Saturday, March 03, 2007

கருணா அம்மான் உடைத்ததால்; மட்டும் அது மண்குடம் ஆகிவிடுமா என்ன ?

கருணா அம்மான் உடைத்ததால்; மட்டும் அது மண்குடம் ஆகிவிடுமா என்ன ? மக்களை நேசிக்கும் அரசியலும், ஆயுதமுமே புலிகளை தோற்கடிக்கும்!

- எஸ். மனோரஞ்சன் -

“எனது பெற்றோர்கள் என்னை புலிகள் இயக்கத்திடம் ஒப்படைக்க மறுத்து விட்டதனால் அவர்கள் பதினைந்து பேர் எங்களின் வீட்டுக்குள் வந்தார்கள். அவர்களில் சீருடை தரித்த ஆண்களும் பெண்களும் கைகளில் றைபிள்களுடனும், இடைப்பட்டிகளில் கட்டப்பட்ட துப்பாக்கிகளோடும் வந்திருந்தனர். என்னை கொண்டு செல்வதற்கு அவர்கள் வந்த, அந்த அதிகாலை நேரம் நான் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன்..... .திடீர் என வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் என்னை தற தறவென்று வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றனர். என்ன செய்கிறீர்கள், என்ன நடக்கிறது இங்கே? என எனது தந்தையார் அவர்களை நோக்கி கத்தினார். ஆனால் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் எனது தந்தையை அருகில் இருந்த புதர்களை நோக்கி இழுத்துச் சென்று அவரை கடுமையாக தாக்கினார்கள் அதை தடுக்க முயன்ற எனது தாயாரை அவர்கள் கீழே தள்ளி விழுத்தினார்கள்.

- 2003 ம் ஆண்டில் தனது 16ம் வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பெண் -
இக் குறிப்பானது, புலிகள் இயக்கத்தின் ஈவிரக்கமற்ற பிள்ளைபிடி செயற்பாட்டை அம்பலப்படுத்தி 2004 டிசம்பரில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (ர்சுறு), வெளியிட்ட அச்சத்துள் வாழ்தல் என்னும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போதும் அதனை


http://www.hrw.org/tamil/reports/2004/lanka111004_full.pdf
என்னும் இணையத் தொடுப்பில் பார்க்கலாம்.
“அவர்கள் எல்லொருமாக 10பேர் மட்டில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரின் சீருடைகளை அணிந்திருந்ததோடு முகங்களையம் மூடிக் கட்டியிருந்தனர். அவர்கள் அணிந்திருந்த சீருடைகளில் பதவித் தராதரங்களைக் காட்டும் சின்னங்களேதும் இருக்கவில்லை. அவர்களில் ஒருவனின் கால்களைப இறுகப் பிடித்து எனது மகனை விட்டுவிடும்படி நான் கெஞ்சினேன். அவன் என்னை முரட்டுத்தனமாக உதைத்துவிட்டான். “நாங்கள் உனது மகனை விசாரிக்கப் போகிறோம் எல்லாம் விசாரித்து முடிந்ததும் விட்டுவிடுவோம், என, அவர்களில் ஒருவன் சொன்னான். அதை அவர்கள் தமிழிலேயெ கூறினார்கள். அவர்கள் அனைவரும் ஆயுதபாணிகளாக ரைபிள் துப்பாக்கிகளுடன் நின்றனர். அவை என்ன வகை என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள்.
- 2006 ஜூன் - நவம்பர் இடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தப்பட்ட ஒரு இளைஞனின் தாய் -
இந்தக் குறிப்பானது, கடந்த வருட நடுப்பகுதியிலிருந்து மட்டக்களப்பில் கருணா குழுவினர் இலங்கை அரசாங்கப் படையினருடன் இணைந்து, சிறார்களை பலவந்தமாகப் பிடிக்கும் நடவடிக்கையை அம்பலப்படுத்தி, அதே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பால் (ர்சுறு)இ கடந்த மாதம் 24ம்தகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதனைப் பார்க்கhttp://www.hrw.org/tamil/reports/2004/lanka111004_full.pdf இந்த இணையத் தொடுப்புக்குச் செல்லவும்.
இந்த இரண்டு குறிப்புக்களில் இருந்தும் சாதாரண தமிழ் மக்களின் நிலைமை என்ன எனபதை நாம் புரிந்து கொள்ளலாம். அதற்கு பாரிய அரசியல் அறிவு வேண்டும் என்பதில்லை. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அவலமே இங்கு சொல்லப்படுகிறது. தமிழரின் ஆயுதப் போராட்டம்; தொடங்கிய காலம் முதல் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் அவலத்தின் தொடர்சியே இது. கிழக்கில் அரசியல் ஆதிக்கத்தை கட்டியெழுப்ப முனையும் கருணாவின் அரசியல் கட்சியானது இப்போதே சரியாக அதற்கான வழிமுறை நெறிமுறைகளை வகுக்காவிட்டால் அந்த மக்கள் முகம் கொடுக்கப் போகும் அடுத்த சுற்று அவலத்தினை எமக்கு மிகத் துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றது இந்தக் குறிப்பு.
கிழக்கில் சிறார்களை புலிகள் மட்டுமல்ல கருணா குழுவினரும் பலவந்தமாக கடத்துகிறார்கள் என்று ஐ.நா. பிரதிநிதி அலன் ரொக் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை விடுத்தார். அதை உறுதிப்படுத்துவது போல் இப்போது ர்சுறுவின் அறிக்கையும் வெளிவந்துள்ளது. அதன் உண்மையை அறிவதற்கு இக்கட்டுரையாளர் கிழக்கில் சில நண்பர்களுடன் தொடர்பு கொண்டார். கிழக்கில் இக்கட்டுரையாளருக்கு இருக்கும் தொடர்புகள் நீண்டகால புலி எதிர்ப்புத் தொடர்புகள்தான். ஆனால், அலன் ரொக் மற்றும் ர்சுறு கூறிய விடயங்கள உண்மை என்பதை அத்தொடர்புகளும் உறுதிசெய்தன. ‘நாங்கள் அதை கண்ணால் காண்கிறோம்’ என்றும் அத்தொடர்புகள் கூறின. கருணா குழுவினரின் இத்;தகையத நடவடிக்கைகள் கிழக்கு மக்களின் அதிருப்தியையே அவர்களுக்கு சம்பாதித்து தரும் என்றும், சிறு பிள்ளைகளைப் பிடிப்பது அரசியல் தார்மீகமாகாது என்றும், அக்கட்சியினருடன் பேசிப்பார்த்து, அவற்றை நிறுத்த முயற்சிக்க முடியாதா? எனக் கேட்டபோது, அவர் மிக விரக்தியுடன் இப்படிச் சொன்னார்..:
“என்னவோ தெரியேல்லை இப்ப மூணு நாலு மாசமா ஆக மூர்க்கமாய் நிக்கிறாங்கள். பெரியாக்களை புடிச்சாலும் பறவாயில்லை, கஷ்டப்பட்ட சின்னப் பிள்ளைகளைப் புடிக்கிறாங்கள். ஆனா பொம்பிளைப் பிள்ளைகளில கை வைக்கேல்ல... போகப்போக எப்படியோ தெரியாது... புலி வளர்த்து விட்டவங்கள்தானே வேற எப்பிடி செய்வாங்கள்.. எங்களுக்கு விடிவில்லைதான் போலயிருக்கு” என்று பெருமூச்சோடு நிறுத்தினார்.

கருணாவுக்கும், கருணா இன்று வகிக்கும் அரசியல் பாத்திரத்தை ஆதரிக்கும் எமக்கும், மேற் சொன்ன கூற்றுக்குள் பெரிய செய்தி காத்துக்கிடக்கின்றது. சில கேள்விகளும் எம் நோக்கி எழுப்பப்படுகிறது. கருணா எதற்காக அரசியல் செய்கிறார்? அவரது கட்சியன் எதிர்காலம் என்ன? நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்? இன்று ஏன் கட்டாயம் அதை ஆதரிக்க வேண்டும்? இவை சில முக்கிய கேள்விகளாகும்.

நீண்ட காலமாக புலிகளின் காட்டுமிராண்டி அரசியலை கடுமையாக விமாசித்தவர்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் கருணா ஆதரவாளர்களாக மாறியவர்கள். கருணா புலிகளில் இருந்த பிரிந்து வந்த நாள்முதல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரது உத்தியோகப் பற்றற்ற பிரச்சாரகர்களாக செயற்படுகிறவர்கள். ஆகவே இன்று கிழக்கு மக்களின் அவலம் தொடர்பாகவும் பதில்சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. அங்கு அவலத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற மக்களைப் பொறுத்தவரை எமது அரசியல் வியாக்கியானங்ள் அhத்தமற்றவை. அவை அந்த மக்களை மேலும் எம்மிது எரிச்சலடையவே செய்யும் என்பதை நாம் புரிந்து கொள்வதும் மிக மிக அவசியமானது.

2004இல் புலிகளின் பிள்ளைபிடி தொடர்பாக அறிக்கைவிட்ட ர்சுறுவை, இலங்கை அரசாங்கத்தின் உளவுப் பிரிவிடம் ர்சுறு விலை போய்விட்டது என்று புலி ஆதரவாளர்கள்; போட்ட கோமாளித்தனமான கூப்பாடையும், குற்றச்சாட்டையும் உலகில் எவரும் ஏற்றுக்கொள்வில்லை. பின்னர் அது அவர்களுக்கே வினையாக வந்து முடிந்தது. அதே போல்தான்; இம்முறை கருணா அணியினரையும் இலங்கை அரசாங்கத்தையும் அம்பலப்படுத்தி அறிக்கை வந்திருக்கிறது. ர்சுறு புலி ஆதரவாளர்களின் சதி வலைக்குள் விழுந்து விட்டது என நாம் கூப்பாடுபோடுவதால் நட்டம் யாருக்கு? நாங்களும் புலி ஆதரவுக் கோமாளிகள் போல் ஆவதில் பயனென்ன?

புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதால் கருணா குழுவினரின் அரசியலை கண்ணை மூடிக்கொண்டு நாம் ஆதரிக்கலாம் என நாம் கருதலாம். அதிலும் குறிப்பாக வெளி நாடுகளுக்கு வந்திருக்கும் நாம் கருதலாம். அப்படியானவர்கள் ஒரு முறை தமது கண்களை மூடிக்கொண்டு, கடத்தப்படும் அந்தப் பிள்ளைகளின் இடங்களில் எங்கள் பிள்ளைகளின் முகங்களையும், நிராதரவாக நிற்கும் அந்த பெற்றோர்களின் இடங்களில் எங்களையும் ஒரே ஒருமுறை நிறுத்திப் பார்த்தோமானால் அந்த அவலமும் வேதனையும் புரியும். அதனைப் பரிந்து கொள்ளும் மனத்துடிப்பு எமக்;கில்லையெனில், நாம் பேசும் ஜனநாயம், மனித உரிமை, மக்கள் அரசியல் என்பவையெல்லாம் வெறும் பம்மாத்துக்களே.

புலி எதிர்புவாதமும் ஒரு பிழைப்பு வாதம் என்று ஒரு குற்றச்சாட்டுண்டு. அக்குற்றச்சாட்டு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பதும் எமக்குத் தெரியும். புலிகள் தவறு, ஆகவே மற்றெல்லாம் சரி, என நாம் வாதிடுவதும் அவற்றை நியாயப்படுத்தவதும் ஒரு காரணம். புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்கள் எமது அரசியலில் மக்களின் நலனை மறந்து போய் நாங்களும் இன்னொரு விதத்தில் ‘குட்டிப் புலி’ அரசியலையே செய்ய முனைவது அடுத்த காரணம். இலங்கையில் இருக்கும்போது ~புலி வருது, புலி வருது, என்றும் புலி எங்களை கொல்ல வருது என்றும் பீதி கிளப்பிவிட்டு, (அதில் உண்மையும் இல்லாமலும் இல்லை) அதையே காரணமாக காட்டி எங்கள் குழந்தை குட்டிகளுடன் வெளிநாடு ஓடிவந்துவிட்டு, வெளி நாடு வந்தவுடன் எமது பிழைப்புக்காக ‘புலிகள் தீண்டத்தகாத சக்திகள் அல்ல, அவங்கள் இருப்தால்தான் மோட்டுச் சிங்களவன் எங்களுக்கு ஏதாவது தருவான்’ என்று கூறித்திரிந்து செய்யும் லீலா வினோதங்கள் மற்றுமொரு காரணம். இப்படிப் பல...
எனவே இன்று நாம் கருணா மீதான விமர்சனங்களை அங்குள்ள தமிழ் மக்களின் நலனில் இருந்தும் பார்க்க வெண்டும். எந்த மக்கள் அன்று புலிகளின் பிள்ளைபிடியைப் பற்றி ர்சுறு விற்கு தகவல் சொன்னார்களோ அதே மக்கள்தான் இம்முறை கருணா குழுவினரைப் பற்றியும் அரசாங்க இராணுவத்தைப் பற்றியும் ர்சுறு விற்கு தகவல் கொடுத்துள்ளனர் என்னும் சாதாரண உண்மை, கருணாவுக்கும் அவரது அணியினருக்கும் அவரை ஆதரிக்கும் எமக்கும் நன்கு தெரியும். அந்த மக்களிடையேதான் கருணா அணியினர் அரசியல் செய்யப் போகின்றனர். அந்த மக்களின் குரலுக்கு அவர்கள் செவிகொடுக்காவிட்டால், அவர்கள் யாராவது ஒருவர் மூலம் தங்கள் குரலை வெளிக்கொணர்ந்தே தீருவர். அதுதான் இங்கே நடந்திருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுவதிலேயே கருணாவின் அரசியல் வெற்றி தங்கியுள்ளது. கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்.
ஆகவே கருணா இன்று கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சில உடனடிப் பிரச்சினைகள் இருக்கினறன.

முதலாவது, சிறார்களை பலவந்தமாகப் பிடிப்பதை உடனடியாக நிறுத்துவது. இரண்டாவது, கட்சிக்கு பணம் தேவை என்பதற்காக தமிழர்களைக் கடத்தி பணம் பறிப்பதை நிறுத்துவது. மூன்றாவது, வுசுழு நபர்களைக் கடத்திய சம்பவத்தில் (இதைக் கருணா குழு செய்திருந்தால்) பிரதானமாக நடந்ததாக கூறப்படும் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் பற்றிய விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது. (பார்க்க : னு.டீ.ளு. ஜெயராஜ் இன் கட்டுரை hவவி:ஃஃவசயளெஉரசசநவெள.உழஅஃவயஅடையையெஃயசஉhiஎநளஃ284 )

இவை மூன்றும் தொடர்பாக கருணா உடனடிக் கவனம் செலுத்தி, அத் தவறுகளை திருத்தாத பட்சத்தில் அவர்களின் அரசியல் அஸ்தமனத்திற்கு இவையே ஆரம்ப படிகளாக அமையப் போகின்றன. கருணாவை நாம் விமர்சிக்கலாமா?தமிழ் அரசியல் சக்திகளால் மட்டுமல்ல, இலங்கை அரசு, இந்திய அரசு எல்லாவற்றுக்குமே தண்ணிகாட்டிய மாபெரும் புலிப்படையின் முதுகெலும்பை தெறிக்க வைத்ததில் கேர்ணல் கருணா என்ற முரளீதரனின் பாத்திரம் மறுக்கப்பட முடியாதது மட்டுமன்றி வரலாற்றில் மறக்கப்படவும் முடியாததாகி, 2004ம் ஆண்டில் அவர் பிரிந்தவுடன் அவரது இராணுவப் படையணி, புலிகளின் மீது பாய்ந்து அதைக் சிதறடிக்க முடியாமல் போனாலும், தாங்கள் யாராலும் அசைக்க முடியாதவர்கள் என புலிகள் காட்டிவந்த பம்மாத்து பயில்வான்தனத்தை, பகிடியாக்கி விட்டவர் கருணா. கிழக்கு மாகாணத்திலிருந்த ஆயிரக்கணக்கான புலி அங்கத்தவர்களை சடாரென உடைத்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பி, தானும் சிலருடன் பட்டென்று பின்வாங்கிய தனது பெரும் யுத்த தந்திரத்தின் மூலமே கருணா இதைச் சாதித்தார் என்பது பெரும் உண்மையாகும்.
கருணாவினால் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையிலேயே பிரபாகரனின் புலிகள் இருக்கின்றனர். கிழக்கைச் சேர்ந்த பல மூத்த புலி உறுப்பினர்கள் ஒத்தாசையாக இருந்தும் வடக்கைச் சேர்ந்த புலிகளின் எந்தத் தளபதியாலும், கருணாவின் மொழியில் சொன்னால், பிரபாகரனின் தொந்தி வளர்ந்த தளபதிகளால் கிழக்கில் தற்போது நின்றுபிடிக்க முடியவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது கருணா புலிகளை விட்டு ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களுடன் பிரிந்தது மட்டுமன்றி, இன்று தனியாக ஒரு படையணியாக நின்று புலிகளுடன் மோதுவது. இரண்டாவது கிழக்கு மக்களின் கணிசமானளவு ஆதரவை வன்னிப் புலிகள் இழந்தது.

கருணாவிடம் புலிகளி;ன் அளவுக்கு பெரும் படையணி இல்லாவிட்டாலும், அவரிடமிருக்கும் சிறு தொகையினரை இறுக்கமாக வழிநடத்தும் திறன் கருணாவுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் அது கருணாவின் பிரதேசம். அங்கு அவர்களால் வன்னிப் புலிகளுக்கு பல இராணுவ வித்தைகளைக் காட்ட முடியும். அது மட்டுமன்றி கருணா இலங்கை அரசாங்கப் படைகளிடம் இருந்து பெறும் ஒத்தாசைகளையும் கொண்டு தனது இராணுவ நடவடிக்கைகளைச் செய்வதால் புலிகளுக்கு கிழக்கில் இனி கஷ்டகாலம்தான். கிழக்கில் அவர்களின் இராணுவ நடவடிக்கைகள், கோயில் ஐயர்மாரைச் சுடும் அளவோடு நிற்க வேண்டியதுதான்.

இவ்வளவு தூரம் புலிககைள பலவீனப்படுத்திய கருணாவையும் அவரோடு நிற்கும் போராளிகளையும் நாம் விமர்சிக்கலாமா? அப்படி விமர்சித்தால் அது வன்னிப் புலிகளை பலப்படுத்தாதா? என்ற கேள்விகள் இப்போது எம்மிடையே கேட்கப்படுகிறது. இவை நியாயமான கேள்விகள்தான். அதனைவிடவும் நியாயமான கேள்வியாக கேட்கப்படுவது என்னவென்றால், புலிகளுக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிவந்து தனி மனிதர்களாக வெளிநாடுகளில் கிடக்கும் நாம், களத்தில் நின்று போராடும் கருணாவை விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது? இதையும் தாண்டிக் கேட்கப்படும் கேள்வி யாதெனில் கிழக்கின் போராட்டத்தை கேள்வி கேட்கும் அருகதை வடக்கைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கிறதா என்பதே?
இவ்வெல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பக்கமான தார்மீக நியாயங்கள் இருப்பதாக நாம் வாதிடலாம். உண்மைதான் ஆனால் அந்த வாதங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அவையாவன....

கருணா புலிகளில் இருந்து பிரிந்து வந்தாலும் அவர் இன்னொரு பிரபாகரன் போலவோ, அவரது குழு பொட்டம்மானினது வழிகாட்டலில் இயங்கும் மோசமான கொலைகாரக் கும்பலைப் போன்ற மற்றொரு கும்பலாகவோ மாறுவதை மனதார விரும்பாதவர்கள் என்ற ஆதங்கத்தில் நாம் கருணாவை மாத்திரமல்ல, நிட்சயமாக விமர்சிக்கலாம்.
கருணாவுக்கும், கருணாவோடு நின்று, இன்று புலிகளை எதிர்த்து போராடும் வீரர்களுக்கும், கருணாவுக்கு ஆதரவு வழங்கும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கும் தமது பிரதேசத்து மக்களைப் பற்றிய அக்கறை உண்டு என்று நாம் நம்பலாம். ஆனால் இன்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கருணாவைப் பயன்படுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கோ, கருணாதான் உண்மையான வீரன் என போற்றும் ஜேவீபி. சிஹல உருமய போன்ற கட்சிகளுக்கோ கிழக்கு மாகாணத் தமிழ், முஸ்லிம் மக்களைப்பற்றியோ அல்லது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் நலன்கள் பற்றியோ சாதகமான திசையில் சிந்திக்கும் அரசியல் கிடையாது.
எனவே இன்று கருணாவின் இருப்பை பாவித்துவிட்டடு, கருணா குழுவினர் விடும் தவறுகளுக்கெல்லாம் ஒத்தாசையாக இருந்து விட்டு, பின்னர் காரியம் முடிந்ததும் கருணாவையம் அவரது குழுவினரையும் கிரிமினல்களாக காட்டி அவர்களைக் கழுவேற்றும் கைங்கரியத்தை அரசாங்கமும் சிங்கள பேரினவாதிகளும் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. (அண்மையில் இலங்கை சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் சிறிபதி சூரியாராச்சியும் அரச தரப்பினரால் கருணா கொல்லப்படலாமென எச்சரித்திருக்கின்றார். பார்க்க :
hவவி:ஃஃறறற.டயமெயநநெறள.உழஅஃநுபெடiளாஃநெறள.pரி?னைஸ்ரீ3775 ) அந்த பாதாளத்தில் விழுவதற்கு கருணாவும் அவரது குழுவினரும் தாங்களே பாதை சமைக்க கூடாது என்கின்ற அக்கறையில் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னிப் புலிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பது உண்மை. கிழக்கில் இருந்து மட்டுமல்ல வடக்கிலிருந்தும், அவர்களும் அவர்களின் பாசிச அரசியலும் களைந்தெறியப்பட வேண்டும். அதில் எவருக்கும் முரண்பாடில்லை. ஆனால் அந்த மூர்க்கமான போராட்டத்தில் கருணா தனது படைபலத்தைப் பெருக்குவதற்காக, பல தசாப்தங்களாக பல பக்கத்தாலும் வஞ்;சிக்கப்பட்டு நொருக்கப்பட்ட கிழக்கு மாகாண வறிய மக்களின் பிள்ளைகளை பலவந்தமாக பிடிப்பதன் மூலம், கருணாவுக்கும் அவரது அரசியலுக்கும் இருக்கக் கூடிய தார்மீக உருத்தையும், அதற்கான மக்கள் பலத்தையும் அவர் இழந்து விடக்கூடாது என்கின்ற அக்கறையில் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

கருணா அந்த மக்களின் ஆதரவை இழந்து அழிந்து போக மீண்;டும் புலிகள் இயக்கத்தின் மோசமான ஆதிக்க வெறிபிடித்த அரசியலும், அந்த இயக்கத்தின கொலைக்கரங்களும் மீண்டும் கிழக்கில் காலூன்றி அந்த மக்களை சின்னாபின்னப் படுத்தும் நிலைமை வந்துவிடக்கூடாது என்கின்ற அக்கறையுடன் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

யாழ்ப்பாண சமூகத்தில் இருந்த சகல நல்லம்சங்களையும் அழித்தொழித்துவிட்டு அதிகார வெறியும்;, அடாவடித்தனமும், வரட்டுக்கௌரவ குணாம்சமும், மற்றவனின் அழிவே தமது வெற்றிக்கான படிகள் என்று நினைக்கும் நயவஞ்சகப் போக்கும் தமிழரின் சமூக அரசியலின் பெரும்போக்காக கோலோச்சுவதால், இன்றுவரை புலிகளுக்கு எதிரான பொதுப் போராட்டத்தில ஐக்கியப்பட்ட மாற்று தமிழ் சக்தியொன்றை கட்ட முடியாமல் வடக்கு சீரழிந்து போய்க் கிடக்கிறது. இந்தத் தருணத்தில் கிழக்கிலாவது அதைச் செய்யக்கூடிய வலுவான ஒரு அரசியல் சக்தியாக வளருவதற்கு வாய்ப்புக்களைக் கொண்டிருக்கும் கருணாவும் அவரது அணியினரும் அவருக்கு ஆதரவான மக்கள் பிரிவினரும் அநியாயமாக சீரழிந்து போய்விடக்கூடாது என்கின்ற அக்கறையுடன் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

கருணாவின் மீதான நம்பிக்கை?

கருணாவை விமர்சிக்கும்போது அந்த விமர்சனங்களுக்கான பலாபலன்கள் வரும் என்ற நம்பிக்கையோடு நாம் விமர்சிக்கிறோம். ஏனெனில் புலிகளை விமர்சித்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எமக்குத் தெரியும். இது பரவலான தமிழ் மக்களுக்கும் தெரியும். புலிகளை அம்பலப்படுத்துவதும், எல்லா விதத்திலும் பலவீனப்படுத்துவதுமே எமது பணி. ஆனால் கருணா குழுவினர் மீதான விமர்சனங்கள் அப்படிப்பட்டதல்ல. அவை கருணாவை பலப்படுத்தும், செழுமைப்படுத்தும் நோக்கில் வைக்கப்படுபவை. அந்த வகையில் கருணாவும் அவரது அணியினரும் அவரது அரசியலை ஆதரிப்பவர்களும் அந்த விமர்சனங்களை நட்பு விமர்சனங்களாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும். கருணாவை அழித்துவிட்டு, அவரினதும் அவரது கட்சியையும் அதன் அரசியலையும் அழித்துவிடும் நோக்கில் நடத்தப்படும் சேறடிப்புக்களை கருணா கவனத்திற் கொள்ள தேவையில்லை. அவற்றின் உள்நோக்கம் யாவரும் அறிந்ததே. அவை பலமுகங்களுடன் வரும், சில வேளை தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களி;ன கருத்து என பல வேஷங்களோடும் வரும். ஆனால் அவற்றின் ஊற்றுமூலங்களைப் பார்த்தால் உள்நோக்கங்களைப் புரிந்து கொள்லாம். ஏனெனில் இவை எல்லாவற்றையும் புலிகள் தமது நாசகார அரசியலுக்காக பாவித்துள்ளார்கள்.
ஆனால் உண்மையிலேயே தமிழ் சமூகத்தில் ஜனநாயமும், உயர் மானுட விழுமியங்களும் தளைக்க வேண்டும் என்ற நோக்கில் செய்றபட்டு பல்வேறு வகையில் இன்னல்களுக்கு முகம் கொடுத்த நபர்களும் சக்திகளும் இன்னமும் எஞ்சியுள்ளன. அந்தப்பணியில் புலிகளின் துப்பாக்கிகளுக்கு முன்னால் பாரிய, ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை அவை சந்தித்தும் உள்ளன. அவர்களிடம் இருந்து கருணாவை நோக்கி வரும் விமர்சனங்களை எப்படி பார்ப்பது என்பது தொடர்பாக கருணாவும் அவர் சார்ந்த அரசியல் அணியும் வித்தியாசமாகவே பார்க்க முயற்சிக்க வேண்டும்.

கருணாமீதும் அவரது கட்சியனர் மீதும் விமர்சனங்களை வைக்கும்போது நாம் சில நம்பிக்கைகளுடனேயே வைக்கலாம். அதற்கு காரணங்களும் உண்டு. அதில் குறிப்பாக கடந்த மூன்று வருட அவரது செயற்பாடுகள் பிரதானமானவை. புலிகளில் இருந்து பிரிந்து சொற்ப காலம் சென்றவுடனேயே கருணா தனது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படையாக வைத்தார். கிழக்கில் ஏனைய தமிழ் முஸ்லிம் அரசியல் சக்திகளுடன் முரண்படாத வகையில் செயற்படுவதற்கான சூழலை உருவாக்குதில் முயற்சி எடுத்து வருகிறார்.

முஸ்லிம் சமூகத்துடன் அடிக்கடி வரும் முரண்பாடான நிலைமைகளில் இயன்றளவு விரைவாக பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான இணக்கப்பாடுகளை காண முயற்சிக்கிறார்.
கடந்த காலத்தில் தான் புலிகளோடு சேர்ந்திருந்து செய்த தவறுகளுக்கு மனம் வருந்துவதாக பகிரங்கமாக கூறுமளவுக்கு பக்குவப்பட்டுள்ளார். (அண்மையில் பீ.பீ.சீ. பேட்டியில்)
ஐ.நா. சபை, ர்சுறுஇ ருNஐஊநுகு ஆகியவை கருணா குழுவினரின் சில செயற்பாடுகள் தொடர்பாக, குறிப்பாக சிறார்களைப் படையில் சேர்ப்பது பற்றி வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, இச்சர்வதேச அமைப்புக்களுடன் உடனடியாக (24 அல்லது 48 மணி நேரத்திற்குள்) தொடர்பு கொண்டு பேசுமளவுக்கு தன்னிடம் அரசியல் நாகரீகமும் தற்றுணிவும் இருப்பதை கருணா வெளிக்காட்டியுள்ளார். (பார்க்க ர்சுறுவின் அண்மைய அறிக்கை)
தனது அமைப்பில் உள்ளவர்கள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மானிட விழுமியங்களுக்கு எதிராக தவறு விடும் பட்சத்தில் அவர்கள் தொடர்பாக எடுக்கும் ஒழுக்க நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை அச்சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கி, அதனை மேலும் செழுமைப்படுத்துவது தொடர்பாக அவ்வமைப்புக்களுடன் பேசிவருகிறார். (பார்க்க ர்சுறுவின் அண்மைய அறிக்கை)
தனது இராணுவ அணிக்கு சமனாக அரசியல் கட்சியையும் ஆரம்பித்து இனிவரும் தேர்தல்களில் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் போட்டியிடுவதற்கும், மக்களின் வாக்குகள் மூலம் அவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்குமான முயற்சியில் இறங்கியுள்ளார்
மேலே சொன்ன இந்த அம்சங்கள் எல்லாவற்றிலும் உடனடியாக நுற்றுக்கு நூறு வீதம் கருணா சரியா செயற்படாவிட்டாலும், கிழக்கின் அரசியலை ஒரு ஜனநாயகப் பண்பு மிக்கதாக கொண்டு செல்வதற்கான அத்திவாரங்களை போடுவதற்கு கருணாவை நாம் உந்த முடியும். கருணாவும் அவரது அரசியல் கட்சியும் மேலும் வலுவாக அந்தத் திசையை நோக்கி பயணிக்கச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கிலும் நம்பிக்கையிலும் நாம் கருணாவை விமர்சிக்கலாம்@ விமர்சிக்க வேண்டும். அதில் தப்பில்லை, அதில் அரசியல் தவறுமில்லை. நாம் கருணாவின் எதிரிகள் அல்ல.

ஜனநாயக சக்திகளின் விமர்சனங்களை உள்வாங்குவது கருணா அணியினருக்கு நிட்சயம் பலம் சேர்ககும்


www.Thenee.com