வந்து மீளக் குடியேறியவர்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.
ஏ- 9 பாதை மூடப்பட்டிருப்பதால் புலிகளுக்கு மாதாந்தம் கிடைத்துவரும் சுமார் 30 கோடி ரூபா இழப்பு ஏற்படும், அது புலிகளைப் பாதிக்கும் என அரசாங்கம் தான் பாதையை மூடிவைத்திருப்பதற்கு நியாயம் கூறுகின்றது. புலிகளின் மாதாந்த வருமானம் ஆக இந்த 30 கோடி ரூபா தானா? இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதும் சிரிப்புக்கிடமானதுமான கருத்தாகும்.

புலிகளின் வருடாந்த நிகர வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாக்கள் என மேற்குநாட்டு உளவு அமைப்புகளே கூறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற லட்சக் கணக்கான தமிழ் மக்களிடமிருந்து புலிகள் மிரட்டிக் கறக்கின்ற பணம் கோடிக்கணக்கான ரூபா. இதுதவிர புலிகள் சர்வதேச hPதியாக நடாத்துகின்ற போதைவஸ்து வியாபாரம், ஆயுத வியாபாரம், கப்பல் போக்குவரத்து வியாபாரம் என்பனவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபா (முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கு கூலியாக மேற்கு நாடொன்றிடமிருந்து பலநு}று கோடி ரூபாவை புலிகள் பெற்றதாக கூறப்படுகிள்றது)
இதுதவிர நோர்வேயும் வேறு சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களும் புலிகளுக்கு ஒழுங்கான முறையில் பணப் பட்டுவாடா செய்துவருகின்றனர்.

கொழும்பு, யாழ்பாணம் போன்ற அரசாங்கக் கட்டுப்பாட்டு நகரங்களிலும் ஏன் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும்கூட புலிகள் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் பலகோடி ரூபா முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். (இலங்கையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து இராணுவ ரகசியங்களை புலிகள் கறப்பதும் அண்மையில் அமெரிக்க அதிகாரிகளுக்கே புலிகள் லஞ்சம் கொடுக்க முற்பட்டதும் புலிகளின் அசுர உள்நாட்டு வெளிநாட்டு பணபலத்துக்குச் சான்றாகும்) கனடாவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பெரும் சுப்பமார்கேட்டுக்களை புலிகள் நிர்மாணித்திருக்கிறார்கள்.
கனடாவில் கடந்த லிபரல் அரசாங்கத்தில் அதிமுக்கிய பதவி வகித்த ஒருவரின் மகன் நாடாத்தும் சர்வதேச கப்பல் கம்பனி ஒன்றில் புலிகளும் ஒரு பங்குதாரர்கள் என புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

இதுதவிர புலிகளின் முகவர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உலகம் முழுவதும் பலகோடி ரூபாவை புலிகளுக்காக திரட்டி வருகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் வன்னிப் பிரதேசத்தில் மக்களுக்கு அரசாங்கமே நிவாரணப்பொருட்களை அனுப்புகின்றது. புலிகள் அங்குள்ள கிராமசேவகர்கள் மூலம் கூடுதலான ஆட்களின் பெயர்களை பதிவு செய்து தமது உறுப்பினர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுப்பது ரகசியமானது அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீதிகள், குளங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என எல்லாவற்றினதும் அபிவிருத்திக்கு அரசாங்கம் அனுப்பும் பணத்தை புலிகளே சூறையாடுகிறார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயற்படும் அரச ஊழியர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்பட, அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்குகின்றது.
இத்தனை வழிகளிலும் புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் எத்தனைகோடி ரூபாவாக இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள். இவையெல்லாவற்றையும் அரசாங்க நியாயப்படி நிறுத்தவல்லவா வேண்டும்.உண்மையில் புலிகளின் மொத்த மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ஏ-9 வீதியால் அவர்களுக்கு கப்பமாக கிடைக்கும் 30 கோடி ரூபா அவர்களது மாலை நேர தேனீர் செலவுக்கு ஒப்பானது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே ஏ-9 பாதையை அரசாங்கம் மூடிவைத்திருப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கம் கூறுவதுபோல புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் அல்ல. இராணுவ hPதியான காரணங்கள் இருக்க வேண்டும்.

புலிகளைப் பொறுத்தவரையில் ஏ- 9 வீதியைத் திறப்பதால் வரிப்பணம் கிடைப்பது மாத்திரமின்றி போதிய பொருட்களைப் பெறமுடியும் என்பதும் மாத்திரமின்றி தென்னிலங்கைக்கும் யாழ்பாணத்திற்கும் தமது புலனாய்வாளர்கள், தற்கொலை குண்டுதாரிகள், ஆயுதங்கள் என்பனவற்றை கடத்த முடியும் என்பதும் பிரதானமானது. ஆனால் ஏ - 9 பாதை இல்லாவிட்டாலும் (சற்றுச் சிரமம் இருப்பினும்) புலிகளால் அவற்றைச் செய்ய முடியும் என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும். எனவே ஏ - 9 பாதையை மூடியதன் மூலம் பொருளாதார hPதியிலும் இராணுவ hPதியிலும் புலிகளை முடக்கிவிட முடியும் என அரசாங்கம் கருதுமாக இருந்தால் அது தப்பான கருத்தாகும்.

உண்மையில் ஏ- 9 பாதையை மூடியதால் புலிகளைவிட மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யாழ் குடாநாட்டு மக்களே. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அங்கு பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டுள்ளது. போதாததற்கு புலிகளுக்கு லட்சகணக்கில் கப்பம் செலுத்தும் யாழ் வர்த்தகர்கள் இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து பொது மக்களிடம் ஈவிரக்கமின்றி கொள்ளை லாபம் அடித்துவருகின்றனர். வெளிநாட்டு வருமானம் உள்ள யாழ் குடாநாட்டு மக்களே இன்றைய சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லாடுகையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் கதி என்ன? அரசாங்கத்தின் இந்தவகையான சமயோசிதமற்ற, மக்கள் விரோத செயற்பாடுகள் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் விரக்தியையும் கோபத்தையும் உண்டு பண்ணியுள்ளதுடன், அவர்களை அரசுக்கு எதிராக திரும்பவும் வைத்துள்ளது. புலிகளின் செயற்பாடுகளுக்காக யாழ் குடாநாட்டு மக்களை அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் பழிவாங்குவதற்கு முற்படுவதுபோல் தெரிகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கும் அதன் இன்றைய வளர்ச்சிக்கும் காரண கர்த்தாக்கள் யாழ் குடாநாட்டு மக்கள் அல்ல. புலிகளை வளர்த்துவிட்டவர்கள் இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே.

தமிழ் மக்கள் தமது தேசியப் பிரச்சினைகளை சாத்வீகமாக தெரிவித்தபோது அதை தீர்ப்பதற்கு பதிலாக இராணுவ ஒடுக்குமுறையை பிரயோகித்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது அரசாங்கமே. குறிப்பாக 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர், ஜெயர்த்தனாவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே இன்றைய யுத்தத்தின் பிரதான சூத்திரதாரி ஆகும். இந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் என்ற உலகின் மிகக் கொடூரமான பாசிச இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கத்தின் தோற்றத்தினாலேயே செயற்பாடுகளினாலும் உண்மையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் அல்ல, தமிழ் - முஸ்லீம் மக்களே. இந்த இயக்கத்தின் செயற்பாடுகளால் தமிழினம் தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து நாடோடி அகதிகளாக மாறியுள்ளதுடன் சாதாரண மனித வாழ்வையும் இழந்துள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெறுமனே இராணுவ hPதியான நடவடிக்கைகளால் புலிகள் இயக்கத்தை ஒழித்துவிடலாம் என கருதிச் செயற்படுவது ஒருபோதும் வெற்றியளிக்ப்போவதில்லை. ஏனெனில் புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கமாக இருந்த போதிலும் அவர்கள் தமது இருப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையையே பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாகவே அரசின் தவறான செயற்பாடுகளினாலும் தமிழ் மக்களின் கணிசமான ஒரு பகுதியினர் புலிகளின் பக்கமே நிற்கின்றனர். அத்துடன் இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற போர்வையில் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக சர்வதேச சக்திகளுகம் நுழைந்துவிட்டன.

எனவே உண்மையில் புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை அவர்களது பிடியிலிருந்து விடுவிக்கவும் நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்குமாக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண்பதே. அரசியல் தீர்வுடன் இணைத்து புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாளுமாக இருந்தால் வெற்றி பெறுவது நிட்சயம். அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் இவ்வாறான ஏ- 9 வீதி மூடுவதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளை கைவிடவேண்டும். எது எப்படியிருப்பினும் தனது பிரசைகளான யாழ் குடாநாட்டு மக்களுக்கு நாட்டின் ஏனைய பகுதி மக்களைப் போல பொருட்களை தாரளமாக கிடைக்கச் செய்வதும், அவர்களது சுதந்திரமான போக்குவரத்தை உத்தரவாதம் செய்வதும் புலிகளின் கைகளில் அல்ல, மாறாக அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதை அரசாங்கம் எக்காரணம் கொண்டு தட்டிக்கழித்துவிட முடியாது.

Thanks: Thenee.com

Thursday, November 23, 2006

உதவி கோருகிறார்கள்!

உதவி கோருகிறார்கள்
- நமது நிருபர்

ஜேர்மனியிலுள்ள தமிழ் நண்பர்கள் பரோபகார சிந்தையுள்ள இலங்கை தமிழ் அன்பர்களிடமிருந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தமது நண்பர் ஒருவரின் வைத்திய செலவுக்காக உதவி கோருகிறார்கள். பரநிருபசிங்கம் விஜயரெட்ணம் ஸ்ரீரங்கன் என்னும் இயற்பெயருள்ள இந்த நண்பர், நோய் அதிகரிக்கும் நேரங்களில் ப.வி.சிறீரங்கன் அல்லது எண் சோதிடரின் ஆலோசனைப்படி மாற்றிய ப.வி.ஸ்ரீரங்கன் என்னும் பெயர்களால் இணையத்தளங்களில் நீண்ட கட்டுரைகள் எழுதி வருபவராவர்.

மேற்படி நண்பர் நீண்ட காலமாக ~புலிக்குனியா தேனீபோபியா என்னும் விலங்குகளை மட்டும் பீடிக்கும் ஒருவித மனநோயினால் அவதிப்பட்டு வருவதாகவும், ஜேர்மனியில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எவையும் பலன் தராமையால் இறுதி முயற்சியாக கேரளாவிற்கு வைத்தியத்திற்கு அழைத்துச் செல்ல அன்னாரது நண்பர்கள் விரும்புவதாகவும் அதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படுவதாகவும் பரோபகார சிந்தையுள்ள நண்பர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.

ஸ்ரீரங்கனின் நோய்குணம் பற்றி மேலும் அறியவருவதாவது, இவர் நீண்ட காலமாக மேற்படி நோயினால் பீடிக்கபட்டு வந்துள்ளதாகவும், இவ்வருட நடுப்பகுதியிலிருந்து இந்நோய் அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. புலி எதிர்ப்பாளர்களை கடுமையாக சாடிவந்த இவர் திடீரென புலிகள் தன்னைக் கொலை செய்ய வருவதாக கடடுரைகள் எழுதி வந்ததாகவும், பின்னர் வன்னிக்கு வர டிக்கற் தருமாறு கோரி இணையத்தளங்களில் கட்டுரைகள் எழுதியதாகவும் கூறப்;படுகிறது. இவ்வாறான கட்டுரைகளை இவர் இரவில் திடீரென நித்திரையிலிருந்து எழும்பி எழுதுவதாகவும், குறிப்பாக 31.5.2006 அன்று நடுச்சாமம் 2.11 மணி என இவரே குறிப்பிட்டு ~என்னைத் தேடும் புலிகள் என்ற தலைப்பில் தமிழ் அரங்கம் என்னும் இணையத்தளத்தில் இவர் எழுதிய கட:டுரையை இவ் இணையத்தளத்தில் இப்போதும் பார்வையிடலாமென இவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.

மேற்படி புலிகள் தன்னைக் கொலை செய்ய மிரட்டுவதாக ஸ்ரீரங்கனின் முறைப்பாடுதலைத் தொடர்ந்து, புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் பொறுப்பாளர்களுடன் அன்னாரின் குடும்பத்தினரும், நண்பர்களும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இப்படியொரு நபரைப்பற்றி தாம் முன்னர் ஒருபோதும் கேள்விப்பட்டது இல்லை எனவும், தாம் கேள்விப்படாத ஒருவரிற்கு எதிராக தாம் எவ்வாறு கொலைப்பயமுறுத்தல் விடலாம் என கேட்டதாகவும் தெரிய வருகிறது.

மேற்படி நண்பரிற்கு கேரள வைத்தியம் பலனளிக்கும் பட்சத்தில் தமிழ் அரங்கம் இணையத்தள ஆசிரியரையும் சிகிச்சைக்காக கேரளாவிற்கு அழைத்துச்செல்ல அவர்களது நண்பர்கள் விரும்புவதால், தாராள சிந்தையுள்ளவர்கள் சமூக நலன் கருதி மனம் உவந்து உதவுமாறு கோரப்படுகிறார்கள்.

Sunday, November 05, 2006

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப்

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப் புளுகர்கள்

பேரறுஞர்; கல்லாநிதி கியூறியஸ் ஜி

புலிகள் ஆபத்தான பிராண்pகள் என்றால் அவர்களின் ஆதரவாளர்கள் இன்னொரு ரகம்,,, வினோதமான பிராண்pகள், இவர்களை எல்லாம் விழுங்கி விடக் கூடிய ரகம் ஒன்றுணடு,, அது தான் புலிகளின் ஊடகங்களில் அரசியல் ஆய்வு எழுதும் ஆய்வாளர்கள், விஷ ஜந்துக்கள்? வினோதமான பிராண்pகளைத் தொற்றும் விஷக் கிருமிகள், சீமான்கள் வஞ்சகமில்லாமல் வாசிப்பவன். கேட்பவன் எல்லாம் காதில் பூ வைத்த இளிச்சவாயன் என்ற நினைப்பில் கவலையே இல்லாமல் எழுதிக் குவிப்பார்கள், அல்லது வானலைகளில் முழங்கித் தள்ளுவார்கள், இணையம். வானலை. அச்சு வழி ஊடகங்கள் எல்லாம் தமிழ் எழுத்துடன் கூடிய கணனி வைத்திருக்கும் எல்லோரையுமே அரசியல் ஆய்வாளர்கள் ஆக்கித் தொலைத்திருக்கின்றன, அதற்குள் சில மாஜிப் பேராசிரியப் பெருமக்களும் புனைபெயருக்குள் ஒளிந்திருந்து எம் பெருமான் கடைக்க பார்வை திரும்பாதா என தினமும் குரல் எழுப்புவதாக வேறு வதந்திகள்,

புலிகளை விமர்சிப்பவர்களுக்குத் தான் உயிர்ப் பயம் என்று இல்லை, புலிகளுக்கு ஆதரவாக எழுதித் தொலைப்பதைக் கூட சொந்தப் பெயரில் எழுதப் பயந்து புனைபெயரிற்குள் மறைந்திருப்பவர்களும் கூட ஏதோ தங்களை சிங்கள புலனாய்வாளர்;களோ. ஒட்டுக்குழுக்களோ மண்;டையில் போட்டு விடக் கூடும் என்ற பயத்தில் தான் வாழுகின்றனர்;, இவர்;களுடைய ஆய்வுக் கட்டுரைகள்,, இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் தான், சம்பூரில் புலிகள் அடி வாங்கி தப்பியோடிய முழுப்பூசண்pக்காயை சோற்றில் புதைத்து டிசம்பூரில் பின்வாங்கல் நோர்;வேயை பொறிக்குள் சிக்க வைத்த புலிகளின் தந்திரம் என்று புதினத்தில் ஆய்வுக்கட்டுரை எழுத இவர்;களால் மட்டுமே முடியும்,
புலிகளின் ஆதரவாளர்;களை அழுது கொண்;டே சிரிக்க வைத்து குஷிப்படுத்தி புல்லரிக்க வைப்பது தான் இவர்;களின் முதன்மையான நோக்கம், அப்புறமாய். அதை தமிழ்ச்செல்வனோ மற்றும் முக்கியஸ்தர்;கள் வாசித்து தங்களைப் பாராட்ட வேண்;டும் என்றோ. அல்லது தலைவரின் காதில் போட்டு (பின்னே என்ன தலைவருக்கு இதெல்லாம் வாசிக்க எங்கே நேரமிருக்கிறது இங்கிலிசுப் படம் பார்;க்கவே அவருக்கு நேரம் போதாது,) வன்னிக்கு வரவழைத்து தேசப்பற்றாளராக்க வேண்டும் என்ற நோக்கம், அப்புறமாய். இதை வைத்தே காசு பண்ணும் ஒரு கூட்டம்,, கனடாவில் பக்கத்திற்கு நு}று டொலர்; என்று ஆலையில்லா ஊரில் சக்கரையாக பத்திரிகைகளுக்கு ஆய்வு சப்ளை பணணிpய யாசகனும் உண்;டு, மற்றும்படி முயக்கம். ஈனநாடு எல்லாம் இழுக்க இழுக்க இறுதிவரை,,,

சிரைச்சேதம் செய்யப்போன கடையில் கிடைத்த ஈனநாட்டில்,, சம்பூரில் யுத்தத்தில் பெரும் திருப்பம்,, தலையங்கம்? புறமுதுகு காட்டியது கூட புலிகளின் புத்திசாலித் தனத்தால் எழுந்த திருப்பம்,, ம்,, சிக்கல் என்னவென்றால்,, ஒரே விசயத்திற்கே புலிகளின் ஒவ்வொரு ஊடகமும் தன் புத்திக்கெட்டியவரையில் வியாக்கியானம் கொடுக்கும்,, ஆய்வாளர்;களின் அளப்பு இன்னொரு பக்கம்,, ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும், அது பொதுவானதாக இருக்க வேண்;டும் என்ற கவலை யாருக்கும் இல்லை,
உதாரணம்,,, வெகுது}ரம் போகத் தேவையில்லை,, நம்ம நிதர்;சனம் இருக்கிறதே,,,
புலிகள்; கண்;டி வீதியைத் திறக்கும்படி ஜெனிவாவில் கேட்டுத் தான் பேச்சுவார்;த்தையை முறித்துக் கொண்;டு வந்தார்;கள்,, குடாநாட்டு மக்கள் பட்டினிச் சாவை எதிர்;நோக்குவதாகக் கூறி. அரசியல் தீர்;வு பற்றிய பேச்சே இல்லாமல் வெற்றிகரமாக பின்வாங்கினார்;கள், குழந்தைகள் இராணுவத்தினரின் எச்சில் சாப்பாட்டுக்காக தவம் கிடப்பதாக வீரகேசரி தகவல் வெளியிட்டது, மொத்தத்தில் குடாநாடு எதியோப்பியாவின் நிலைக்கு வருவது போன்று தான் எல்லா ஊடகங்களும் விளாசித் தள்ளின, தாங்கள் தமிழ் மக்களிடமும் வர்;த்தகர்;களிடமும் பறிக்கும் வரிகளை எல்லாம் மூடி மறைத்து. மக்களின் அவலத்தை நீக்க பாடுபடுவது போல. இந்த பட்டினிச் சாவு அபாய அறிவிப்புச் சங்கு உலகெங்கும் புலிகளால் ஊதப்பட்டது,
இதையெல்லாம் பொருட்படுத்தாமல். இலங்கைக் கடல் நீர்; சிங்களவனுக்கு மட்டும் தான் சொந்தமா சிங்களவன் ஏ9 பாதையைப் பூட்;டி கடல் வர்;த்தகம் மூலமாக பல கோடி தமிழரின் பாணத்தைச் சுருட்டுகிறான் என்று. புலிகளின் கூக்குரல் எல்லாம் அந்தப் பணத்தை தாங்கள் சுருட்ட முடியவில்லையே என்ற அங்கலாய்ப்புத் தான் என்று புட்டுப் புட்டு வைத்திருக்கிறது, தற்போது எட்டுக் கப்பல்களின் உண்வு கொண்;டு செல்லப்படுவதையும் அதன் மூலம் சிங்களவன் மாதம் எட்டாயிரம் கோடி ருபா சம்பாதிப்பதாகவும் பாதையைத் திறந்தால் தமிழ் வர்;த்தகர்;கள் பத்துக் கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பார்;கள் என்றும் நிதர்;சனம் அழுதிருக்கிறது, (அருவருக்கத் தக்க வகையில் இந்த ஆய்வுக் கட்டுரையில் வந்த தாயின் தகாத உறவுகள் பற்றிய உரையாடல் ஒன்று பின்னர்; நிதர்சனத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது)
ஒருபுறத்தில் புலிகள் உண்வு போகவில்லை. பட்டினிச் சாவு தான் முடிவு என்று பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு வர. மறுபுறத்தில் நிதர்;சனம் லாப நட்டக் கண்க்குப் பார்க்கிறது, இது தான் புலி ஆதரவு ஆய்வாளர்;களின் இலட்சண்ம், முன்பு அரசியல் அவதானிகள் தான் எங்கும் இருந்தார்;கள், நல்லு}ர்;திருவிழாவில் நேர்முகவர்ணர்னை செய்யும் வானொலிக்காரர்;கள் மாதிரி,, எம் பெருமான் இப்போது தெற்கு வீதியில் வலம் வந்து கொர்;டிருக்கிறார்;, பக்தகோடிகளின் அரோகரா கோஷம் விண்;ணை;ப் பிளந்த வண்ண்ம் இருக்கிறது, அந்தக் கோஷத்திலே. வானமும் பெருக்கெடுக்குமோ என்ற பயம் தரும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்த வண்ண்ம் இருக்கின்றன, மக்கள் வெள்ளம் கடல் அலை போல மோதிக் கொண்;டிருக்க. தேர்; கப்பல் போல மிதந்து வரும் காட்சியைக் காணக்; கோடி கண்;கள் வேண்;டும்,, இதோ,, பக்தை ஒருவர்; மலர்;களை தட்டிலிருந்து வீசிய வண்ணம்…..
ம்,, ரேடியோவைக் கொஞ்சம் கூட்டி வைத்து அங்கப்பிரதிட்டம் செய்ய வேண்டியது தான்,, முடிந்தால். முன்னால் விபூதியையும் வைத்து உண்டியலையும் வைத்து விடலாம், பக்தியை வானலைகள் ஊடாக அனுப்பிய சாதனை அது,
பின்னால் ஆய்வாளர்;கள் வந்து விட்டார்;கள்,, செய்தியை ஆராய்ச்சி பணணி பகுத்தும் தொகுத்தும் தருவதற்கு,, எம்,ஜி,ஆர்; விஞ்ஞானியாகி மின்னலைக் குளிசைக்குள் அடைத்த விளையாட்டு மாதிரி,, செய்தியை சோதனைக் குழாய்களுக்குள் போட்டு உப்பும் புளியும் கலந்து கொதிக்க வைத்து குடுவையில் ஒடுங்க வைத்து,,, செய்தியும் அதன் மீதான பகுப்பாய்வும் புல்லரிக்க வைக்கும்,
இப்போது அது கூர்;ப்படைந்து. செய்தியில் புலனாய்வு கூட நடக்கிறது, சி,ஐ,டி மூசா மாதிரி. பூதக்கண்ணாடியுடன் செய்தியை உருப்பெருக்கும் வித்தை நடக்கிறது,முன்பு இதற்கெல்லாம் மொத்தக் குத்தகை ஏஜண்;டாக மாமனிதர்; சிவராம் இருந்தார்;, அவர்; தான் இதை முழுநேரத் தொழிலாகவே செய்து வந்தவர்;, இப்போது மூலைக்கு மூலை ஆளாளுக்கு கிளம்பி,, நுண்ணாய்வு. புலனாய்வு என்று புலிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் வியாக்கியானங்களும் பொழிப்புகளும் து}ள் பறக்கிறது,, பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரைக்கும், இவர்;களுக்கு செய்தி மூலம் சப்ளை செய்யும் அண்;டப்புழுகர்;கள் பொயிண்;ட் எடுத்துக் கொடுப்பார்;கள், துக்ளக்கின் அரசில் மந்திரிப் பதவிக்காக கட்சி மாறியவர்;கள் இலாகா இல்லாத மந்திரிகளாக எப்படி இருப்பது என்று கேட்ட போது. திறப்பு விழாக்களுக்கு சென்று வாருங்கள் என்ற மாதிரி. தேசியத் தலைவரின் தளபதிகளும். யுத்த நிறுத்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் துணை;ப்படைகளின் கிறாஜுவேஷன் விழாக்களில் பன மட்டைகளைப் பரிசளித்து பேருரை நிகழ்த்தும் போது. சிங்கள அரசு முதல் இந்தியா. சர்;வதேச சமுகம் வரைக்கும் எச்சரிக்கை விடுத்து. தலைவரின் தீர்;க்கதரிசனத்தை புகழ்ந்து விளாசுவார்;கள், தமிழ்ச்செல்வன் முதல் பாலகுமார்;. பால்ராஜ். சூசை. பொட்டம்மான் என்று நினைத்த மாதிரிப் முழங்கித் தள்ளுவார்;கள், அப்புறம் நம் முப்படை. விமானப்படை. ஈருடகப் படை புகழ் இளந்திரையன் பாதுகாப்புப் கவுன்சில் கதை மாதிரி நாளுக்கொரு கதையைக் கிளப்ப,,, கடைசியில் வந்து இறங்கிய குழந்தைகள் படைச் சேர்;ப்புத் தடுப்புச் சட்டம் என்ற பெரிய புழுகுக் குண்;டு வரைக்கும்,,,

இந்த ஆகாயப் புழுகுக் கூட்டம் ஈரைப் பேனாக்கி. பேயைப் பெருமாளாக்கும் தொழிலில் அமோகமாய் ஈடுபடும், புலிகளின் விமானத் தாக்குதல் பற்றிய இந்த ஆய்வாளர்;களின் வர்ண்னைகளைக் காது கொண்;டு கேட்க முடியாது, அப்புறமாய். அது புஷ்வானமானதும் இவர்;கள் வெட்கமேயில்லாமல் குழந்தைகள் தடுப்புச் சட்டத்தை ஆதாரம் காட்டி. புலிகள் இப்போது பிள்ளைகளைக் கடத்துவதில்லை என்பதால் சர்;வதேச சமுகம் புலிகளை அங்கீகரிக்க வேண்;டும் என்று ஆய்வு செய்யப் புறப்படுவார்;கள், அப்புறமாய்,, தட்டச்சித் தட்டச்சித் தினவெடுத்த தோள்களுக்கு வீரம் பிறந்தால்,, இருக்கவே இருக்கிறது திறந்த கடிதம்? வாழ்க்கையில் மொட்டைக்கடிதம் தவிர வேறெதுவும் எழுதியறியா ஆய்வாளர்;கள் ரொனி பிளயருக்கு ஓர்; திறந்த கடிதம். கோபி அர்ண்ண்னுக்கு ஓர்; திறந்த கடிதம் எல்லாம் எழுதி புலிகளை கொக்கென்று நினைத்தாயோ. கொங்கண்வா? என்று எச்சரிக்கை விடுவதைப் பார்;த்தால்,, அடி வயிற்றில் பயம் பற்றிக் கொள்ள,, அட,, சவால் விட்டிருக்கிறானே பாவி,, என்ன நடக்கப் போகிறதோ என்று கலங்கிப் போயிருப்பீர்;கள், ஆய்வாளரோ அடுத்த வாரம் தமிழினத் துரோகி கருhணாநிதிக்கு ஒரு திறந்த மடல் வரையப் போய் விடுவார்;,,

உடன்பிறப்பே,, ஈழத்தமிழனின் இரத்த வெள்ளத்தை கண்;ட பின்னாலும் கரையாத இரக்கமில்லாத இதயமோ உனக்கு,,
இந்த வெத்து வேட்டுக் கூட்டத்தில் ஒன்று சமீபத்தில் அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவுக்கு சவால் விட்டிருக்கிறது, எப்,பி,ஐயின் தரம் குறைந்த புலனாய்வு அணுகுமுறை என்ற தலைப்பில் நிதர்;சனத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில்,, வள்ளிபுனத்தில் நடைபெற்ற குண்;டுவீச்சில் இறந்த உயிர்;களைக் கண்;டு உணர்;ச்சி பொங்கிய அப்பாவித் தமிழர்;களை ஏவுகணை;களைக் காட்டி அவர்;களை வாங்கத் து}ண்;டி விட்டு அவர்;களை அமெரிக்கா கைது செய்து விட்டு தங்கள் புலனாய்வு வெற்றியாகக் காட்டுகிறது என்று அறிவுக்கொழுந்து ஒன்று கதை அளக்கிறது,

இந்த அளப்பை புலிகளின் ஆதரவாளர்;களைத் தவிர வேறெந்த இளிச்சவாயன் நம்புவான்? எனவே கைது செய்யப்பட்டவர்;கள் அப்பாவிகளாம், அந்த அப்பாவிகள் ஏவுகணை; வாங்கி புலிகளுக்கு அனுப்ப விரும்பினார்;களாம், அவர்;களுக்கும் புலிகளுக்கும் தொடர்;பு இல்லையாம் என்பது தான் அந்த அறிவுக்கொழுந்துவின் வாதம், சரி,, வள்ளிபுனம் தாக்குதல் நடந்து ஓரிரு மாதங்கள், ஆனால் கைது செய்யப்பட்டவர்;களுடன் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு கடந்த நான்கு ஆண்;டுகளாகத் தொடர்;பு வைத்திருந்ததே என்ற கேள்வியைப் புலிகளின் ஆதரவாளர்;கள் கேட்க மாட்டார்;கள் என்பது அந்த அ,கொவுக்கு நன்றாகவே தெரிந்ததால். இழுத்து முழக்கியிருக்கிறது, இந்த வாதத்தை அமெரிக்காவில் இருந்து புலிகளுக்கு அரசியலமைப்பு வரையும் வழக்கறிஞர்; குறித்து வைத்துக் கொள்ளலாம், சந்தேக நபர்;களுக்காக ஆஜராகும் போது இதை ஆதாரமாகவும் காட்டலாம், வ,பி,கோ 304 படி (வன்னி பீனல் கோட்) நீதிபதி உடனடியாகவே அவர்;களை விடுதலை செய்வார்;, இவர்;கள் இதையெல்லாம் தமிழில் தானே எழுதுகிறார்;கள், ஏன் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை அங்கே தானே பிரச்சனை இருக்கிறது, ஆங்கிலத்தில் சம்பூர்; பின்வாங்கல் நோர்;வேயைப் பொறிக்குள் சிக்க வைத்த தந்திரம் என எழுதி விட்டு. நிபந்தனையற்ற பேச்சுக்கு சம்மதம். தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள் என்று நோர்;வேயிடம் மன்றாட முடியுமா?

சமீபத்திய சண்;டை நம்ம ஆய்வாளர்;களுக்கு ஒரே அவல் சப்ளை தான், புலிகள் வாங்கிக் கட்டிக் கொர்;டிருந்த போதெல்லாம் வெற்றிகரமாகப் பின்வாங்கிக் கொர்;டிருக்கிறார்;கள், தலைவர்; நிஷ்டை கலைக்கப் போகிறார்;, கண்டு கலங்கப் போகிறது என்று,,, குடுகுடுப்பைக் காரர்;கள் போல தலைவர்; ஐயாவுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது, அவருடைய எதிரிகள் எல்லாம் அழியப் போகிறார்;கள் என்று உடுக்கு அடித்துக் கொண்;;டிருக்கிறார்;கள்,
எம்,ஜி,ஆர்; தன் ஆஸ்தான வில்லன்களான அசோகன். வீரப்பா. நம்பியார்; போன்றோரிடம் அடி வாங்கும் போது. இன்னாபா. இந்த கட்டையிலே போவான் வாத்தியாரை மொத்துறானே என்று குமுறும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஆறுதல் சொல்ல. மெதுவான சிரிப்புடன் பாருங்கடா. வாத்யார்; குடுக்கப் போறார்; என்று கியூறியஸ் உட்கார்;ந்திருந்த கலரிப் பக்கம் இருந்து. ரசிகர்; மன்றத் தலைவர்; பின்னால் பார்;த்துக் கூவ. காத்திருந்தது போல. உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டு பொங்கி வரும் பகைவர்; கூட்டத்தை வாத்யார்; தனியே துவம்சம் செய்வார்;,,
அதுபோல. துவண்;டு நின்ற ரசிகர்; கூட்டத்தை உற்சாகப்படுத்தி இந்த ஆய்வாளர்; கூட்டம் சமாளிக்க,, தலைவரும் ரத்தத்தை துடைத்து விட்டு பந்தாடி வந்திருக்கிறார்; பகைவர்; கூட்டத்தை,விசிலடி காதைப் பிளக்கிறது, ரசிகர்;கள் கலரியில் இருந்து துள்ளிக் குதிக்கிறார்;கள், முதலாவதாக ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர்; ஆக்கிரமிப்பு நோக்கம் என புதினம் தொடக்கி வைத்திருக்கிறது, இனியென்ன,, இந்த ஆகாசப் புழுகர்;களும்,,
கொக்கென்று நினைத்தாயே கொங்கணவா,, நம்ம தலைவரைமக்கென்று நினைத்தாயோ மகிந்த சிங்களவா,, என்று பரண்p பாடித் தொலைக்கப் போகிறார்;கள்

நன்றி: தாயகம்